BREAKING NEWS
7c8a4231-fc6c-4928-a2aa-9f025638664d_cx0_cy14_cw94_w1200_r1_s

வலிந்து காணாமல் போனோரின் குடும்பத்திற்கு மாதாந்தம் 6000 ரூபாய் கொடுப்பனவு வழங்கப்படும் என்று நிதி அமைச்சர் மங்கள சமரவீர அறிவித்துள்ளார்

127

காணாமல் போனோரின் குடும்பத்திற்கு மாதாந்தம் 6000 ரூபாய் கொடுப்பனவு வழங்கப்படும் என நிதி அமைச்சர் மங்கள சமரவீர அறிவித்துள்ளார்.

அரசாங்கத்தின் 2019ஆம் ஆண்டிற்கான வரவு செலவு திட்டத்தை நாடாளுமன்றத்தில் இன்று முன்வைத்து உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

காணாமல் போனோரின் உறவினர்களத பிரச்சினைகள் தீர்க்கப்படும் வரையில் மாதாந்தம் இந்த கொடுப்பனவு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.

காணாமல் போனோரின் உறவினர்களுக்கு இடைக்கால அடிப்படையில் கொடுப்பனவுத் தொகை ஒன்றை வழங்க வேண்டுமென காணாமல் போனோர் அலுவலகத்தினால் பரிந்துரை செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *