BREAKING NEWS
cv-vigneswaran1_mini-720x480

நீதியரசர் க.வி.விக்னேஸ்வரன் முதலமைச்சர் வடமாகாணம்

1090

நீதியரசர் க.வி.விக்னேஸ்வரன்
முதலமைச்சர்
வடமாகாணம்
வாராந்த கேள்வி – நல்லிணக்கம் என்றும் நல்லாட்சி என்றும் மறப்போம் மன்னிப்போம் என்றும் கூறுகின்ற தலைமைகைள் உரிமை என்ற ஒன்றுக்காய் திருவோடு திருவோடு ஏந்தி நிற்கின்றன. உண்மையிலே தமிழ் சிங்கள இனங்களுக்கிடையில் நல்லிணக்கம் என்பது சாத்தியமான ஒன்றா? அதை முதலில் ஏற்படுத்த வேண்டியவர்கள் யார? மதிப்பிற்குரிய முதலமைச்சர் அவர்களே இந்த இடத்தில் இன்னொரு விடயத்தினையும் சுட்டிக்காட்ட வேண்டும். நல்லிணக்கம் என்றும் இணக்கப்பாடு என்றும் இருக்கின்ற அதிகாரங்களைக் கூட தமிழர் தரப்பு இந்துகொண்டிருக்கின்றது. ஆனால் சிங்கள ஆட்சியாளர்களைப் பொறுத்த வரை அவர்கள் நல்லிணக்கத்திற்கான சமிக்கைகளைக்கூடக் காட்டவில்லை. அப்படி அவர்கள் உண்மையிலே நல்லிணக்கத்தை விரும்புகின்றவர்களாக இருந்தால் குறைந்த பட்சம் அரசியல் கைதிகள் அனைவரையும் நிபந்தனைகள் ஏதுமின்றி விடுதலை செய்திருக்க வேண்டும். எனவே இன்றைய இளைய சமுதாயம் பயணிக்க வேண்டிய பாதை எது? அவர்களுக்கு நீங்கள் கூற விரும்புவது என்ன?
பதில் – பல கேள்விகளை ஒன்றிணைத்துள்ளீர்கள். அவற்றை முதலில் பிரித்தெடுத்து குறிப்பிடுகின்றேன்.
1. தமிழ்த் தலைமைகள் உரிமைக்காகத் திருவோடு ஏந்தும் நிலை பற்றிய என் கருத்து
2. நல்லிணக்கம் சாத்தியமா?
3. அதனை ஏற்படுத்த வேண்டியது யார்?
4. இருப்பதையும் இழந்து வருகின்றோம்
5. பெரும்பான்மையின ஆட்சியாளர்கள் நல்லிணக்கத்திற்கான நடவடிக்கைகள் எதனையும் எடுக்கவில்லை.
6. மனம் இருந்தால் நல்லிணக்கம் கருதி அரசியல் கைதிகள் அனைவரும் விடுவிக்கப்பட்டிருபார்கள்.
7. இளைய சமுதாயம் பயணிக்க வேண்டிய பாதை என்ன?
இவற்றை இந்த ஒழுங்கில் பரிசீலிக்காமல் வேறு ஒழுங்கில் எடுத்துக் கொள்வோம்.
ய) நல்லிணக்கம் சாத்தியமா?
பதில் – சாத்தியம். 1956க்கு முன் சாத்தியமாக இருந்தது. இனியும் சாத்தியமே. அதற்கு தடையாக இருப்பது எமது அரசியல்வாதிகள் விதைத்துள்ள நச்சு விதைகளும் அவற்றின் வளர்ச்சியுமே. ஆகவே நச்சுச் செடியை முதலில் வெட்டி எறிய வேண்டும். அது அவ்வளவு இலேசான காரியமல்ல. நச்சுச் செடியின் இலைகளையே தமது நாளாந்த உணவுடன் சேர்த்து உட்கொண்டு வருகின்றார்கள். செடியைத் தொட சிலர் விடமாட்டார்கள்.

சிங்கள மக்கள் பொதுவாக நல்லவர்கள். வெளிநாட்டுப் பிரயாணிகள் இதனை மேலும் மேலும் கூறியுள்ளார்கள். ஆனால் உணர்ச்சிவசப்படக்கூடியவர்கள். “உண்பிர் வெறிப்பீர் மகிழ்வுடன் கொண்டாடுவீர்” என்று போர்த்துக்கேயர் சொல்லிச் சென்ற பாங்கிலேயே அவர்களுள் பெரும்பான்மையோர் தம் வாழ்க்கை முறையை அமைத்துள்ளார்கள். ஆகவே அவர்கள் விரைவில் மறக்கக் கூடியவர்கள். மகிழ்வாய் வாழ்வதை வரவேற்பவர்கள்.

அவர்களுடன் நல்லிணக்கம் ஏற்படுவதற்குச் சூழல் சரிபட்டு வரவேண்டும். நாங்கள் சரித்திர காலத்திற்கு முன்னர் இருந்தே தமிழினம் பூர்வீக குடிகளாக இங்கு வாழ்ந்து வந்துள்ளார்கள் என்று நம்பியிருக்கின்றோம். இன்றிருக்கும் வரலாற்று அடிப்படையில் அதுதான் உண்மை. ஆனால் சிங்களவர் மனதில் விதிக்கப்பட்டதோ தமிழர்கள் கி.பி 10ம் நூற்றாண்டிலேயே சோழர் காலத்தின் போது இங்கு வந்து சிங்களவரை விரட்டிவிட்டு வடகிழக்கை ஆக்கிரமித்தார்கள் என்பதே. அந்த அடிப்படையில்த்தான் பல நடவடிக்கைகள் அவர்களால் எடுக்கப்பட்டு வருகின்றன. ஜம்புகஸ்பட்டுன என்று மாதகலுக்குப் பெயர் வைத்து சங்கமித்தை வந்திறங்கிய இடம் அதுவே என்றும் சிங்கள மக்கள் மகிந்த தேரரையும் சங்கமித்தையையும் வரவேற்ற இடம் மாதகல் கரையோரமே என்று கூறி பாரிய பௌத்த ஆலயம் ஒன்றினை படையினர் துணைகொண்டு அங்கு அமைத்துள்ளார்கள். அங்கிருக்கும் சகல விளம்பரப் பலகைகளும் தனிச் சிங்கள மொழியிலேயே பொறிக்கப்பட்டுள்ளன. இதன் காரணத்தைப் பரிசீலித்துப் பார்த்தேன்;. சிங்களவருக்கு ஊட்டப்பட்டுள்ள வரலாற்றை மற்றவர்கள் (தமிழர்களும் பிறமொழி பேசுபவர்களும்) அறியாதிருக்க வேண்டும் என்பதாலேயே இவ்வாறு தனிச்சிங்களத்தில் தமிழ்பேசும் எமது மாகாணத்தின் வரையறைக்குள் பிறழ்வான வரலாற்றைப் பொறித்துள்ளார்கள் என்ற முடிவுக்கு வரக்கூடியதாக இருக்கின்றது.

இந்த நிலையில் நாங்கள் என்ன செய்ய வேண்டும்? எமது அறிவுக்கு எட்டிய உண்மையான வரலாற்றை சிங்களவர் மத்தியில் முன்னிலைப்படுத்துவதே எமது தலையாய காரியமாகத் தெரிகின்றது. சிங்கள மக்கள் மத்தியில் இருக்கும் பிழையான வரலாற்றறிவும் தமிழர்கள் பற்றி கிளப்பி விடப்பட்டிருக்கும் துவே~ எண்ணங்களும் நீக்கப்பட வேண்டும்;. இதற்குச் சிகிச்சை அளிக்கும் விதத்திலேயே அண்மையில் சிங்கள மக்கள் வாய்பிளக்கும் விதத்தில் உண்மைகள் சிலவற்றை அவர்கள் மத்தியில் விதைத்துள்ளேன். ஒன்று தேவநம்பிய தீசன் சிங்களவர் அல்ல என்பது. இரண்டு சிங்கள மொழி உருவானது கி.பி. 6ம், 7ம் நூற்றாண்டுகளிலேயே என்பது. இந்த அடிப்படையில் நான் கூறாமல் கூறியது துட்கைமுனு சிங்களவர் அல்ல என்பதை! அவன் வாழ்ந்த காலம் சிங்கள மொழி பிறக்க பல நூற்றாண்டுகளுக்கு முன்னராகும். சரித்திர ரீதியாகப் பார்க்கும் போது “ஆரியர்” என்ற பதம் ஒரு தனி இனத்தைக் குறிப்பிடுவதாக இல்லை என்றும் வெளியில் இருந்து வந்தவர்களையே ஆரியர்கள் என்று அழைத்ததையும் சரித்திர ஆசிரியர்கள் சுட்டிக்காட்டியுள்ளார்கள். ஆகவே மகாவம்சம் பௌத்த மதத்தை முன்னிலைப்படுத்த எழுதப்பட்ட ஒரு கற்பனைக் கதையே என்பதை வெளிப்படுத்தியுள்ளேன்;. மகாவம்சம் எழுதப்படும்போது சிங்கள மொழி வழக்கிற்கு வரவில்லை என்பதையும் பாளி மொழியிலேயே அந்நூல் எழுதப்பட்டதென்பதையும் எடுத்துக்காட்டியுள்ளேன். சில ஆங்கிலப் பத்திரிகைகளிலும் இணையத்தளங்களிலும் இது சர்ச்சைக்கு உட்படுத்தப்பட்டுள்ளன. என்னைப் பைத்தியம் என்று கூட சில சிங்கள சகோதரர்கள் வெறுப்புடன் அழைத்துள்ளார்கள். இதற்குக் காரணம் அவர்கள் மனதில் ஆழ வேர் விடடிருக்கும் அந்த நச்சுச் செடியே.

இதுகாரும் இன்னார்தான் எமது பெற்றோர் என்று நினைத்து வாழ்ந்தவர்களுக்கு வேறு ஒரு அம்மாவையும் அப்பாவையுங் காட்டி இவர்கள்தான் உங்கள் உண்மையான பெற்றோர்கள் என்று கூறும்போது எவ்வாறு இருக்குமோ அந்த அதிர்ச்சி நிலையில்த்தான் என்னைப் பைத்தியம் என்று ஒரு அன்பர் அழைத்திருக்கின்றார். அடுத்து இந்தப் பைத்தியம் கூறுவது உண்மையா தமக்குப் போதிக்கப்பட்டது உண்மையா என்பதை அவர்களுள் யாராவது ஒருவர் கட்டாயம் அறிய முற்படுவார் என்று நான் எதிர்பார்த்தேன். என் எதிர்பார்ப்பு வீண் போகவில்லை. அவ்வாறு அறிய முற்பட்ட சிங்கள வைத்தியர் ஒருவர் தான் கண்டுகொண்ட வரலாற்று ரீதியான உண்மைகளை உள்வாங்கியதால் ஏற்பட்ட அதிர்ச்சியில் திரு. விக்னேஸ்வரன் கூறியதில் உண்மை இருக்கத்தான் செய்கின்றது என்று ஒரு தமிழ் நண்பருக்கு அறிவித்தாராம். இவ்வாறு பார்க்கும் போது சிங்களவரும் தமிழரும் திராவிட இனத்தைச் சார்ந்தவர்கள் என்றல்லவா ஆதாரங்கள் வெளிப்படுத்திக்காட்டுகின்றன என்று கூறியுள்ளார். மரபணுப்பரிசோதனைகளும் (னுNயு வுநளவள) சிங்கள மக்கள் திராவிடரே என்ற உண்மையை உணர்த்தியுள்ளன. அவரின் இந்தக் கண்டுபிடிப்பு மொத்த சிங்கள மக்களிடையே பரவி விரவ வேண்டும்.

ஆகவே நல்லிணக்கத்திற்கு புரிந்துணர்வு ஏற்படுவது முக்கியம். நாம் மேன்மையானவர்கள், தமிழர்கள் கீழானவர்கள், கள்ளத்தோணிகள் என்ற எண்ணம் அவர்கள் மனதில் இருக்கும் வரையில் நல்லிணக்கத்திற்கு இடமில்லை. கிணற்றுக்குள் விழுந்திருக்கும் ஒருவனுக்கும் கிணற்றுக்கு வெளியில் இருக்கும் ஒருவனுக்கும் இடையில் நல்லிணக்கம் ஏற்பட முடியாது. கிணற்றில் விழுந்திருப்பவனை மேலே எழுப்பி நிலத்தில் நிலைபெறச்செய்தால்த்தான் இருவரும் நல்லிணக்கத்திற்கு வித்திடலாம். ஆகவே நல்லிணக்கத்திற்கு ஒடுக்கப்பட்டிருக்கும் நாங்கள் விடுதலை அடைந்திருக்க வேண்டும். இல்லை என்றால் எம்மைக் கிணற்றுக்குள் வைத்துக்கொண்டே புசிக்க சில உணவு வகைளைக் கொடுத்துவிட்டு தாம் நினைத்தது போல் நல்லிணக்கம் ஏற்பட்டதாக உலகிற்கு அறிவிப்பார்கள். தற்பொழுது நல்லிணக்கம் என்ற பெயரில் நடைபெறுவது வெறும் கண்துடைப்பே. உண்மையான நல்லிணக்கத்திற்கு நாங்கள் வித்திடவில்லை.
டி) நல்லிணக்கத்தை ஏற்படுத்த வேண்டியது யார்?
பதில் – நிச்சயமாக அரசாங்கமே. பக்கச்சார்பாக நடந்துகொண்டது அரசாங்கங்கள். எமது மக்களின் உரிமைகளைப் பறித்தது அரசாங்கங்கள். உன்மத்தமாக நடந்துகொண்டது அரசாங்கங்கள். நாங்கள் பாதிக்கப்பட்டவர்கள். விழுந்து கிடப்பவர்கள். நல்லிணக்கம் வேண்டுமென்றால் கைகொடுத்து எம்மை எழுப்பவேண்டியவர்கள் அரசாங்கத்தினரே. இராணுவத்தை எம்மிடையில் வைத்துக்கொண்டு, மத்தியின் அதிகாரத்தை இங்கு பிரயோகித்துக் கொண்டு, எங்கள் பொருளாதார விருத்தியில் உள்ளிடும் உரிமையைத் தம்கைவசம் வைத்துக்கொண்டு நல்லிணக்கம் பேசுகிறார்கள் அரசாங்கத்தினர். கிணற்றின் உள்ளே இருப்பவருடன் கிணற்றுக்கு வெளியில் இருப்பவர் சமாதானம் பேசுகின்றார். அவர்கள் நல்லிணக்கத்திற்கான வழிமுறைகளைக் கடைப்பிடிக்கவில்லை என்றே கூறுவேன். தென்னாபிரிக்காவில் கறுப்பின மக்களுக்கு ஒரு அரசியல் ரீதியான தீர்வைக் கொடுத்த பின்னரே உண்மைக்கும் சமரசத்திற்குமான ஆணைக்குழு நியமிக்கப்பட்டது. (வுசரவா யனெ சுநஉழnஉடையைவழைn ஊழஅஅளைளழைn) இங்கு விழுந்தவர்களை விழுந்திருக்க வைத்துக்கொண்டே வியப்பான ஒரு நல்லிணக்கத்தை ஏற்படுத்த விளைகின்றது அரசாங்கம். அது பயனளிக்காது என்பதே எனது கருத்து.
உ) தமிழ்த் தலைமைகள் உரிமைகளுக்காகத் திருவோடு ஏந்தும் நிலை பற்றிய என் கருத்து –
பதில் – எந்த ஒரு பிரச்சனைக்கும் அண்மித்த காரணங்களும் இருக்கலாம். பரந்த சூழலில் அடையாளப்படுத்தப்படக்கூடிய காரணங்களும் இருக்கலாம். பிரச்சனைகளின் தாற்பரியத்தை முற்றிலும் அறியாதவர்கள், அறிந்துகொள்ளும் தகைமை அற்றவர்கள், அண்மித்த காரணங்களின் அடிப்படையிலேயே நிலைமைகளுக்கு முகங்கொடுப்பார்கள். போரின் காரணத்தினாலோ என்னவோ அண்மித்த காரணங்களை வைத்து ஏதாவது ஒரு தீர்வைப் பெற்றுவிட வேண்டும் என்ற நப்பாசை எம் மக்களிடையே பிறந்துள்ளது. பிழையான மனோநிலை கொண்ட சிங்கள மக்கட் தலைவர்கள் இடையில் அவர்களின் பிழையான சிந்தனைகளை நீக்கும் வரையில் நாம் யாவரும் உரிமைக்காகத் திருவோடு ஏந்தும் நிலையே ஏற்படும். தமிழ்த் தலைமைகளைக் குறை கூறிப் பயன் இல்லை. நாம் பலம் அற்று இருக்கும் நிலையில் திருவோடு ஏந்துவதைத் தவிர வேறு என்ன செய்ய முடியும்? இதற்குரிய என் கருத்தை மற்றவற்றைப் பரிசீலிக்கும் போது கூறுகின்றேன்.

ன) இருப்பதை நாம் இழந்து வருகின்றோம் என்ற நிலை.
பதில் – அது உண்மை. இதற்குக் காரணம் சிங்கள அரசியல்த் தலைவர்கள் தமக்கு என்ன வேண்டும் என்பதில் மிகவும் தெளிவாகவும் திடமாகவும் உள்ளார்கள். நாங்கள் எமக்குள் தெளிவு இன்றி நடைமுறைப்படுத்த வேண்டிய வழிமுறைகள் பற்றிய சிந்தனையின்றி காற்றினால் கொண்டு செல்லப்படும் கடதாசி போல் நடந்து வருகின்றோம். இப்பொழுதும் எம்முள் பலர் கேட்பது, ஏன் அரசாங்கத்துடன் சேர்ந்து பொருளாதார நன்மைகளைப் பெற பின்னிற்கின்றீர்கள் என்பதையே.
இத்தருணத்தில் நான் உச்ச நீதிமன்றத்தில் கூறியதையே ஞாபகப்படுத்த வேண்டியுள்ளது. இது எப்படி இருக்கின்றது என்றால் நாம் கனி~;ட மாணவர்களாகக் கல்லூரியில் மாபிள்கள் விளையாடிக்கொண்டிருந்த போது எம் சிரே~;ட மாணவர்கள் வந்து அத்தனை மாபிள்களையும் அடித்துப்பறித்து தாம் கையகப்படுத்தி விடுவார்கள். நாங்கள் அழுது புலம்ப, ஆசிரியர்களுக்குத் தெரியவரப் போகின்றதென்று கையகப்படுத்திய 25 மாபிள்களைத் தாமே வைத்துக் கொண்டு 6 அல்லது 7 அல்லது 8 தருவதாகப் பேரம் பேசுவார்கள். நாம் பத்தைக் கேட்டால் உடனே தந்துவிட்டுப் போய்விடுவார்கள். ஆனால் 15த் தாம் எடுத்துச் சென்றுவிடுவார்கள். அதே போல் பொருளாதார நன்மைகளைத் தந்து எம்மை ஆறுதல்ப்படுத்துவது எமது முக்கியமான உரிமைகளைத் தாம் வைத்திருப்பதற்கே? நாம் பொருளாதார விருத்திகளைத் தந்துவிட்டோம் என்று கூறி எமது வரலாற்றுப் பிறப்புரிமைகளை அவர்கள் கைவசம் வைத்திருப்பதற்கே. ஆகவே முழுமையான ஒரு பரந்த சிந்தனையுடன் எங்களைச் சுற்றி நடப்பதை நாங்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
பொருளாதார நன்மைகள் முக்கியம்தான். ஆனால் அவற்றை நாம் எமது புலம்பெயர்ந்தோர் ஊடாகவும் பெறலாம். சர்வதேச உதவிகளுடாகவும் பெறலாம். அரசாங்கத்திடம் பிச்சைகேட்டு எடுத்தோமானால் சதா காலமும் பிச்சைக்காரர்களாகவே இருக்க வேண்டும். அரசாங்கம் தாமாகக் கொடுப்பது வேறு நாம் திருவோடு ஏந்தும் நிலை வேறு. அவர்களிடம் தஞ்சம் புகுந்தவுடன் நடப்பது என்ன? தமக்கு வேண்டியவற்றை அவர்கள் சாதித்துக் கொள்வார்கள். காணிகளைக் கேட்பர், அவர்கள் இங்குவந்து தொழில் செய்யக் கேட்பர், இராணுவம் தொடர்ந்திருக்கக் கேட்பர், நாங்கள் அவர்களிடம் எடுத்திருப்பதால் முடியாது என்று கூறமுடியாது. மேலும் சர்வதேச சுற்றுலாப் பயணிகளுடன் வருவர். வந்து ஜம்புகஸ்பட்டுணவைக் காட்டி இது எமது சிங்கள நாட்டின் ஒருபகுதி; தமிழர்கள் இங்கு 10ந் நூற்றாண்டில் வந்து எம்மைத் துரத்திவிட்டு இப்பொழுது இங்கு குடியிருந்து கொண்டு எம்மையே எதிர்க்கப்பார்க்கின்றார்கள் என்று கூறுவர். அப்பொழுது அதற்கு மறுப்புத் தெரிவிக்கக்கூடிய நிலையில் நாங்கள் இருக்க மாட்டோம். எமது தனித்துவத்தை இழந்துவிட்டிருப்போம். பிச்சைபோட்டு வளர்க்கப்பட்டுக் கொண்டிருக்கும் ஒரு கேவலமான இனமாக சர்வதேசத்தால் அடையாளப்படுத்தப்படுவோம். இருப்பதை நாம் இழந்து வருவதற்குக் காரணம் எமது பாரம்பரியம், வரலாறு, எமது இலக்கியம், இன்றைய சுற்றுச் சூழல் எதனையுமே அறியாது அரசியல் நடத்துவதேயாகும்.
பலமுள்ளவன் தான் விட்டுக் கொடுக்க வேண்டும். பலமற்றவன் விட்டுக்கொடுத்தால் அது பேடித்தனம். பயந்து விட்டுக்கொடுப்பதாகவே இருக்கும். பலமுள்ளவன் உடனே உங்கள் பலமற்ற நிலையைப் புரிந்து கொள்வான். இப்போது எமது அரசாங்கங்கள் எமது பலமற்ற நிலையை நன்றாக அறிந்து கொண்டிருக்கின்றன. எம்மை வாங்கிவிட முடியும் என்று நினைக்கின்றன. நாமும் அதற்கேற்றவாறே நடந்து வருகின்றோம். நாங்கள் பலமுள்ளவர்களாக மாறினால்த்தான் எங்களிடமிருந்து பறிப்பதை மற்றவர்கள் நிறுத்துவார்கள்.
நாம் பலமுடையவர்களாக மாறுவது எப்படி? முதலில் நாங்கள் பிச்சை கேட்பதை நிறுத்த வேண்டும். அடுத்தது நாங்கள் உண்மையின் வழி நிற்கின்றோம் என்ற எண்ணம் எம்முள் பிறக்க வேண்டும். நாம் எம்மை நாமே ஆண்ட மக்கள். இன்று ஆங்கிலேயர் தயவால் அதிகாரங்களைத் தமதாக்கி எம்மைப் பெரும்பான்மையினர் ஆளப்பார்ப்பது எமது உண்மை நிலையை மறைப்பதாகும், கொச்சைப்படுத்துவதாகும். ஆகவே தமிழ் மக்கள் தமது உரித்துக்களைப் பெறப் போராடுவது நியாயமானது என்பதில் நாங்கள் அசைவற்ற நம்பிக்கை கொள்ள வேண்டும். நாம் சிங்கள மக்களின் உரித்துக்களைப் பறிக்கப் போராடவில்லை. அவர்கள் மீது எமக்கு எவ்விதக் கோபமோ குரோதமோ இல்லை. அவர்களின் அரசியல் வாதிகள் மீது எமக்குப் பரிதாபம் இருக்கின்றது. கேவலம் பதவிக்குவர இந்த அருமருந்தன்ன நாட்டைக் குட்டிச்சுவர் ஆக்கி விட்டார்கள் என்ற மனவருத்தம் எமக்குண்டு. எமது உரித்துக்களை அவர்கள்தான் கையகப்படுத்தியுள்ளார்கள் என்ற உண்மையை நாம் உணர்ந்து கொள்ள வேண்டும்.
அடுத்து நாம் பலமற்றவர்கள் என்று நினைப்பதைக் கைவிட வேண்டும். நாம் பலமுடையவர்கள். உலகம் பூராகவும் எம்மவர்கள் சீரும் சிறப்புடனும் வாழ்ந்து வருகின்றார்கள் என்பதை மறக்கக் கூடாது. உண்மையில் சிறுபான்மையினர் மனோநிலையில்த்தான் (ஆiழெசவைல ஊழஅpடநஒ) சிங்கள மக்கட் தலைவர்கள் இவ்வாறு நடந்து கொள்கின்றார்கள் என்பதை நாம் எமது மனதில் பதிய வைக்க வேண்டும்.
நாங்கள் உண்மைக்குப் போராடுகின்றோம்; எம் மக்கள் நன்மைக்குப் போராடுகின்றோம்; நியாயத்திற்குப் போராடுகின்றோம் என்ற திட நம்பிக்கை வந்துவிட்டால் நாங்கள் பலமுள்ளவர்களாக மாறுவோம். அவ்வாறான சிந்தனையில் நாம் இல்லாதபடியால்த்தான் மற்றவர்கள் பெருந்தன்மையை நாங்கள் எதிர்பார்த்து நிற்கவேண்டியுள்ளது. அதன்போது இருப்பவற்றையும் நாம் இழந்து வருகின்றோம். நிலங்கள் பறிபோகின்றன. அதிகாரங்கள் பறிபோகின்றன. தரவேண்டியவை தராமல் தாமதப்படுத்தப்பட்டு வருகின்றன.

ந) பெரும்பான்மையினர் நல்லிணக்கத்திற்கான நடவடிக்கைகளை எடுக்கவில்லை.
பதில் – ஏன் எடுக்கவில்லை என்று கூறுகின்றீர்கள்? எமக்கு வீடு கட்டித் தருகின்றார்கள், தண்ணீர்த் தாங்கி கட்டித் தருகின்றார்கள், கிணறுகள் அமைக்கின்றார்கள், மலசலகூடங்கள் கூட மனமுவந்து கட்டித் தருகின்றார்கள். மேலும் எம்மை மந்திரிகளாக்கக் காத்து நிற்கின்றார்கள், விரைவில் பாராளுமன்ற அவைத்தலைவராகவும் ஆக்கப் பின்நிற்க மாட்டார்கள்: இவை எல்லாம் நல்லிணக்கத்திற்கான நடவடிக்கை இல்லையா? ஒன்றை நீங்கள் மறந்து விட்டீர்கள். 25 மாபிள்களைக் கைவசம் வைத்துக்கொண்டு 7 தாரேன் 8 தாரேன் என்பது நல்லிணக்கமாகத் தோன்றும். ஆனால் அது நல்லிணக்கம் ஆகாது. அதிகாரங்களைத் தம்வசம் வைத்திருந்து கொண்டு, இராணுவத்தை வடகிழக்கில் நிலைபெற வைத்துக் கொண்டு நல்லிணக்கத்தில் அரசாங்கம் ஈடுபடுவதென்பது ஒரு ஆண்டான் – அடிமை உறவு முறையின் வெளிப்பாடே. அதனால்த்தான் முதலில் ஆண்டானின் மனோநிலையை மாற்றக் கோருகின்றேன். அதனை நாமும் உலகெல்லாம் விரவிய எம்மவர்களும், சிங்கள சகோதரர்களுள் எம் நிலையை உணர்ந்திருப்பவர்களும் சர்வதேச சமூகமுஞ் சேர்ந்து செய்ய வேண்டும்.

க) மனம் இருந்தால் அரசியல்க் கைதிகள் விடுவிக்கப்பட்டிருப்பார்கள் என்பது.
பதில் – அவர்களை அரசியல் கைதிகள் என்று நாம்தான் கூறி வருகின்றோம். அரசாங்கம் அவர்களைப் பயங்கரவாதிகள் என்றே காட்டி வருகின்றனர். பின் எவ்வாறு அரசியல்க் கைதிகள் அல்லாதோரை விடுவிக்க அவர்கள் முன்வருவார்கள்? அவர்களின் நல்லிணக்கம் வீடு கட்டுவதிலும,; மலசல கூடம் அமைப்பதிலும், தண்ணீர்த் தாங்கிகள் கட்டிக் கொடுப்பதிலும், கிணறு வெட்டிக் கொடுப்பதுடனும் முடிவடைந்துவிடும். நல்லிணக்கம் என்றால் அவ்வாறு செய்வதுதான் என்று அவர்கள் மனமார நம்புகின்றார்கள். அதிகாரங்களைத் தம் கைவசம் அளவுக்கதிகமாக வைத்துக்கொண்டு அவ்வாறு நம்புகின்றார்கள். எம்மிடம் இருந்து பறித்த மாபிள்களில் பெரும்பாலானவற்றை கைவசம் வைத்திருக்கின்றோம் என்ற எண்ணம் அவர்களுக்கு இருப்பது போல்த் தெரியவில்லை.

பிழை எப்போதோ நடந்தேறிவிட்டது. அதனைச் சரியாக்க வேண்டும் என்ற சிந்தனையை அவர்கள் மனதில் நாம் இதுவரையில் உருவாக்கவில்லை. அவர்கள் மகாவம்ச மனோநிலையில் மலசலகூடம் தருவதுதான் நல்லிணக்கம் என்ற எண்ணத்தில் இருக்கும் போது அரசியல்க் கைதிகளை ஏன் அவர்கள் விடுவிக்க வேண்டும்?

ப) இளைய சமுதாயம் பயணிக்க வேண்டிய பாதை என்ன?
பதில் – இன்று எமது இளைய சமுதாயம் பலவித சொகுசுகளுக்கு அடிமையாகிவருகின்றார்கள். வெளிநாட்டுப் பணம், அரசாங்கமும் அடுத்தவருந் தரும் இனாமான உதவிகள், வேலை செய்யாமலே சம்பளம் வாங்கக்கூடிய சில அரசாங்க வேலைகள், அரச பணிகள் என்பன – இவ்வாறு சுக வாழ்வுக்கு நாம் அடிமையாகி வருகின்றோம். உழைப்பு, கடின உழைப்பு, சூழலின் கொடுமையை மீறிய உழைப்பு – இவை தான் தமிழ் மக்களை உயர் நிலைக்கு கொண்டு போயிற்று. அதனால்த்தான் இன்று அவர்கள் பிற நாடுகளில் கொடி கட்டி வாழ்கின்றார்கள். நாங்களோ சொகுசை நாடுகின்றோம். முதலில் இதனைப் புரிந்து கொள்ள வேண்டும். நான் சட்டக் கல்லூரியில் முதல்ப் பரீட்சையில் முதல்த் தரத்தில் சித்தியடைந்து வீட்டுக்கு வர உடுவில் பழைய மாணவியாகிய என் தாயார் “நல்லது! அடுத்த பரீட்சைக்கு இப்பொழுதிருந்தே படி. அப்படிச் செய்தால் கடைசி நேரத்தில் இம் முறை போல இரவிரவாக நித்திரை முழித்துப் படிக்கத்தேவையில்லை” என்றார். இன்று தான் பார்ட்டியும் பந்தாவும். அன்றோ வெற்றியை சர்வ சாதாரணமாகக் கணித்து அடுத்த படியில் கால்வைக்க உற்சாகமூட்டினார்கள் எம் தாய்மார். இன்று எமது இளைஞர்கள் வெற்றியின் இரகசியம் உழைப்பே என்பதை மறந்து வாழ்கின்றார்கள். குறுக்கு வழியில் பணம் சம்பாதிக்கவே அவர்கள் கண்ணும் கருத்துமாக உள்ளார்கள்.

உங்கள் கேள்வி அரசியலில் இளைஞர்கள் பயணிக்க வேண்டிய பாதை பற்றியதே என்பது எனக்குத் தெரியும். ஆனால் எந்தப் பயணத்திற்கும் ஒரு ஆயத்தம் அவசியம். முதலில் எங்களை ஆயத்தமாக்கிக் கொண்டால்த்தான் நாம் பயணத்தில் ஈடுபட முடியும். எமது இளைய சமுதாயம் வேறு வேலை இல்லையே என்று அரசியலுக்கு வரப்படாது. அப்படிப்பட்ட பலர் அரசியலைத் தமது பணஞ் சேர்க்குந் தொழிலாகவே மாற்றியுள்ளார்கள். ஆகவே எம்மை நாம் உரியவாறு தயார்ப்படுத்துவது அவசியம்.

இளைஞர் யுவதிகளே! உங்கள் வேலைகள் எதுவாக இருந்தாலும் அதனை முதலில் திறம்படச் செய்யப் பழகுங்கள். அடுத்தது எமது மக்களை ஒன்று சேர்க்கப் பாடுபடுங்கள். முதலில் இளைஞர் யுவதிகளை ஒன்று சேருங்கள். இளைஞர் அணிகளை ஒன்றுசேருங்கள். முற்காலத்தில் போரில் தோற்ற ஒரு அரசன் எதனைச் செய்தான்? சிதறுண்ட படையை ஒருமித்து சேர்த்து தயார்படுத்துவான். பின்னர் அவர்களுக்குப் பயிற்சி அளிப்பான். தமக்குச் சாதகமானவர்களுடன் கூட்டுச்சேர்வான். பின்னர் உரிய தருணத்தில் போர் தொடுப்பான். நாம் இன்று போர்க் கருவிகளுடன் போராடப் புகவில்லை. எமது நம்பிக்கையையும் மன உறுதியையும் மூலதனமாக வைத்தே அஹிம்சைப் போராட்டத்தில் ஈடுபட உள்ளோம். அதற்கு எமது புலம்பெயர் சகோதர சகோதரிகளும் அனுசரணை வழங்குவார்கள் என்ற நம்பிக்கை எமக்குண்டு. அவர்களும் சிதறுண்டு நிற்கின்றார்கள். அஹிம்சை வழியில் சம~;டி பெறுவதே குறிக்கோளாக நாம் அனைவரும் இணைய வேண்டும். சர்வதேச மட்டத்தில் எம்மவர்கள் இதற்கு நாம் ஒத்துக்கொள்கின்றோம் என்று அவர்கள் வெளிப்படையாகக் கூறுவது அரசாங்கத்திடம் இருந்து நல்ல சமிஞ்ஞைகளைப் பெற உதவி அளிக்கும். கட்சிகளில் இருந்தாலும் அவற்றிற்கு அப்பால் சென்று நாம் ஓரணியாகக் கூட வேண்டும். எமது நடவடிக்கைகளைக் கலந்தாலோசித்து முடிவுக்கு வர வேண்டும். வன்மம் களைந்து, வலோத்காரம் களைந்து எமது போராட்டம் நியாயமானதே என்ற திடமான நம்பிக்கையுடன் நாங்கள் ஒன்றிணைந்து எமது நடவடிக்கைகளில் இறங்க வேண்டும். எம்முள் இருக்கும் இன, மத, சாதி பேதங்கள் களையப்பட வேண்டும். சிங்கள மக்களிடையே இருக்கும் மனிதாபிமானங் கொண்ட சகோதர சகோதரிகளுடன் நாம் கைகோர்த்து முன் செல்ல வேண்டும்.

எமது இளைஞர் யுவதிகள் உடனே செய்ய வேண்டியது நன்றாகப் பாடங்களைப் படித்தலே. நன்றாக தமது விளையாட்டுக்களில் சிறப்பாக முன்னேறுவதே. தமது தொழில்களில் முன்னேறுவதே. ஏன் என்று நீங்கள் கேட்கக்கூடும். நாம் பலமுள்ளவர்கள் என்ற எண்ணம் எம்முள் பரிணமிக்க நாம் செய்யுந் தொழிலில் திறனை நாம் முதலில் வெளிப்படுத்த வேண்டும். எமது வலுவான மனமாற்றமே எம்மை எதிர்கொள்ளும் மக்களின் மனதிலும் மாற்றத்தை ஏற்படுத்தும். எம்மை இரண்டாந்தரப் பிரஜைகளாகக் கருதும் பெரும்பான்மையினர் எமது திறன்கண்டு, எமது செல்வாக்கை உணர்ந்து எம்முடன் கூட்டுச்சேர முன்வர வேண்டும். சம~;டி என்பது கூட்டுச்சேரலே.

நன்றி

நீதியரசர் க.வி.விக்னேஸ்வரன்
முதலமைச்சர்
வடமாகாணம்
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *