முக்கிய செய்திகள்

Warning: Invalid argument supplied for foreach() in /home/vmctr24/public_html/wp-content/themes/nanomag/news-ticker.php on line 15

ஜெனிவா தீர்மான அமுலாக்கம் குறித்து 36 ஆவது கூட்டத்தொடரில் கேள்வி எழுப்பத் தயாராகும் அமைப்புகள்!

1268

ஐக்­கிய நாடுகள் மனித உரிமை பேர­வையின் 36 ஆவது கூட்டத் தொடர் அடுத்­த­மாதம் 11 ஆம்­ தி­க­தி­யி­லி­ருந்து 29 ஆம்­ தி­க­தி­வரை நடை­பெ­ற­வுள்ள நிலையில் இலங்கை குறித்து எந்­த­வொரு விட­யமும் கலந்­து­ரை­யா­டப்­ப­ட­மாட்­டாது என எதிர்­பார்க்­கப்­ப­டு­கி­றது. எனினும் சர்­வ­தேச மனித உரிமை அமைப்­புக்கள் மற்றும் அரச சார்­பற்ற நிறு­வ­னங்கள் ஜெனிவா பிரே­ர­ணையின் அமு­லாக்கம் தொடர்பில் இம்­மு­றையும் ஜெனிவா கூட்டத் தொடரில் கேள்வி எழுப்­பு­ம் என தெரி­விக்­கப்­ப­டு­கி­றது.இம்­முறை கூட்டத் தொடரில் இலங்கை தொடர்­பான எந்­த­வொரு விட­யமும் இடம்­பெ­று­வ­தற்­கான சாத்­தி­ய­மில்லை. காரணம் இலங்கை ஐக்­கி­ய­நா­டுகள் மனித உரிமை பேர­வையின் பிரே­ர­ணையை எவ்­வாறு நிறை­வேற்­று­கி­றது என்­பது தொடர்­பான இடைக்­கால அறிக்கை அடுத்­த­வ­ருடம் மார்ச் மாதம் நடை­பெ­ற­வுள்ள 37 ஆவது கூட்டத் தொட­ரி­லேயே சமர்ப்­பிக்­கப்­ப­ட­வுள்­ளது. அந்த வகையில் 36 ஆவது கூட்டத் தொடரில் இலங்கை தொடர்­பான எந்­த­வொரு விட­யமும் விவா­தத்­திற்கு எடுத்­துக்­கொள்­ளப்­ப­ட­மாட்­டாது.

கடந்த மார்ச் மாதம் நடை­பெற்ற ஐக்­கிய நாடுகள் மனித உரிமை பேர­வையின் 34ஆவது கூட்­டத்­தொடர் இலங்கை தொடர்­பாக ஒரு பிரே­ரணை நிறை­வேற்­றப்­பட்­டது. அதா­வது 2015 ஆம் ஆண்டு இலங்கை குறித்து நிறை­வேற்­றப்­பட்ட பிரே­ர­ணையை அமுல்­ப­டுத்­து­வ­தற்கு மேலும் இரண்­டு­வ­ரு­ட­கால அவ­காசம் வழங்கும் வகை­யி­லேயே இம்­முறை மார்ச் மாத பிரே­ரணை நிறை­வேற்­றப்­பட்­டது. அதன்­படி இந்த இரண்டு வரு­ட­கால அவ­கா­சத்தில் இலங்கை எவ்­வாறு பிரே­ர­ணையை அமுல்­ப­டுத்­து­கி­றது என்­பது தொடர்பில் இடைக்­கால அறிக்­கையை அடுத்­த­வ­ருடம் மார்ச் மாதம் நடை­பெ­ற­வுள்ள ஜெனிவா மனித உரிமை பேர­வையின் 37 ஆவது கூட்டத் தொடரில் முன்­வைக்க வேண்டும்.

அதன்­பின்னர் 2019 ஆம் ஆண்டு மார்ச் மாதம் நடை­பெ­ற­வுள்ள ஐ.நா. மனித உரிமை பேர­வையின் 40 ஆவது கூட்டத் தொடரில் இலங்கை இரண்­டு­வ­ரு­ட­கால அவ­கா­சத்தில் ஜெனிவா பிரே­ர­ணையை முழு­மை­யாக அமுல்­ப­டுத்­தி­யதா என்­பது தொடர்­பான இறுதி அறிக்­கையை சமர்ப்­பிக்­க­வேண்டும். இதன்­போது இலங்­கையும் ஒரு பரந்­து­பட்ட அறிக்­கையை ஜெனிவா மனித உரிமை பேர­வைக்கு சமர்ப்­பிக்கும் என எதிர்­பார்க்­கப்­ப­டு­கி­றது. அதே­போன்று ஐ.நா. மனிதவுரிமை அலு­வ­ல­கமும் இலங்கை தொடர்­பாக ஒரு பரந்­து­பட்ட அறிக்­கையை முன்­வைக்கும் என எதிர்­பார்க்­கப்­ப­டு­கி­றது.

மேலும் மனி­தா­பி­மான நிறு­வ­னங்­களும் சர்­வ­தேச அர­ச­சார்­பற்ற நிறு­வ­னங்­க­ளும் இலங்கை தொடர்பில் அறிக்­கை­களை தாக்கல் செய்யும் என தெரி­விக்­கப்­ப­டு­கி­றது. அதன்­படி அர­சாங்­க­மா­னது 2019 ஆம் ஆண்டு மார்ச் மாதத்­திற்குள் ஜெனிவா பிரே­ரணையை அமுல்­ப­டுத்­து­வ­தற்கு நட­வ­டிக்கை எடுக்­க­வேண்டும். குறிப்­பாக வெளி­நாட்டு நீதி­ப­தி­களின் பங்­கேற்­புடன் விசா­ரணை பொறி­முறை ஒன்றை உரு­வாக்கி பொறுப்­புக்­கூ­றலை முன்­னெ­டுக்­க­வேண்டும். அதில் பாதிக்­கப்­பட்ட மக்­க­ளுக்கு நீதி நிலை­நாட்­டப்­ப­ட­வேண்டும்.

அது­மட்­டு­மன்றி உண்­மையைக் கண்­ட­றிதல், நட்­ட­ஈ­டு­வ­ழங்­குதல், நீதியை நிலை­நாட்­டுதல் மற்றும் மீள் நிக­ழா­மையை உறுதி செய்தல். ஆகிய நான்கு விட­யங்­களின் அடிப்­ப­டையில் பொறுப்­புக்­கூ­றலை முன்­னெ­டுப்­ப­தாக அர­சாங்கம் உறு­தி­ய­ளித்­தி­ருக்­கி­றது. எப்­ப­டி­யி­ருப்­பினும் உண்­மையைக் கண்­ட­றியும் பிரிவின் கீழ் தற்­போது அர­சாங்கம் காணா­மல்­போனோர் தொடர்­பாக ஆராயும் அலு­வ­ல­கத்தை அமைத்­தி­ருக்­கி­றது. விரைவில் உண்­மையைக் கண்­ட­றியும் ஆணைக்­குழு ஒன்று நிறு­வப்­படும் எனத் தெரி­விக்­கப்­ப­டு­கி­றது.

தென்­னா­பி­ரிக்­காவில் முன்­னெ­டுக்­கப்­பட்ட உண்­மையைக் கண்­ட­றியும் ஆணைக்­குழு தொடர்­பான அனு­ப­வங்­க­ளையும் பெற்று இலங்­கையில் ஒரு ஆணைக்­கு­ழுவை அமைக்க நட­வ­டிக்கை எடுக்­கப்­ப­டு­மென அர­சாங்கம் தெரி­வித்து வரு­கி­றது. இதே­வேளை, கடந்­த­மாதம் இலங்­கைக்கு விஜயம் செய்த ஐக்­கி­ய­நா­டு­களின் பயங்­க­ர­வா­தத்­திற்­கான நட­வ­டிக்கை மற்றும் மனித உரிமை விவ­கா­ரங்­க­ளுக்­கான விசேட நிபுணர் பென் எமர்சன் கடும் விமர்­ச­னங்­களை முன்­வைத்­து­விட்டு சென்­றி­ருந்தார். அதா­வது பொறுப்­புக்­கூறல் செயற்­பாட்டில் எவ்­வி­த­மான முன்­னேற்­றத்­தையும் காண­மு­டி­ய­வில்லை என்றும் அந்த செயற்­பா­டுகள் ஒரு இடத் தில் நிறுத்தி வைக்­கப்­பட்­டுள்­ள­தா­கவே தெரி­வ­தா­கவும் அவர் கூறி­யி­ருந்தார்.

அது­மட்­டு­மன்றி இலங்கை அர­சாங்கம் குறித்த கால அவ­கா­சத்­திற்குள் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதியை வழங்காவிடின் இலங்கை விவகாரம் மனித உரிமை பேரவையிலிருந்து ஐ.நா. பாதுகாப்பு சபைக்கு செல்லும் சாத்தியம் இருப்பதாகவும் சர்வதேசத்தின் பொறுமைக்கும் ஒரு எல்லை உண்டு என்றும் கூறியிருந்தார். அவரின் இலங்கை விஜயம் தொடர்பான அறிக்கையையும் எதிர்வரும் மார்ச் மாதம் ஜெனிவா மனித உரிமை பேரவையில் சமர்ப்பிக்கவுள்ளார். அந்தவகையில் அடுத்த வருட மார்ச் மாதக் கூட்டத் தொடரில் இலங்கை தொடர்பாக பல்வேறு அறிக்கைகள் தாக்கல் செய்யப்படவுள்ளன.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *