முக்கிய செய்திகள்

Warning: Invalid argument supplied for foreach() in /home/vmctr24/public_html/wp-content/themes/nanomag/news-ticker.php on line 15

உலகை அச்சுறுத்தும் A-68 பனிப்பாறை

1379

உலகின் மிகப்பெரிய பனிப்பாறையின் செயற்கைக்கோள் புகைப்படங்கள் சர்வதேச ஊடகங்களில் வெளியிடப்பட்டுள்ளது. கடந்த ஜுலை மாதம் ஆரம்பத்தில், அண்டார்டிக்காவின் லார்சன் சி பனிப்பகுதியில் உள்ள உலகின் மிகப்பெரிய பனிப்பாறையில் பாரிய பிளவு ஒன்று ஏற்பட்டிருந்தது.

இந்த நிலையில் அந்த பனிப்பாறையின் பிளவுகள் தொடர்பான செயற்கைக்கோள் புகைப்படங்கள் தற்போது வெளியாகியுள்ளது. A-68 என பெயரிடப்பட்ட பனிப்பாறை, திறந்த கடல் பகுதியை பல ஆண்டுகளாக சுற்றி வளைத்திருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த பனிப்பாறை மிகவும் விசாலமானது. டெலாவேரின் எனப்படும் பகுதி கிட்டத்தட்ட 5.6 எவரெஸ்ட் சிகரத்தின் உயரமாகும். அந்த பனிப்பாறை 5,800 சதுர கிலோமீட்டர் (2,240 சதுர மைல்கள்) அளவைக் கொண்டுள்ளது.

அதன் நீளம், Erie என்ற ஏரியை இரண்டுக்கும் மேற்பட்ட முறை நிரப்ப போதுமானதாக இருக்கும் அல்லது லண்டன் போன்று நான்கு மடங்கு பரப்பளவில் பெரிதாக காணப்படும். அது அண்டார்டிக்காவின் மிகவும் குளிரான நடுப்பகுதியில் இருப்பதால், பனிப்பாறைகளின் தெளிவான புகைப்படங்களை பெற்றுக் கொள்வதற்கு விஞ்ஞானிகள் போராடியுள்ளனார்.

இதனால் அவர்கள் இதுவரை, Sentinel-1போன்ற துருவ செயற்கைக்கோள்களை நம்பியிருப்பதாக குறிப்பிட்டுள்ளனர். தடிமனான மேகத்தின் ஊடாக இருந்து பார்ப்பதற்காக குறித்த விஞ்ஞானிகள் ரேடார் கருவிகளை பயன்படுத்தியுள்ளனர். எனினும், ஜுலை மாதம் இறுதியில் ஒரு சில நாட்கள் தெளிவான வானிலை காணப்பட்டுள்ளது. இதன் மூலம் Deimos -1 , Deimos -2 ஆகிய செயற்கைக்கோள்கள் பயன்படுத்தப்பட்டுள்ளது.

அதற்கமைய கிழக்கு அண்டார்க்டிக் தீபகற்பத்தில் ஒரு தெளிவான, ஒளிக் காட்சி புலப்பட்டுள்ளதாக விஞ்ஞானிகள் குறிப்பிட்டுள்ளனர். இந்த புகைப்படங்களில் மிதக்கும் பனிப்பாறைத் தோற்றம் ஒன்றை தான் அவதானித்ததாக ளுறயளெநய பல்கலைக்கழகத்தின் பனிப்பாறை நிபுணர் தெரிவித்துள்ளார்.

Deimos-1 செயற்கைக்கோள் நடுத்தரத்தை தீர்மானிக்கும் புகைப்படங்களை எடுத்துள்ள நிலையில் Deimos -2 பெரிதாக்கப்பட்ட மற்றும் அதி உயர்ந்த தன்மையை தீர்மானிக்கும் புகைப்படங்களை எடுத்துள்ளது. இந்த நிலையில் வெளியாகியுள்ள புதிய புகைப்படங்களுக்கமைய பிளவுகள் அதிகரித்து வருவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அன்டார்க்டிக் தீபகற்பம் இந்த மாதத்தின் ஆரம்பத்தில் அதன் பகுதியின் 10 சதவிகிதத்தை இழந்துள்ளதாக விஞ்ஞானிகள் வெளியிட்டுள்ள செயற்கைக்கோள் புகைப்படங்கள் மூலம் தெரியவந்துள்ளது.

நிலப்பகுதி மற்றும் உறைந்த நீரின் இடையே பிளவுகள் மேலும் அதிகரிக்கின்றதா என நிபுணர்கள் அன்று முதல் தொடர்ந்து ஆராய்ந்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. பிளவுகள் இன்னும் அதிகரித்து வருகின்றன என்பதை அவர்கள் கண்டுபிடித்துள்ளனர். இந்த நிலைமை தொடர்ந்தால் பனிப்பாறை உடைந்து போகும் சாத்தியம் உள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *