முக்கிய செய்திகள்

Warning: Invalid argument supplied for foreach() in /home/vmctr24/public_html/wp-content/themes/nanomag/news-ticker.php on line 15

உலக பாட்மிண்டன் சாம்பியன்ஷிப்: பி.வி.சிந்து போராடி தோல்வி

1277

உலக பாட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டி கிளாஸ்கோ நகரில் நடைபெற்று வருகிறது. இதில் பெண்களுக்கான பிரிவில் நேற்று நடைபெற்ற இறுதி ஆட்டத்தில் தரவரிசையில் 4-வது இடத்தில் உள்ள இந்திய வீராங்கனையான பி.வி.சிந்துவும், தரவரிசையில் 7-வது இடத்தில் உள்ள ஜப்பான் வீராங்கனை நொசோமி ஒகுஹராவும் மோதினர்.

முதல் செட்டில் இரு வீராங்கனைகளும் விட்டுக்கொடுக்காமல் ஆடினர். மாறி மாறி முன்னிலை பெற்றனர். இறுதியில் இந்த செட்டை 19-21 என்ற புள்ளிக்கணக்கில் சிந்து இழந்தார். 2-வது செட் ஆட்டத்தில் பெரும்பாலான நேரத்தில் சிந்துவே முன்னணியில் இருந்தார். ஆனால் கடைசி நேரத்தில் ஒகுஹரா அவருக்கு நெருக்குதல் கொடுத்தார். இருப்பினும் சுதாரித்துக்கொண்ட சிந்து 22-20 என்ற புள்ளிக்கணக்கில் அந்த செட்டை வென்றார்.

இருவரும் தலா ஒரு செட்டில் வென்றதால் ஆட்டம் பரபரப்பானது. 3-வது செட்டில் மாறி மாறி முன்னிலை பெற்றனர். இறுதியில் ஒகுஹரா 22-20 என்ற புள்ளிக்கணக்கில் 3-வது செட்டை கைப்பற்றினார். இப்போட்டியில் சிந்து 19-21, 22-20, 20-22 என்ற புள்ளிக்கணக்கில் போராடித் தோற்றார். தோற்றபோதிலும் அவருக்கு வெள்ளிப்பதக்கம் கிடைத்தது.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *