முக்கிய செய்திகள்

Warning: Invalid argument supplied for foreach() in /home/vmctr24/public_html/wp-content/themes/nanomag/news-ticker.php on line 15

குறைபாடு உள்ள அரசியல் தீர்வை ஏற்க முடியாது என்று முதலமைச்சர் விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

1555

இலங்கை அரசாங்கம் தருகின்றார்கள் என்பதற்காக, தருவதை தரட்டும் என்று குறைபாடு உள்ள தீர்வினை பெற்றுக்கொள்ள முடியாது என்று வடமாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

தமிழ் மக்கள் பேரவையின் கூட்டம் யாழ்.பொது நூலகத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை காலை இணைத்தலைவர்களான வடமாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன், மருத்துவர் லக்ஸ்மன் மற்றும் வரதராஜா ஆகியோர் தலைமையில் நடைபெற்றது.

குறித்த கூட்டத்தில் தமிழ் தேசிய மக்கள் முன்னணி, அகில இலங்கை தமிழ் காங்கிரஸ், ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி, சிவில் அமைப்புக்கள் உள்ளிட்ட தமிழ் மக்கள் பேரவையினர் கலந்து கொண்டு இருந்தனர்.

இந்தக் கூட்டத்தின் முடிவில் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட முதலமைச்சர் விக்னேஸ்வரன், குறைப்பாடு உள்ள அரசியல் தீர்வை தமிழ் தேசிய கூட்டமைப்பு தற்காலத்தில் பெற்றுக்கொண்டால், அதில் இருந்து என்றென்றைக்கும் நாங்கள் விடுபட முடியாது என்பதனைச் சுட்டிக்காடடியுள்ளார்.

அரசாங்கம் தருவதை தரட்டும் – நாங்கள் எங்களின் அடிப்படை உரிமையில் இருந்து விடுபடவில்லை எனும் கொள்கையை தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைமை வெளிப்படுத்த வேண்டும் எனவும், நாங்கள் அனைவரும் சேர்ந்து குறைபாடு உள்ள குறைந்த தீர்வினை பெற்றுக்கொண்டால், வருங்கால சந்ததி அதனால் மிகவும் பாதிப்படைய போகின்றது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தற்காலத்தில் கூட வடமாகணத்தில் மக்கள் தொகையில் மாற்றங்களை ஏற்படுத்த பலரும் பல பிரயத்தனங்களை ஏற்படுத்திக்கொண்டு இருக்கின்றார்கள் எனவும், இவ்வாறான சந்தர்ப்பத்தில் குறைபாடு உள்ள தீர்வினை ஏற்றுக்கொள்வது உகந்ததல்ல என்பதையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

உள்ளூராட்சித் தேர்தலில் நல்ல தகமையுடையவர்களைக் கொண்டுவரப்பட வேண்டும் எனவும், அதற்காக கட்சிக்காக உழைப்பவர்கள், தங்களுடன் சேர்ந்திருப்வர்களை மாத்திரம் சேர்க்காமல், அந்தந்த துறைகளில் தகுதியுடையவர்களைச் சேர்க்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

என்னனென்ன குணாம்சம் ஒரு தவிசாளருக்கு இருக்க வேண்டுமோ, அவற்றை கொண்டவரையே அந்தப் பதவிக்கு நியமிக்க வேண்டும் எனவும், அதனைவிடுத்து கட்சி ரீதியாக தமக்குத் தேவையானவர்களை மாத்திரம் எடுக்க கூடாது என்றும், இளைஞர்கள் இளம் பெண்களில் படித்த பட்டதாரிகளை வேட்பாளர்கள் பட்டியலுக்குள் உள்வாங்கவேண்டும் எனவும் முதலமைச்சர் விக்னேஸ்வரன் மேலும் தெரிவித்துள்ளார்.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *