முக்கிய செய்திகள்

Warning: Invalid argument supplied for foreach() in /home/vmctr24/public_html/wp-content/themes/nanomag/news-ticker.php on line 15

வடக்கில் பெண்களின் பிரதிநிதித்துவத்தினை 50 வீதமாக அதிகரிக்க நடவடிக்கை

536

2020 ஆம் மற்றும் 2021 ஆம் ஆண்டளவில் வடக்கிலுள்ள அனைத்து அரச அலுவலகங்களிலும் பெண்களின் பிரதிநிதித்துவத்தினை 50 வீதமாக அதிகரிப்பதற்கு எதிர்பார்த்துள்ளதாக வடக்கு ஆளுநர் சுரேன் ராகவன் தெரிவித்துள்ளார்.

தமிழர்களின் தனிப்பெரும் பண்டிகையான தைப்பொங்கல் பண்டிகை ஆளுநர் சுரேன் ராகவன் தலைமையில் இன்று (செவ்வாய்க்கிழமை) முற்பகல் வடக்கு ஆளுநர் செயலகத்தில் இடம்பெற்றது.

ஆளுநர் அவர்கள் வடக்கு ஆளுநர் செயலகத்தின் பணிக்குழாமினருடன் பொங்கல் பொங்கி சம்பிரதாயபூர்வமாக தைப்பொங்கல் பண்டிகையினைக் கொண்டாடினார்.

இதன்போது பணிக்குழாமினரிடம் கருத்துத் தெரிவித்த ஆளுநர், “தற்போது வடக்கு மாகாணத்தில் ஆசிரியர்களாகவும் தாதியர்களாகவுமே பெண்கள் அதிகளவில் பணிபுரிந்து வருகின்றனர்.

இந்நிலையில் அந்த நிலைமையினை மாற்றி 2020/21 ஆம் ஆண்டளவில் வடக்கிலுள்ள அனைத்து அரச அலுவலகங்களிலும் பெண்களின் பிரதிநிதித்துவத்தினை 50 வீதமாக அதிகரிப்பதற்கு எதிர்பார்த்துள்ளேன். அதற்கான நடவடிக்கைகளை உடனடியாகவே ஆரம்பிக்கவுள்ளது.” என கூறினார்.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *