BREAKING NEWS
thalaai

தலாய்லாமாவின் கருத்தால் அஸ்கிரிய பீடம் விசனம்!

55

ரோஹிங்கிய முஸ்லிம்கள் தொடர்பான பிரச்சினையின் போதும் அவர் பௌத்தர்களுக்கு எதிரான கருத்துக்களையே வெளியிட்டார். அதேபோன்று தான் தற்போதும் ஞானரத்ன தேரரின் உரை குறித்த முழு விபரங்களையும் அறிந்துகொள்ளாமல் இதுகுறித்து பி.பி.சி நேர்காணலில் கருத்துரைத் திருக்கிறார். மதத்தலைவர்கள் என்ற அடிப்படையில் இவை தொடர்பில் நாங்கள் அதிகம் பேசுவது பொருத்தமாக இருக்காது என அஸ்கிரிய பீட அனுநாயக்கர் மதகம ஸ்ரீ தம்மானந்த தேரர் தெரிவித்துள்ளார்.

இது குறித்து திபெத்திய பௌத்த ஆன்மிகத் தலைவர் தலாய்லாமா பி.பி.சி செய்திச்சேவைக்கு வழங்கிய செவ்வியொன்றில் தனது கண்டனத்தை வெளியிட்டிருந்தார்.

அஸ்கிரிய பீடத்தின் மகாநாயக்க தேரரான வரகாகொட ஸ்ரீ ஞானரத்ன தேரர் முஸ்லிம்கள் தொடர்பில் வெளியிட்ட கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது. ‘முஸ்லிம்களின் கடைகள், வர்த்தக நிலையங்களுக்குச் செல்ல வேண்டாம். அந்தக் கடைகளில் உணவருந்த வேண்டாம். அவர்கள் எம்முடைய சமூகத்தை அழிப்பதை நோக்காகக் கொண்டு செயற்படுகிறார்கள் என்பது வெளிப்பட்டிருக்கிறது. ஆகையால் பௌத்தர்கள் கவனமாக பாதுகாப்புடன் செயற்பட வேண்டும். மேலும் கருக்கலைப்பு செய்த வைத்தியரை கல்லால் அடித்துக்கொல்ல வேண்டும் என்று கூறுகிறார்கள். நான் அவ்வாறு கூறமாட்டேன், ஆனால் அதைத் தான் செய்ய வேண்டும்’ என அவர் தெரிவித்துள்ளார்.

‘இன, மதங்களுக்கு இடையிலான நல்லிணக்கத்தை வலுப்படுத்துவதற்காகத் தன்னை முழுமையாக அர்ப்பணித் திருக்கின்ற ஒருவர் இத்தகைய கருத்துக்களைக் கூறுவதென்பது முற்றிலும் தவறானதாகும். நாம் ஏனைய பிற சம்பிரதாயங்களுக்கு மதிப்பளிக்க வேண்டும். சமய நம்பிக்கைக்கும், கௌரவத்திற்கும் இடையிலான வேறுபாட்டைப் புரிந்துகொள்ள வேண்டும்’ என்று தலாய்லாமா சுட்டிக்காட்டினார்.

இவை தொடர்பில் அஸ்கிரிய பீடத்தின் நிலைப்பாட்டை வினவிய போதே தம்மானந்த தேரர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

ஞானரத்ன தேரரின் கருத்து குறித்தவொரு தருணத்தில் கூறப்பட்டதாகும். அந்த உரையின் ஆரம்பத்தில் அவர் ஐக்கிய தேசியக்கட்சி தொடர்பிலும், பஷில் ராஜபக்ஷ குறித்தும் கூட கருத்துக்களை வெளியிட்டார்.

தலாய்லாமா சீனாவிலிருந்து பிரிந்து தற்போது இந்தியாவிலேயே வாழ்கிறார். அவருக்கு அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளின் மத்தியில் பாரிய செல்வாக்கு இருக்கின்றது. அந்த செல்வாக்கு அவர் பௌத்த மதத்தலைவர் என்பதை அடிப்படையாகக் கொண்டதல்ல. மாறாக சீனாவிற்கு எதிராக அவரைப் பயன்படுத்த முடியும் என்ற நோக்கத்திலேயே சீன எதிர்ப்பு நாடுகள் அவருடன் நெருக்கத்தைப் பேணிவருகின்றன.

எனவே அவர் வெளியிடுகின்ற கருத்துக்களும் பெரும்பாலும் மேற்குலக நாடுகளின் கருத்துக்களை அடிப்படையாகக் கொண்டவையாகவே அமைந்திருக்கின்றன.

ரோஹிங்கிய முஸ்லிம்கள் தொடர்பான பிரச்சினையின் போதும் அவர் பௌத்தர்களுக்கு எதிரான கருத்துக்களையே வெளியிட்டார். அதேபோன்று தான் தற்போதும் ஞானரத்ன தேரரின் உரை குறித்த முழு விபரங்களையும் அறிந்துகொள்ளாமல் இதுகுறித்து பி.பி.சி நேர்காணலில் கருத்துரைத் திருக்கிறார். மதத்தலைவர்கள் என்ற அடிப்படையில் இவை தொடர்பில் நாங்கள் அதிகம் பேசுவது பொருத்தமாக இருக்காது என்று கருதுகிறேன்.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *