முக்கிய செய்திகள்

Warning: Invalid argument supplied for foreach() in /home/vmctr24/public_html/wp-content/themes/nanomag/news-ticker.php on line 15

அமெரிக்காவின் வரிவிதிப்புக்கான பதில் நடவடிககைகளை மேற்கொள்ள தாமும் தயாராகி வருவதாக கனடா தெரிவித்துள்ளது

637

கனடாவின் வாகன உற்பத்தி தொழில்துறை இறக்குமதிகள் மீது பாரிய வரிவிதிப்பினை மேற்கொள்ளவதற்கு அமெரிக்க அதிபர் நடவடிக்கை எடுத்துவரும் நிலையில், அதற்கான பதில் நடவடிக்கைகளை மேற்கொள்ள தாமும் தயாராக வருவதாக கனடா தெரிவித்துள்ளது.

குறித்த அநத வரிவிதிப்பினை அமெரிக்கா நடைமுறைப்படுத்துமாக இருந்ததல், அதற்கு எதிரான அனைத்து பதில் நடவடிக்கைகள் குறித்து கனடாவும் பரிசீலித்து வருவதாக கனேடிய மத்திய பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் நவ்டீப் பைன்ஸ் தெரிவித்துள்ளார்.

எனினும் இரண்டு நாடுகளின் பொருளாதாரத்திற்கும் பாரிய சேதாரத்தினை ஏற்படுத்தக்கூடிய, இந்த வரிவிதிப்பினை கைவிடுமாறு அமெரிக்காவை ஊக்கப்படுத்தும் நடவடிக்கைகளே முதற்கட்டமாக கனடாவால் முன்னெடுக்கப்படும் என்பதையும் அவர் விபரித்துள்ளார்.

எனினும் அதனையும் தாண்டி இந்த வரிவிதிப்பினை நடைமுறைப்படுத்த அமெரிக்கா முயலுமாக இருந்தால், முடியுமான அனைத்துவித பதில் நடவடிக்கைகளையும் மேற்கொள்வதற்கு கனடாவும் தயாராகவே உள்ளது எனவும் அவர் எச்சரித்து்ளளார்.

இருந்த போதிலும் பேச்சுக்கள் மூலம் இந்த விடயத்திற்கு சுமூகமான தீர்வினைக் காண்பதற்கான வாய்ப்புகளில் இருந்து கனடா இன்னமும் பின்வாங்கவில்லை எனவும், இன்னமும் பேச்சுவார்தை மேசையில் இந்த விடயத்திற்கான தீர்வினைக் காண்பதற்கே கனடா விரும்புவதாகவும், எனினும் கனடாவிடம் அனைத்துவித பதில் நடவடிக்கைகளும் தயாராகவே உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *