முக்கிய செய்திகள்

Warning: Invalid argument supplied for foreach() in /home/vmctr24/public_html/wp-content/themes/nanomag/news-ticker.php on line 15

இலங்கை நாடாளுமன்றம் கலைக்கப்பட்டமைக்கு தமிழக அரசியல் தலைவர்கள் பலரும் கண்டனம் தெரிவித்துள்ளனர்

636

இலங்கை நாடாளுமன்றம் கலைக்கப்பட்டமைக்கு தமிழக அரசியல் தலைவர்கள் பலரும் தங்களின் கண்டனங்களை வெளியிட்டுள்ளனர்.

இலங்கை நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதையடுத்து, அங்கு வாழும் ஈழத்தமிழர்களின் பாதுகாப்பினை இந்திய அரசு உறுதி செய்ய வேண்டும் என்று திராவிட முன்னேற்றக் கட்சியின் தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

அத்துடன் சட்டத்திற்கு புறம்பாக நாடாளுமன்றத்தைக் கலைத்துள்ள அதிபர் சிறிசேனாவின் செயல் பேரதிர்ச்சி தருவதாகவும் அவர் குறிப்பிட்டு்ள்ளார்.

ஈழத்தமிழர்கள் கண்ணியமாகவும், சுயமரியாதையுடனும், சம உரிமையுடனும் வாழ – இந்திய – இலங்கை ஒப்பந்தப்படி கொண்டு வரப்பட்ட இலங்கை அரசமைப்புச்சட்டத்தின் 13 ஆவது திருத்தத்தையும் தாண்டி அதிக அதிகாரங்களை ஈழத்தமிழர்களுக்கு அளிக்க வேண்டும் என்ற இந்தியாவின் கோரிக்கையை எள்ளி நகையாடிய ராஜபக்சேவும் – அதிபர் சிறிசேனாவும் கைகோர்த்து கூட்டணி அமைத்து சனநாயகத்தின் குரல்வளை மீது நின்று ஆட்டம் போட்டதை, 14 நாட்களுக்கு மேல் இந்திய மத்திய பாரதிய ஜனதா அரசு வேடிக்கை பார்த்தது என்றும் விபரித்துள்ளார்.

அவ்வாறே மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழத்தின் பொதுச் செயலாளர் வைக்கோ இது தொடர்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில்,இலங்கை தமிழர்களின் முதுகில் அதிபர் மைத்ரிபால சிறிசேனா மீண்டும் குத்திவிட்டார் என்று தெரிவித்துள்ளார்.

இது போன்று பாட்டாளி மக்கள் கட்சியின் இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன்,அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் துணைப் பொதுச் செயலாளர் தினகரன் என தமிழக அரசியல் தலைவர்கள் பலரும் தங்களின் கண்டன அறிக்கைகளை விடுத்துள்ளனர்.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *