முக்கிய செய்திகள்

Warning: Invalid argument supplied for foreach() in /home/vmctr24/public_html/wp-content/themes/nanomag/news-ticker.php on line 15

இலங்கையின் அரசியலமைப்பு மீளாக்கம் அவசியமானது என சுவிட்ஸர்லாந்து தெரிவித்துள்ளது.

1449

இலங்கைக்கு பயணம் சுவிட்ஸர்லாந்து சபாநாயகர் கிரிஸ்டா மேற்கொண்டுள்ள மார்க்வோடர் இன்று கண்டிக்கும் பயணம் மேற்கொண்டு பௌத்த பீடாதிபதிகளை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.

பௌத்த பீடாதிபதிகளுடனான சந்திப்பின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்துரைத்த சுவிட்ஸர்லாந்து சபாநாயகர், இலங்கையில் அரசியல் சாசன மறுசீரமைப்பு மிகவும் அவசியமானது என்று குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையில் மேற்கொள்ளப்பட உள்ள அரசியல் சாசன திருத்தங்கள் தொடர்பில் தமக்கு அரசாங்கம் விளக்கம் அளித்துள்ளதாகவும், அனைத்து கட்சிகளினதும், சிவில் சமூகத்தினதும் கருத்துக்களை உள்ளடக்கி அரசியல் சாசனத்தை அமைக்க வழியமைக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் மிகவும் வெற்றிகரமான அரசியல் சாசனமொன்று உருவாக்கப்படுவதற்கு வாழ்த்துக்களை தெரிவிப்பதாகக் குறிப்பிட்டுள்ள அவர், பாரியளவிலான இலங்கையர்கள் சுவிட்சர்லாந்தில் வாழ்ந்து வருவதாகவும் தெரிவித்துள்ளார்.

இலங்கைக்கும் சுவிட்சர்லாந்திற்கும் இடையில் சிறந்த பொருளாதார உறவுகள் காணப்படுவதாகவும், அவை இன்னமும் மேம்படுத்த சந்தர்ப்பம் காணப்படுவதாகவும் சுவிட்ஸர்லாந்து சபாநாயகர் குறிப்பிட்டுள்ளார்.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *