முக்கிய செய்திகள்

Warning: Invalid argument supplied for foreach() in /home/vmctr24/public_html/wp-content/themes/nanomag/news-ticker.php on line 15

உலக அளவில் வியாபித்துவரும் பயங்கரவாத வலையமைப்பிலிருந்து தன்னைப் பாதுகாத்துக்கொள்ளும் நிலையில் கனடா இல்லை என்று நிபுணர்கள் கருத்து வெளியிட்டுள்ளனர்.

1780

உலக அளவில் வியாபித்துவரும் பயங்கரவாத வலையமைப்பிலிருந்து தன்னைப் பாதுகாத்துக்கொள்ளும் நிலையில் கனடா இல்லை என்று நிபுணர்கள் கருத்து வெளியிட்டுள்ளனர்.

நியூ யோர்க் நகரின் முக்கிய மையங்களைக் குணடு வைத்து தகர்க்கும் திட்டத்தினை முன்னெடுத்ததான குற்றச்சாட்டினை, கனேடிய பதின்மவயது இளைஞர் ஒருவர் அமெரிக்க அதிகாரிகளிம் ஒத்துக்கொண்டுள்ள சம்பவத்தின் பின்னணில் இந்த கருத்து வெளியிடப்பட்டுள்ளது.

நேற்று குறித்த இந்த தகவலை வெளியிட்டுள்ள அமெரிக்க நீதித்துறை, நியூயோர்க் நகரின் மக்கள் நெரிசல் மிகுந்த பகுதிகளில் பயங்கரவாதத் தாக்குதல்களை மேற்கொண்வற்கு கடந்த ஆண்டு மேற்கொள்ளப்பட் சதித்திட்டத்தில் கனேடியர் ஒருவர் தொடர்புபட்டுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

மிசிசாகாவைச் சேர்ந்த 19 வயதான அப்துல்றஹ்மான் எல் பஹ்நாஸ்வி(Abdulrahman El Bahnasawy) எனப்படும் அந்த இளைஞர், குறித்த அந்த குண்டுத் தாக்குதல் சதிமுயற்சியில் தொடர்பு பட்டுள்ளதுடன், அவர் அந்தத் தாக்குதலுக்கான குண்டுதயாரிக்கும் பொருட்களை கொள்வனவு செய்துள்ளதாகவும் அதில் தெரிவிக்கப்படுகிறது.

இவ்வாறான நிலையிலேயே இது குறித்து கருத்து வெளியிட்டுள் நிபுணர்கள், உலக அளவில் வேகமாக வியாபித்துவரும் பயங்கரவாத வலையமைப்பின் அச்சுறுத்தலில் இருந்து தன்னைத் தற்காத்துக் கொள்ளும் வகையிலான தகைமை கனடாவிடம் இல்லை என்பதனை இந்தச் சம்பவம் வெளிக்காட்டுவதாக தெரிவித்துள்ளனர்.

இந்தச் சம்பவமானது ஐ.எஸ் அமைப்பின் திட்டங்களிலும் போக்கிலும் மாற்றங்கள் ஏற்பட்டுளளதைக் காட்டுவதாகவும், அவர்களின் பாரம்பரிய பிராந்தியங்களான சிரியா மற்றும் ஈராக் ஆகிய நாடுகளுக்கும் அப்பால் அவர்களின் பார்வை திரும்ப ஆரம்பித்துள்ளதை இந்த சம்பவம் உணர்த்துவதாகவும், லண்டனைத் தளமாகக் கொண்ட “மூலோபாய கலந்துரையாடல்” அமைப்பின் மூத்த ஆய்வாளர் அமர்நாத் அமரசிங்கம் தெரிவித்துள்ளார்.

குறித்த அந்த கனேடியர் தனது செயற்பாடுகளுக்கான தொடர்புகளையும், ஆலோசனைகளையும், ஆதரவையும் தேடிவந்ததாக குறிப்பிடும் அந்த அமெரிக்க ஆவணம், அந்த கனேடியருக்கு ஐ.எஸ் அமைப்புடன் தொடர்பு இருந்தமைக்கு சிறிதளவு சானறுளையே கூறியுள்ள நிலையில், இது தவறான புரிதல்களை ஏற்படுத்திவிடக்கூடும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இளம் வயது கனேடியர் ஒருவர் இவ்வாறு குண்டுகளை தயாரிக்கும் நுட்பங்களை பாக்கிஸ்தானில் இருக்கும் ஐ.எஸ் அமைப்பின் உறுப்பினரிடமிருந்தும், அதற்கான நிதி உதவியை பிலிப்பீன்சில் உள்ள ஐ.எஸ் வலையமைப்பிலிருந்தும் பெற்றுக்கொண்டுள்ள நிலையில், இதனை சாதாரணமாக நோக்கிவிட முடியாது என்பதையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஐ.எஸ் அமைப்பானது ஈராக் மற்றும் சிரியாவில் தமது பிடிகளை இழந்துவரும் நிலையில், அதற்கு சமாந்தரமாகவும் சமமாகவும் வேறு பிராந்தியங்களில் தமது வலையப்பினை வியாபிக்கும் வாய்ப்புகள் உள்ளதாகவும், அந்த வகையில், மேற்குலக நாடுகள் மீதான தாக்குதல் அச்சுறுத்தல்களை இவ்வாறான சம்பவங்கள் உணர்த்துவதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *