முக்கிய செய்திகள்

Warning: Invalid argument supplied for foreach() in /home/vmctr24/public_html/wp-content/themes/nanomag/news-ticker.php on line 15

லெப். கேணல் பொன்னம்மான் உட்பட ஏனைய மாவீரர்களின் வீரவணக்க நாள் இன்றாகும்.

1471

யாழ். மாவட்டம் கைதடிப் பகுதியில் எதிர்பாராமல் ஏற்பட்ட வெடிவிபத்தின்போது வீரச்சாவைத் தழுவிக்கொண்ட மூத்த தளபதி லெப். கேணல் பொன்னமான், தென்மராட்சி பொறுப்பாளர் மேஜர் கேடில்ஸ், விடுதலைப் புலிகளின் தொழில்நுட்பப் பிரிவுப் பொறுப்பாளர் கப்டன் வாசு, லெப்.சித்தார்த்தன், 2ம் லெப். பரன், வீரவேங்கை ஜோகேஸ், வீரவேங்கை குமணன், வீரவேங்கை அக்பர், வீரவேங்கை கவர், வீரவேங்கை தேவன் ஆகிய மாவீரர்களின் 31ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.

யாழ். மாவட்டம் நாவற்குழி படைமுகாம் மீதான தாக்குதலுக்கு 14.02.1987 அன்று வெடிமருந்து நிரப்பப்பட்ட ஊர்தி ஒன்று வெடிக்க வைத்த பின்னரேயே தாக்குதல் அணிகள் உட்புகுந்து முகாமைக் கைப்பற்றுவதெனத் திட்டம் தீட்டப்பட்டது.

படைமுகாமின் வாயில் உள்ள படையினர் ஐயம் கொள்ளக்கூடாது என்பதற்காக படையினருக்கு குடிநீர் கொண்டு செல்ல பயன்படுத்தப்படும் தண்ணீர் தாங்கி ஊர்தி (பவுசர்) போன்றதொரு ஊர்தி வெடிமருந்து நிரப்பப்பட்டது. எனினும் இறுதி நேரத்தில் தண்ணீர் தாங்கியிலிருந்து நீர் ஒழுகியது. இதனை அடைக்கும் முயற்சியில் ஈடுபட்ட வேளை எதிர்பாராத வகையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் எங்கள் வீரங்கள் தாய்மண்ணின் காற்றில் கலந்தனர்.

|| தாய்மண்ணின் விடியலின் கனவுகளுடன் தாய்மண்ணின் காற்றில் கலந்த மாவீரச்செல்வங்கள்…..

எமது இயக்கத்தின் முதலாவது பாசறையின் பொறுப்பாளராக இருந்த பொன்னம்மான் நினைவாக
லெப். கேணல் பொன்னம்மான் கண்ணிவெடிப்பிரிவு தமிழீழத் தேசியத்தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களால் உருவாக்கப்பட்டது

தாயக விடுதலை வேள்வி தன்னில் தங்கள் உயிரை அர்பணித்து மண்ணை மக்களைக் காத்த மாவீரர்களுக்கு எமது வீரவணக்கங்கள்…!




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *