முக்கிய செய்திகள்

Warning: Invalid argument supplied for foreach() in /home/vmctr24/public_html/wp-content/themes/nanomag/news-ticker.php on line 15

கண்டிக் கலவரம் மேலெழுந்தவாரியாகப் பார்க்கின்ற போது , அதன் பின்னணியில் மக்களுக்குத் தெரியாத புரியாத பல அந்திய சக்திகளின் நேரடியான அல்லது மறைமுகமான பங்களிப்புகள் இருந்துள்ளதை அவதானிக்க முடியும் – வடமாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன்

1440

கண்டிக் கலவரம் மேலெழுந்தவாரியாகப் பார்க்கின்ற போது உள்ளூரளவிலான ஒரு இனமுறுகல் சம்பவமாகத் தோன்றினாலும், அதன் பின்னணியில் மக்களுக்குத் தெரியாத புரியாத பல அந்திய சக்திகளின் நேரடியான அல்லது மறைமுகமான பங்களிப்புகள் இருந்துள்ளதை அவதானிக்க முடியும் என்று வடமாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

திருகோணமலையில் மூலோபாய கற்கை நிலையத்தை திறந்து வைக்கும் நிகழ்வு நேற்று நடைபெற்ற நிலையில், அதில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

இலங்கை வரலாற்றில் ஒவ்வொரு கலவரமும் ஒவ்வொரு நோக்கங்களை நிறைவேற்றுவதற்காக இயற்றப்பட்டது என்பது வெளிப்படையாகின்றது எனவும், ஒரு சிறுபான்மை இனத்தினுடைய வளர்ச்சியை அல்லது இருப்பை சீர்குலைப்பதற்காகவே திட்டமிட்டு செய்யப்படுகின்ற கலவரங்கள் இவை என்பது கடந்த கால அனுபவங்கள் வாயிலாக வெளிப்படுகின்றன எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

1958ஆம் ஆண்டு, 1977ஆம் ஆண்டு மற்றும் 1983ஆம் ஆண்டுக் கலவரங்கள், தென்னிலங்கையில் தமிழ் மக்களைப் பொருளாதார ரீதியில் பலவீனமாக்குவதற்கும், அவர்களின் இருப்பைக் கேள்விக்குறியாக்குவதற்குமான செயற்பாடாகவே இருந்தன என்பதையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

தமிழ் மக்களின் வளர்ச்சி கடந்த 30 ஆண்டு காலப் போரால் வெகுவாகப் பின்தள்ளப்பட்டுள்ள நிலையில், நாட்டின் இன்னொரு சிறுபான்மை இனமாகிய முஸ்லிம்கள் பொருளாதார ரீதியில் வலுப்பெற்று வருவதை சகிக்க முடியாத பெரும்பான்மை இனத்தின் ஒரு பகுதியினரால் அண்மையில் கலவரங்கள் முடுக்கி விடப்பட்டுள்ளன என்றே கொள்ள வேண்டியுள்ளது எனவும் அவர் விபரித்துள்ளார்.

அதன் பின்னணியில் பல்வேறு அரசியல் காரணங்களும் இருந்ததாக சந்தேகங்கள் வெளிப்பத்தப்பட்டுள்ளன எனவும், அரசியல்வாதிகள் தங்களுடைய பதவிகளைக் காப்பாற்றுவதற்கோ அல்லது பதவிகளை அடைவதற்கோ அல்லது தமது எதிர்கால அரசியல் நோக்கங்களை முன்னெடுத்துச் செல்வதற்கோ இந்தச் சம்பவங்கள் உபயோகப்படுத்தப்பட்டுள்ளன என்று பலர் ஊகம் வெளிப்படுத்தியுள்ளதாகவுமத் அவர் தெரிவித்துள்ளார்.

இது இலங்கை அரசியலில் புதியதொரு அத்தியாயம் அல்ல எனவும், பழையவை புதிய போத்தல்களில் வெளிவருகின்றன என்பதே மக்களின் அவதானம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தமிழ் மக்களுக்கான அரசியல் மாற்றங்கள் மற்றும் பூகோள அரசியல் மாற்றங்களுக்கேற்ப தமிழ் மக்களின் வாழ்க்கையை வழிநடத்தக்கூடிய வகையில் அரசியல் முன்னெடுப்புக்கள் இனி வருங்காலங்களில் முன்னெடுத்துச் செல்லப்பட வழிவகுக்க வேண்டும் எனவும் முதலமைச்சர் விக்னேஸ்வரன் மேலும் தெரிவித்துள்ளார்.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *