BREAKING NEWS
image_51bad51434

மே. தீவுகளுக்கெதிரான 3ஆவது டெஸ்டில் தடுமாறுகிறது இலங்கை

75

இலங்கை, மேற்கிந்தியத் தீவுகளுக்கிடையிலான மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில், பார்படோஸில் இலங்கை நேரப்படி நேற்று அதிகாலையில் ஆரம்பித்த மூன்றாவது டெஸ்டின் இரண்டாம் நாள் முடிவில் இலங்கை அணி தடுமாறி வருகிறது.

இரண்டாம் நாளை, தமது முதலாவது இனிங்ஸில் 5 விக்கெட் இழப்புக்கு 132 ஓட்டங்களைப் பெற்றவாறு ஆரம்பித்த மேற்கிந்தியத் தீவுகள் 204 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் இழந்தது. துடுப்பாட்டத்தில், அணித்தலைவர் ஜேஸன் ஹோல்டர் 74, ஷேன் டெளரிச் 71 ஓட்டங்களைப் பெற்றனர். பந்துவீச்சில், லஹிரு குமார 4, கசுன் ராஜித 3, சுரங்க லக்மால் 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.

பதிலுக்கு, தமது முதலாவது இனிங்ஸில் துடுப்பெடுத்தாடக் களமிறங்கிய இலங்கை, இன்றைய இரண்டாம் நாள் ஆட்ட முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 99 ஓட்டங்களைப் பெற்றவாறு தடுமாறி வருகிறது.

தற்போது களத்தில், நிரோஷன் டிக்வெல்ல 13, றொஷேன் சில்வா மூன்று ஓட்டங்களுடன் ஆட்டமிழக்காமலுள்ளனர். முன்னதாக, தனுஷ்க குணதிலக 29, குசல் மென்டிஸ் 22 ஓட்டங்களைப் பெற்று ஆட்டமிழந்தனர். பந்துவீச்சில், கேமார் றோச், ஷனொன் கப்ரியல் ஆகியோர் தலா 2, ஜேஸன் ஹோல்டர் ஒரு விக்கெட்டைக் கைப்பற்றினர்.

மழை காரணமாக முதல் நாளில் 107 நிமிட ஆட்டம் இடம்பெறாத நிலையில், மழை காரணமாக 59 ஓவர்களே வீசப்பட்டிருந்தது.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *