முக்கிய செய்திகள்

Warning: Invalid argument supplied for foreach() in /home/vmctr24/public_html/wp-content/themes/nanomag/news-ticker.php on line 15

உடம்பிற்கு குளிர்ச்சியைத் தரும் வெந்தயக் கீரை

1745

இன்பத்தை முழுமையாக உணர வேண்டும் என்றால் சில கசப்பான தருணங்களில் ஈடுபட வேண்டும் என்ற பழமொழி மனிதர்களின் உணவு பழக்க வழக்கங்களில் மிகவும் உண்மையாக உள்ளது.

வெந்தய கீரை கசப்பாக இருப்பதால் இதை எல்லோரும் அதிகமாக உட்கொள்வதில்லை.

வெந்தய கீரையில் கலோரி, இரும்புச்சத்து, கால்சியம், பாஸ்பரஸ், நார்ச்சத்து, மாவுச்சத்து, நீர்ச்சத்து, புரதம், கொழுப்புச்சத்து மற்றும் விட்டமின் C போன்ற சத்துகள் நிறைந்துள்ளன.

  • வெந்தயக் கீரையை தொடர்ந்து உங்கள் உணவுப் பழக்கத்தில் சேர்த்து சாப்பிட்டு வந்தால், பெண்களின் மாதவிடாய் காலத்தில் ஏற்படும் பிரச்சனைகள் குறையும்.
  • இடுப்பு வலி குணமாவதற்கு வெந்தயக் கீரையுடன் நாட்டுக் கோழி முட்டையின் வெள்ளை கரு, தேங்காய் பால், கசகசா, சீரகம், மிளகு, பூண்டு ஆகியவற்றை சேர்த்து அதனுடன் சிறிதளவு நெய் கலந்து சமைத்து சாப்பிட்டால் இடுப்பு வலி காணாமல் போய்விடும்.
  • வெந்தயக் கீரையை தினமும் சமைத்து சாப்பிட்டால் கபம், சளி போன்ற நோய்கள் விரைவாக குணமடையும்.
  • சுறுசுறுப்பு தன்மையற்று மந்த நிலமையை உணர்பவர்கள் அல்லது உடல் சோர்வுத் தன்மையை உணர்பவர்கள் வெந்தயக் கீரை தினமும் சமைத்து சாப்பிட்டால், உடலின் செயலாற்றல் அதிகரித்து சுறுசுறுப்பாக இருக்க முடியும்.
  • வெந்தயக் கீரையை நம் அன்றாட உணவில் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் கண்பார்வை அதிகரிக்கும்.
  • நரம்பு தளர்ச்சி உள்ளவர்களுக்கு வெந்தயக் கீரை ஓர் சிறந்த மருந்தாகும், இது நரம்பு தளர்ச்சியில் இருந்து விடுபட வைக்கிறது.
  • வயிற்று வலி, உப்புசமாக உணர்தல், வயிற்று எரிச்சல் போன்ற வயிறு தொடர்பான பிரச்சனைகளை குணமாக்க வெந்தயக் கீரை உதவுகிறது.
  • வெந்தயக் கீரை குளிர்ச்சி தன்மையை தருவதால் உடல் சூடு அதிகமாக உள்ளவர்கள், வெந்தயக் கீரை சாப்பிடுவதால் உடல் சூட்டை குறைத்து குளிர்ச்சியைத் தருகிறது.
  • வெந்தயக் கீரையை உணவுப் பழக்கத்தில் சேர்த்துக் கொள்வதனால் மார்புவலி, தலைச்சுற்றல் போன்ற பிரச்சனைகள் வராமல் தடுக்கிறது.



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *