முக்கிய செய்திகள்

Warning: Invalid argument supplied for foreach() in /home/vmctr24/public_html/wp-content/themes/nanomag/news-ticker.php on line 15

ரொறன்ரோ பெரும்பாகத்தில் வீசிய சூறைக் காற்று காரணமாக, பெருமளவான மரங்கள் முறிந்து வீழ்ந்து சேதனங்களை ஏற்படுத்தியுள்ளது.

1718

இன்று பிற்பகல் ரொரன்ரோ நகர் உள்ளிட்ட ரொரன்ரோ பெரும்பாகத்தில் வீசிய சூறைக் காற்று காரணமாக, பெருமளவான மரங்கள் முறிந்து வீழ்ந்து சேதனங்களை ஏற்படுத்தியுள்ளதுடன், ஆயிரக்கணக்கானோருக்கான மின் வினியோகமும் துண்டிக்கப்பட்டு்ளளது.

இது குறித்து பிறப்பிக்கப்பட்டிருந்த வானிலை எச்சரிக்கை இன்று மாலை 4.15 உடன் முடிவுக்கு வந்துள்ள நிலையில், இதன் போது சுமார் 25,000 வாடிக்கையாளர்கள் மின் இணைப்பினை இழந்ததாக ரொரன்ரோ ஹைட்ரோ தெரிவித்துள்ளது.

மின் வினியோக தடை குறித்த முறைப்பாடுகள் தொடர்ச்சியாக கிடைத்துவந்த நிலையில், தற்போது அவற்றினை சீர் செய்யும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக ரொரன்ரோ ஹைட்ரோ தகவல் வெளியிட்டுள்ளது.

இன்று பிற்பகல் வேளையில் ரொரன்ரோ பெரும்பாகத்தின் ஊடாக வேகமாக வீசிய காற்று, பிற்பகல் 3.30 அளவில் உச்ச வேகத்தைத் தொட்டதாக வானிலை அவதானிப்பாளர்கள் தெரிவித்து்ளளனர்.

இதனால் ரொரன்ரோ நகர் உள்ளிட்ட பல பாகங்களிலும் மரங்கள், மின் கம்பங்கள் முறிந்து வீழ்ந்து்ள்ளதுடன், அதனால் பல்வேறு விரதமான சேதங்களும் ஏற்பட்டுள்ளன.

ரொரன்ரோவின் அனைத்து பாகங்களிலும் மரக் கிளைகள் முறிந்து வீழந்து காணப்படுவதுடன், குப்பைகளும், சிதறல்களும் ஆங்காங்கே தூக்கி வீசப்பட்டுள்ளன.

இதேவேளை இன்று வெப்பநிலையின் அளவும் ஏழு பாகை செல்சியஸ் வரையில் வீழ்ச்சியடையும் எனவும் தெரிவித்துள்ள அதிகாரிகள், இன்று இரவு வெளியே செல்லத் திட்டமிட்டுள்ளோர், குளிருக்கு ஏற்ற ஆடைகளை அணிந்து செல்லுமாறும் அறிவுறுத்தியுள்ளனர்.

அத்துடன் நாளை மேலம் குளிரான சூழ்நிலை காணப்படும் எனவும், இன்று பகல் பொழுதில் அதிகளவான வெப்பநிலையாக 22 பாகை செல்சியஸ் பதிவான நிலையில், நாளை அதிகளவான வெப்பநிலையாக 11 பாகை செல்சியசே பதிவாகக்கூடும் எனவும் முன்னுரைக்கப்பட்டுள்ளது.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *