முக்கிய செய்திகள்

Warning: Invalid argument supplied for foreach() in /home/vmctr24/public_html/wp-content/themes/nanomag/news-ticker.php on line 15

அமெரிக்காவின் 45ஆவது அதிபராக டொனால்ட் டிரம்ப் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

1359

அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசுக் கட்சியின் சார்பில் போட்டியிட்ட டொனால்ட் டிரம்ப் வெற்றி பெற்று அமெரிக்காவின் 45ஆவது அதிபராக தேர்வாகியுள்ளார்.

சனநாயக கட்சியை சேர்ந்த ஹிலரி கிளிண்டனே வெற்றியடைவார் என கருத்துக்கணிப்புக்கள் காட்டியிருந்ததுடன், பரவலான எதிர்பார்ப்புக்களும் இருந்த வந்த நிலையில், அவரை அதிர்ச்சிகரமான முறையில் தோல்வியடையச் செய்து டிரம்ப் மகத்தான வெற்றியைப் பதிவு செய்துள்ளார்.

பல மாதங்களாக இடம்பெற்ற பிரச்சாரத்தில் ஹிலரிக்கு ஆதரவாக தென்பட்ட பல முக்கிய மாநிலங்களில் பலவற்றை வென்றதன் மூலம் டொனால்ட் டிரம்ப்பின் வெற்றி உறுதியாக்கியதாகவும், குறிப்பாக
ஃபுளோரிடா, ஒஹையோ, வடக்கு கரோலினா போன்ற கடும் போட்டி இருந்த மாநிலங்களில் பெற்ற வெற்றி டொனால்ட் டிரம்ப்பின் வெற்றியை மேலும் சாத்தியமாக்கியதாகவும் அவதானிப்பாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

தமது வெற்றியைத் அடுத்து மக்களின் முன் உரையாற்றிய டொனால்ட் டிரம்ப், ஒரே மக்களாக அனைவரும் ஒன்றிணையவேண்டிய நேரம் இது என்று தெரிவித்துள்ளார்.

அமெரிக்கர்கள் அனைவருக்கும் தாம் அதிபராகச் செயல்படுவதாகவும் அவர் உறுதியளித்துள்ளார்.

அமெரிக்காவின் புதிய அதிபராக தேர்வாகியுள்ள டொனால்ட் டிரம்பிற்கு அவுஸ்திரேலியா, இந்தியா, யப்பான், தென்கொரியா, சிங்கப்பூர் என பல நாடுகளின் தலைவர்களும் தமது வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளனர்.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *