முக்கிய செய்திகள்

Warning: Invalid argument supplied for foreach() in /home/vmctr24/public_html/wp-content/themes/nanomag/news-ticker.php on line 15

அமெரிக்காவின் ஓஹியோ நகரில் 2வது துப்பாக்கி சூடு: 10 பேர் பலி

627

டெக்சாஸ் வால்மார்ட்  சூப்பர் மார்க்கெட் ஒன்றில் நடந்த துப்பாக்கிச் சூட்டை தொடர்ந்து அடுத்த சில மணி நேரங்களில் ஓஹியோ நகரில் பிரபலமான ஹோட்டல் ஒன்றில் மீண்டும் துப்பாக்கிச்சூடு நடைபெற்றது. இந்த துப்பாக்கி சூட்டில் 10 பேர் கொல்லப்பட்டனர், 16 பேர் காயமடைந்துள்ளனர்.

கடையில் இருந்தவர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்திய ஆசாமியை போலீசார் சுட்டு வீழ்த்தினார்கள். துப்பாக்கியால் சுட்ட நபருடன் மற்றொருவர் வந்து இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கிறார்கள். அவரை இப்பொழுது போலீசார் தேடி வருகிறார்கள்.

துப்பாக்கி சூடு நடந்த இடத்தில் இருந்த ஜேம்ஸ் வில்லியம்ஸ் துப்பாக்கி சூடு சம்பவம் பற்றி விளக்கமாக கூறினார்;

கருப்பு வண்ண ஜீப் ஒன்றில் இரண்டு பேர் வந்து இறங்கினார்கள். அவர்கள் இரண்டுபேர் கைகளிலும்  ஏ ஆர் 15 ரக துப்பாக்கிகள் இருந்தன. இரண்டு பேரும் கனமான குண்டு துளைக்காத உடை அணிந்து இருந்தார்கள். அவர்கள் கடைக்கு முன்னால் காரில் இருந்து இறங்கியதும் துப்பாக்கியை உயர்த்திப் பிடித்து கண்மண் தெரியாமல் சுடத் தொடங்கினார்கள்.

இந்த துப்பாக்கிச் சூட்டில் 15 பேர் கொல்லப்பட்டனர். 20,  25 பேர் காயமடைந்து இருக்கக்கூடும் என வில்லியம்ஸ் கூறினார்.

துப்பாக்கியால் சுட்டுக் கொண்டிருந்த நபர் முன்னேறி ஓட்டலில் மதுபான அறைக்குள் நுழைய முயன்றார். ஆனால் அவர் கையில் இருந்த துப்பாக்கியை அங்கிருந்த யாரோ ஒருவர் பறித்துவிட்டார். அடுத்த வினாடி போலீசார் அந்த ஆசாமியை சுட்டனர். அவர் கீழே விழுந்து இறந்து விட்டார். மர்ம ஆசாமி நடத்திய துப்பாக்கி சூட்டில் அந்த இடத்திலேயே 8 பேர் உயிர் இழந்துவிட்டார்கள்.

உயிரிழந்த 8 பேரும் ஒரு மேஜையில் அமர்ந்து மது அருந்திக் கொண்டிருந்தார்கள் என வில்லியம்ஸ் கூறினார்.

இது போன்ற சம்பவத்தை நான் இதுவரை வாழ்நாளில் பார்த்ததில்லை. துப்பாக்கிச் சூடு நடந்த சில நிமிடங்களில் அவசர போலீஸ் பிரிவு அங்கு வந்து சேர்ந்தது. அவர்கள் காயமடைந்தவர்களையும் இறந்தவர்களையும் அப்புறப்படுத்த தொடங்கினார்கள்.

காயமடைந்தவர்கள் ஆம்புலன்ஸ்களில் மருத்துவமனைக்கு முதலில் அனுப்பப்பட்டனர்.

பின்னர் இறந்தவர்களின் உடல்கள் அனுப்பப்பட்டன.

காயமடைந்த நடக்க முடிந்த சிலரை அருகில் உள்ள 2 மருத்துவ மனைகளுக்கு போலீசார் அழைத்து சென்றனர். அருகில் உள்ள இரண்டு மருத்துவமனைகளிலும் 16 பேர் துப்பாக்கி சூட்டினால் ஏற்பட்ட காயங்களுக்காக சிகிச்சை பெற்றனர்.

ஓட்டலுக்குள் முதலில் நுழைந்தவர் சுடப்பட்டதைப் பார்த்ததும் இரண்டாவது ஆசாமி தாங்கள் வந்த காரில் ஏறி அங்கிருந்து தப்பி விட்டார். அவரை போலீசார் இப்பொழுது தேடி வருகிறார்கள்.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *