முக்கிய செய்திகள்

Warning: Invalid argument supplied for foreach() in /home/vmctr24/public_html/wp-content/themes/nanomag/news-ticker.php on line 15

இனி ராம் தான் எல்லா இயக்குநர்களுக்கும் குரு – அமீர் பேச்சு

1109

ராம் இயக்கத்தில் உருவாகி இருக்கும் பேரன்பு படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பேசிய இயக்குநர் அமீர், பாரதிராஜா, கே.எஸ்.ரவிக்குமார் இவர்களை தாண்டி, அனைத்து இயக்குநர்களுக்கும் இனிமேல் ராம் தான் குரு என்றார்.

ராம் இயக்கத்தில் மம்முட்டி – அஞ்சலி – பேபி சாதனா நடிப்பில் உருவாகி இருக்கும் பேரன்பு படத்திற்கு உலக அரங்கில் பாராட்டுக்களும், பல்வேறு விருதுகளும் கிடைத்துள்ளது. இந்த நிலையில், படத்தின் இசை வெளியீட்டு விழா மற்றும் டீசர் வெளியீடு சென்னையில் நேற்று நடந்தது.

இதில் இயக்குநர் ராம், மம்முட்டி, அஞ்சலி, ஆண்ட்ரியா, சித்தார்த், இயக்குநர்கள் பாரதிராஜா, பாலா, சமுத்திரக்கனி, கே.எஸ்.ரவிக்குமார். வெற்றிமாறன், மிஷ்கின், கரு.பழனியப்பன், அமீர் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் அமீர் பேசும் போது,

ஒரு திரைப்படத்திற்கு பெயர் வைக்கும்போது, இயக்குநருடைய குணாதிசயம் வெளியே வரும். எல்லா இயக்குநர்களும் தங்குளுடைய கதைகளை முடிவு செய்த பிறகு தலைப்பை யோசிப்பார்கள். பொதுவாக எல்லா இயக்குநர்களின் படங்களிலும் அவர்களுடைய குணாதிசயம் அல்லது அவர்கள் எதை நோக்கி போகிறார்கள் என்பது அந்த படத்தின் தலைப்பில் இருந்து வரும். உதாரணமாக மிஷ்கின் பிசாசு என்று வைத்திருக்கிறார் அல்லவா, அதுபோல தான். அதை அவரே ஒத்துக் கொள்வார்.

பேரன்பு என்ற தலைப்பை வைக்கும் போதே ஒரு மனிதனுக்குள் இவ்வுளவு பெரிய ஒரு சிந்தனை எப்படி இருக்கமுடியும். நாம் எல்லோருமே கடந்து போயிருப்போம். நாம் அனைவரும் மாற்றுத்திறனாளி ஒருவரை பார்ப்போம். பார்த்துவிட்டு கடந்து போய்விடுவோம். அந்த மாற்றுத்திறனாளியின் பார்வையில் உலகத்தை பார்க்கும் பார்வை, அந்த பெண்ணின் பெற்றோர் இந்த சமூகத்தில் எப்படி போராடிக் கொண்டிருக்கிறார்கள் என்ற பார்வை தான் ராமின் பேரன்பு.

இந்த படத்தை பற்றி நிறைய பேசிவிட்டார்கள். அவ்வுளவு பேச வேண்டியதில்லை என்று நினைக்கிறேன். இவையெல்லாமே ஒரு அனுபவம் தான். அடுத்தவர்களுக்கு இந்த படம் ஒரு ரெபரன்ஸாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை. இந்த படத்தில் தனது பெண்ணிற்கு மாப்பிள்ளை பார்க்கும் காட்சி ஒன்று உள்ளது. இந்திய சினிமாவில் அதுபோன்ற ஒரு காட்சியை யாரும் பார்த்திருக்கமாட்டார்கள். பாரதிராஜா, கே.எஸ்.ரவிக்குமார் இவர்களை தாண்டி, அனைத்து இயக்குநர்களுக்கும் இனிமேல் ராம் தான் குரு. எல்லாவற்றிலும் இந்த படம் முன்மாதிரியாக இருக்கும். நாம் பல இடங்களை புகைப்படத்தில் பார்த்திருப்போம். அதை ஒருநாள் நேரில் பார்க்கும் போது ஏற்படும் உணர்வு தான் பேரன்பு படம்.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *