முக்கிய செய்திகள்

Warning: Invalid argument supplied for foreach() in /home/vmctr24/public_html/wp-content/themes/nanomag/news-ticker.php on line 15

காங்கிரஸ் கட்சிக்கு தொடர்புடைய 687 பக்கங்களை ஃபேஸ்புக் நிறுவனம் நீக்கியுள்ளது

616

மக்களவை தேர்தலையொட்டி காங்கிரஸ் கட்சிக்கு தொடர்புடைய 687 பக்கங்களை ஃபேஸ்புக் நிறுவனம் நீக்கியுள்ளது. நாடு முழுவதும், ஏப்ரல் 11 முதல் மே 19 வரை 7 கட்டங்களாக மக்களவை தேர்தல் நடைபெற உள்ளது. இதையடுத்து, தேர்தல் பிரச்சாரம் களைகட்டி உள்ளது. பொது மேடைகள் மட்டுமின்றி, சமூக வலைத்தளங்களிலும் அரசியல் கட்சிகளை ஆதரித்தும், எதிர்த்தும் பிரச்சாரங்கள் செய்யப்படுகின்றன. அந்த வகையில், சுமார் 30 கோடி பயன்பாட்டாளர்களை உடைய பிரபல சமூகவலைதள ஊடகமான ஃபேஸ்புக் நிறுவனம், சர்ச்சைக்குரிய வகையிலான 687 ஃபேஸ்புக் பக்கங்களை முடக்கியுள்ளதாக அறிவித்துள்ளது. இதுகுறித்து, ஃபேஸ்புக் நிறுவனத்தின் இணையப் பாதுகாப்பு கொள்கை வகுக்கும் குழுவின் தலைவரான நாதனைல் க்ளெய்ச்சர் செய்தி, நிறுவனம் ஒன்றுக்கு தொலைபேசி வாயிலாக அளித்த பேட்டியில், காங்கிரஸ் கட்சியின் தகவல் தொழில்நுட்பப் பிரிவோடு தொடர்புடைய தனி நபர்கள் நிர்வகித்து வந்த 687 பேஸ்புக் பக்கங்கள் மற்றும் கணக்குகள், சிஸ்டமேடிக் முறையில் கண்டுபிடிக்கப்பட்டு முடக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். மேலும், இவர்கள் இந்த போலி கணக்குகளைப் பயன்படுத்தி திட்டமிட்டு ஒருங்கிணைந்த விஷமச் செயல்களில் ஈடுபட்டு வந்துள்ளனர். போலிக் கணக்குகள் மூலம் பல்வேறு குழுக்களில் இணைந்து அங்கு தகவல்களைப் பகிர்ந்து கொண்டு அதன் மூலம் தங்கள் பக்கங்களுக்கு ஆட்களை வரவழைத்துள்ளனர். அவர்கள் பெரும்பாலும் உள்ளூர் செய்திகள், அரசியல் செய்திகள், குறிப்பாக மக்களவைத் தேர்தல் தொடர்பான செய்திகள், வேட்பாளர்கள் பற்றிய கருத்துக்கள், காங்கிரஸ் கட்சியின் பார்வைகள், எதிர்க்கட்சிகள் குறிப்பாக பாஜக மீதான விமர்சனங்கள் ஆகியவற்றைத்தான் பகிர்ந்துள்ளார்கள். அவர்கள் தங்கள் அடையாளங்களை மறைக்க முயன்றாலும், எங்ககளது ஆய்வின் மூலம் அவர்கள் காங்கிரஸ் கட்சியின் தகவல் தொழில்நுட்பப் பிரிவோடு தொடர்புடையவர்கள் என்பது தெரிய வந்துள்ளது என்று தெரிவித்துள்ளார். 2019 தேர்தலில் சமூக வலைதளங்கள் முக்கிய பங்கு வகிக்கும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டது. இந்த நிலை காங்கிரஸ் கட்சியின் 687 பக்கங்களை ஃபேஸ்புக் நிறுவனம் முடக்கியுள்ளது.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *