முக்கிய செய்திகள்

Warning: Invalid argument supplied for foreach() in /home/vmctr24/public_html/wp-content/themes/nanomag/news-ticker.php on line 15

உயிருடன் ஒப்படைக்கப்பட்ட நிலையில் காணாமல் போயுள்ள அனைவரையும் கொன்றுவிட்டீர்களா!

1305

யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரத்தில் கலந்துகொண்டு பேசும் போது, காணாமல் ஆக்கப்பட்டோர் எவரும் இல்லை என்று இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கூறியுள்ளமை, மாபெரும் இனப்படுகொலை குற்றத்தை சர்வசாதாரணமான பதிலுரைப்பின் மூலம் மூடி மறைக்கும் எத்தனிப்பாகவே காணாமல் ஆக்கப்பட்டோரை தேடிப்பார்த்த போதிலும் காணவில்லை என்று இல்ஙகை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கூறியுள்ளார் என்றால், உங்கள் கைகளில் ஒப்படைக்கப்பட்டவர்களைக் கொன்றுவிட்டீர்களா என்று கேள்வி எழுப்பியுள்ள வட மாகாண மகளிர் விவகார அமைச்சர் அனந்தி சசிதரன் அவ்வாறாயின் கொலைக்குற்றத்தில் ஈடுபட்டவர்கள் யார் என்பதையும் பகிரங்கமாக கூறவேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

அமைந்துள்ளது எனவும் அவர் அதிருப்தி வெளியிட்டுள்ளார்.

போர் முடிவின் இறுதி காலகட்டத்தில் எமது உறவுகளை எங்களது கைகளால் சிறிலங்கா இராணுவத்திடம் ஒப்படைத்திருந்தமை உலகறிந்த உண்மையாகும் எனவும். அவ்வாறு ஒப்படைக்கப்பட்டவர்கள் ஓரிருவர் அன்றி, ஆயிரக்கணக்கிலான உறவுகளை கையளித்திருந்தோம் எனவும், சுய நினைவாற்றலுடன் நல்ல தேக ஆரோக்கியமான நிலையில் முழு மனிதர்களாக எங்களால் உங்கள் இராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்ட எங்கள் உறவுகள் எங்கே எனவும், அவர்களுக்கு என்ன நடந்தது என்றும் அவர் ஆதங்கம் வெளியிட்டுள்ளார்.

வெளிப்படையாகவே ஆணித்தரமாக அவர்களில் எவரும் இல்லை என்று மைத்திரிபால சிறிசேன கூறுகின்றார் என்றால், ஒன்றில் அவர்கள் தொடர்ந்தும் சட்டவிரோத தடுப்பு முகாம்களில் இரகசியமாக தடுத்து வைக்கப்பட்டிருக்க வேண்டும் எனவும், இல்லலையென்றால் அவர்கள் உயிரோடு இல்லாது போயிருக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ள அவர், அவ்வாறு அவர்கள் உயிரோடு இல்லாது போயிருந்தால் பலாத்காரமாகவே அவர்களது உயிர்கள் பறிக்கப்பட்டிருக்கும் என்பதையும் சுட்டிக்காட்டியுள்ளார்.

இவ்வாறுதான் நடந்திருக்குமென்றால், எமது உறவுகளை கையேற்ற சிறிலங்கா இராணுவத்தினர், அவர்களை இரகசிய தடுப்பு முகாம்களில் அடைத்து வைத்திருந்தவர்கள், அவ்வாறு அடைத்து வைக்க உத்தரவிட்டவர்கள், அடைத்து வைக்கப்பட்டிருந்தவர்களை படுகொலை செய்தவர்கள், படுகொலை செய்யுமாறு உத்தரவிட்டவர்கள் என அனைவர் குறித்தும் மைத்திரிபால சிறிசேன பகிரங்கமாக அறிவிப்பு செய்ய வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

தத்தமது பிராந்திய நலன்களுக்கு இசைவாகச் செயற்பட்டுவரும் இந்த நல்லாட்சி அரசாங்கத்துடன் தமிழர் தரப்பாகிய எம்மை இணங்கிப் போகுமாறு போதிக்கும் அனைத்துலக நாடுகள் இதற்கு பொறுப்பேற்றேயாக வேண்டும் எனவும், நாங்கள் எழுப்பும் தார்மீக கேள்விகளை அனைத்துலக நாடுகளும் மனித உரிமை அமைப்புகளும் ஐக்கிய நாடுகள் சபையும் இலங்கை அரசாங்கத்தை நோக்கி எழுப்பியே ஆகவேண்டும் எனவும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இலங்கையில் இரகசிய சித்திரவதை முகாம்கள் இருப்பதையும், அதில் தமிழர்கள் தடுத்து வைக்கப்பட்டிருப்பது குறித்தும் அனைத்துலக மனித உரிமை பிரதிநிதிகள் ஆதாரங்களுடன் வெளியிட்டிருந்தார்கள் எனவும், இதனை முன்னாள் சனாதிபதியும், இச்சம்பவங்களுடன் நேரடியாக தொடர்புடையவரும், ஆட்சிக்காலத்தில் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாகவும் முப்படைகளின் தலைவராகவும் விளங்கிய மஹிந்த ராஜபக்ஷ ஏற்றுக்கொண்டிருந்தார் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

அது மட்டுமின்றி அவ்வாறு இரகசிய சித்திரவதை முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் தமிழர்கள் குறித்த பட்டியலை வெளியிடுவதாகவும் மஹிந்த ராஜபக்ஷ அனைத்துலக மன்றத்தில் வாக்குறுதியளித்திருந்தார் என்பதையும் அனந்தி சசிதரன் சுட்டிக்காட்டியுள்ளார்.

2015 ஆண்டு சனவரி 08 இற்கு முன்னர் இருந்த இரகசிய சித்திரவதை முகாம்கள் வேண்டுமானால் இன்று இல்லாது போயிருக்கலாம் என்ற போதிலும், அவற்றில் சட்டவிரோதமாக தடுத்துவைக்கப்பட்டு சித்திரவதைக்குள்ளாக்கப்பட்ட தமிழர்கள் எவ்வாறு இல்லாமல் போனார்கள் எனவும் கேள்வி எழுப்பியுள்ள அவர், இதற்கு இந்த நல்லாட்சி அரசாங்கமே முழுப்பொறுப்பேற்க வேண்டும் எனவும் வலியுறுத்தி்யுள்ளார்.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *