BREAKING NEWS
fedbudget-20180227

கனடாவின் அடுத்த நிதி ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

1180

கனடாவின் அடுத்த நிதி ஆண்டுக்கான புதிய வரவு செலவுத் திட்டம், நிதி அமைச்சர் பில் மோர்னியோவினால்(Bill Morneau) இன்று நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

இன்று நாடாளுமன்றில் வரவு செலவுத் திட்டத்தினை முன்வைத்து உரையாற்றிய நிதி அமைச்சர், நாட்டின் அனைத்து நிதி வளங்களும் பொறுப்பான வகையிலேயே செலவிடப்படும் என்பதனை அனைத்து கனேடியர்களுக்கும் உறுதிகூறுவதாக தெரிவித்துள்ளார்.

அத்துடன் தமது முன்னைய முதலீடுகள் நாட்டுக்கு ஏற்கனவே சாதகமான – முன்னேற்றகரமான பொருளதார விளைவுகளை ஏற்படுத்தியுள்ளன எனவும் அவர் குறிப்பிட்டுள்ளது.

அந்த வகையில் கனடாவின் பொருளதாரமானது சிறந்த முறையில், அதிலும் குறிப்பிட்டுச் சொலக்கூடிய அளவுக்கு சிறப்பான முறையில் உள்ளது எனவும் அவர் பெருமிதம் வெளியிட்டுள்ளார்.

இவ்வாறு நாட்டின் பொருளாதாரம் பலமாக உள்ள நிலையில், எமது பொருளாதாரத்தினை இன்னமும் திடப்படுத்தக்கூடிய கடுமையான சவால்களில் கவனம் செலுத்துவது நல்லது என்று நம்புவதாகவும் அவர் கூறியுள்ளார்.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *