BREAKING NEWS
karunanidhi-750x506

திராவிட முன்னேற்றக் கழத்தின் தலைவர் கருணாநிதியின் உடல்நிலையில் பின்னடைவு ஏற்பட்டுள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது

110

திராவிட முன்னேற்றக் கழத்தின் தலைவர் கருணாநிதியின் உடல்நிலையில் பின்னடைவு ஏற்பட்டுள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ள நிலையில், பெருமளவான கட்சித் தொண்டர்கள் காவேரி மருத்துவமனை முன் குவிந்துள்ளனர்.

காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அவருக்கு சிறப்பு மருத்துவக் குழுவினர் தீவிர சிகிச்சை அளித்து வரும் நிலையில், வயதின் காரணமாக அவரின் உடல் உறுப்புகள் சீராக செயல்பட சிகிச்சை அளிப்பது சவாலாக உள்ளதாக தெரிவித்து மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

அத்துடன் அடுத்த 24 மணி நேரத்திற்கு, அவருக்கு அளிக்கப்படும் சிகிச்சைக்கு அவர் உடல் தரும் ஒத்துழைப்பை வைத்தே அவரது உடல்நிலை குறித்து கூற இயலும் என்றும் குறித்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

கருணாநிதியின் உடல்நலனில் பின்னடைவு ஏற்பட்டுள்ள நிலையில் மத்திய அமைச்சர் நிதின் கட்கரி மருத்துவமனைக்கு சென்று கருணாநிதியின் உடலநலம் குறித்து விசாரித்து்ளளார்.

முன்னதாக, 10வது நாளாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் கருணாநிதியை நேரில் பார்க்க அவரது மனைவி தயாளு அம்மாளும் காவேரி மருத்துவமனைக்கு இன்று சென்றிருந்தார்.

திராவிடர் கழக தலைவர் கி .வீரமணி ,பேராசிரியர் அன்பழகன், ஆற்காடு வீராசாமி உள்ளிட்ட கட்சியின் முக்கிய நிர்வாகிகள் மற்றும் முன்னாள் அமைச்சர்களும் மருத்துவமனைக்கு சென்றுள்ளனர்.

காவேரி மருத்துவமனையை நோக்கி கட்சித் தொண்டர்களும் படையெடுத்தவண்ணம் உள்ளமையால் அங்கு மிகுந்த நெரிசல் நிலவுவதாக தெரிவிக்க்பபடுகிறது.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *