முக்கிய செய்திகள்

Warning: Invalid argument supplied for foreach() in /home/vmctr24/public_html/wp-content/themes/nanomag/news-ticker.php on line 15

எதிர்வரும் அரச தலைவர் தேர்தலுக்கு பொது தமிழ் வேட்பாளர் ஒருவரை முன்னிறுத்த வேண்டும்

518

எதிர்வரும் அரச தலைவர் தேர்தலுக்கு பொது தமிழ் வேட்பாளர் ஒருவரை முன்னிறுத்த வேண்டும் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் சில நாடாளுமன்ற உறுப்பினர்கள் , யோசனையொன்றை முன்வைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
வடக்குக் கிழக்குப் பிரச்சினைக்கு இதுவரையில் உரிய தீர்வொன்று எட்டப்படாத நிலையிலேயே,இந்த யோசனையை முன்வைத்துள்ளதாக கூறப்படுகின்றது.
நீண்ட காலமாக அரச தலைவர் தேர்தலுக்காக தமிழ் வேட்பாளர் ஒருவரை முன்னிறுத்தாததன் காரணமாக , தமிழ் மக்களின் நலன் குறித்து சிந்திப்பதற்கான தலைமைகள் தற்போது இல்லை எனவும் இதன்போது சுட்டிக்காட்டப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த விடயம் தொடர்பில், இலங்கைத் தமிழ் மக்கள் மீது அக்கறை கொண்டுள்ள, இந்தியா உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளும் கேள்விகளை எழுப்பியுள்ளதாக,தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர், கூட்டமைப்பின் மத்திய செயற்குழுவுக்கு அறிவித்துள்ளனர்




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *