BREAKING NEWS
4c4333d9-d1d5-4002-bb9f-d842525caf31_cx0_cy7_cw0_w1023_r1_s

மலேசியாவில் அரச நிதி மோசடி தொடர்பில் முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக் கைது செய்யப்பட்டுள்ளார்

166

மலேசியாவில் அரசு முதலீட்டு நிதியத்தில் இருந்து பல பில்லியன் டொலர் பணம் காணாமல் போயுள்ளது தொடர்பாக முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக் கைது செய்யப்பட்டுள்ளதாக மலேசிய காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இன்று பிற்பகல் கைதுசெய்யப்பட்டுள்ள அவர், புதன்கிழமை நீதிமன்ளறில் நிறுத்தப்பட்டு அதிகாரபூர்வமாக குற்றம் சாட்டப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மலேசியாவில் ஆட்சியில் இருந்து வந்த போதே கடந்த மே மாதம் நடைபெற்ற தேர்தலில் நஜிப் அதிர்ச்சி அளிக்கும் வகையில் தோல்வி அடைந்தார்.

ஆட்சிக்கு வந்துள்ள புதிய அரசாங்கம் 1MDB எனப்படும் அரசு முதலீட்டு நிதியத்தில் இருந்து பில்லியன்கணக்கான டொலர்கள் காணாமல்போனது தொடர்பான விசாரணைகளை தொடர்துள்ள நிலையில் தற்போது முன்னாள் பிரதமர் நஜிப் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்த விசாரணைகள் காரணமாக நாட்டை விட்டு வெளியேறுதவற்கும் அவருக்கு அனுமதி வழங்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *