BREAKING NEWS
pic

கனா படத்தின் முக்கிய அறிவிப்பை வெளியிட்ட சிவகார்த்திகேயன்

107

சிவகார்த்திகேயன் புரொடக்‌ஷன்ஸ் சார்பில் நடிகர் சிவகார்த்திகேயன் தயாரிக்கும் படம் ‘கனா’. நடிகரும், பாடகர், பாடலாசிரியர் என பன்முகத் திறமைகளை கொண்ட அருண்ராஜா காமராஜ் இயக்குநராக அறிமுகமாகும் இந்த படம் மகளிர் கிரிக்கெட்டை மையப்படுத்தி உருவாகி இருக்கிறது.

நடுத்தர வீட்டுப் பெண் ஒருவர், தேசிய கிரிக்கெட் அணியில் இடம்பிடிப்பதை மையப்படுத்தி இந்த படம் உருவாகி வருவதாக கூறப்படுகிறது. கிரிக்கெட்டை மையப்படுத்தி பல படங்கள் வந்தாலும் பெண் கிரிக்கெட்டை மையப்படுத்தி உருவாகி இருக்கும் முதல் படம் இது.

இப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு சமீபத்தில் முடிந்தது. பின்னணி வேலைகள் மும்முரமாக நடைபெற்று வரும் நிலையில், இப்படத்தின் டீசர் மற்றும் இசையை ஆகஸ்ட் 23ம் தேதி வெளியிட இருப்பதாக சிவகார்த்திகேயன் அறிவித்திருக்கிறார்.

இந்த படத்தில் நாயகியாக ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்திருக்கிறார். அவருக்கு அப்பாவாக சத்யராஜ் நடித்திருக்கிறார். மேலும் இளவரசு, ரமா, அந்தோனி பாக்யராஜ், சவரிமுத்து, ஹலோ கந்தசாமி, முனீஷ்காந்த், நமோ நாராயணன், பாலாஜி வேணுகோபால், பிளேட் சங்கர், அசோக் குமார், குணா, சத்யா. என்.ஜே உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர்.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *