முக்கிய செய்திகள்

Warning: Invalid argument supplied for foreach() in /home/vmctr24/public_html/wp-content/themes/nanomag/news-ticker.php on line 15

கிழக்கிலங்கை அம்பாறை மாவட்டத்தில் வீரமுனை என்னும் கிராமத்தில் 400க்கும் மேற்பட்ட தமிழ் மக்கள் படுகொலை செய்யப்பட்ட நாளின் 26 ஆம் ஆண்டு நினைவு நாள்

1228

1990 ஆகஸ்ட் 12 – கிழக்கிலங்கை அம்பாறை மாவட்டத்தில் வீரமுனை என்னும் கிராமத்தில் 400க்கும் மேற்பட்ட தமிழ் மக்கள் படுகொலை செய்யப்பட்ட நாளின் 26 ஆம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்.
சம்மாந்துறை பிரதேசத்தில் நிகழ்ந்த இன வன்செயல் காரணமாக வீரமுனையையும் அதன் சுற்றுவட்டக் கிராமங்களான வீரச்சோலை, மல்லிகைத்தீவு, மல்வத்தை, வளத்தாப்பிட்டி, சொறிக்கல்முனை, அம்பாறை பகுதிகளைச்சேர்ந்த பல நூற்றுக்கணக்கான மக்கள் தங்கள் குழந்தைகளுடன் வீரமுனை சிந்தா யாத்திரைப் பிள்ளையார் கோயில் வளவினுள்ளும் வீரமுனை இராமகிருட்டிண மிசன் பாடசாலை வளவினுள்ளும் 1990 சூன் மாதம் முதல் சூலை மாதம் வரை தஞ்சம் புகுந்திருந்தனர்.
இக்காலகட்டத்தில், ஆகஸ்ட் 12 ம் நாளன்று இவற்றினுள் புகுந்த (சிறிலங்கா இராணுவப்படை மற்றும் ) ஊர்காவல்படைக் கும்பல் ஒன்று 400க்கும் அதிகமான தமிழ் மக்களை சுட்டும் வெட்டியும் தாக்கினர்.
ஊர்காவல் படையினரில் தமிழ் சிங்களம் பேசும் இஸ்லாமிய மதம் பின்பற்றி கொண்டு தமிழர்களை அழிக்க துடித்த காடையர்களும் பலராக இருந்தார்கள்.
இவர்களில் பெண்கள், குழந்தைகள் உட்பட 55 தமிழ் மக்கள் கொல்லப்பட்டனர்.
அதிகமானோர் படுகாயமுற்றனர்.
அவ்வேளையில் கடத்தப்பட்டோர் பற்றி எவ்விதத் தகவலும் இதுவரையில் இல்லை.
இந்த படுகொலை குறித்து எந்த விசாரணையும் கூட இதுவரையில் இல்லை. நடந்தது இனப்படுகொலை என அறிந்தும் உலகம் இது பற்றி பேசவில்லை. மனிதம் உள்ள மனிதர்களே நீங்களும் மறந்து போவீர்களோ?




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *