முக்கிய செய்திகள்

Warning: Invalid argument supplied for foreach() in /home/vmctr24/public_html/wp-content/themes/nanomag/news-ticker.php on line 15

கேப்பாப்பிலவு மக்கள் போராட்டத்துக்கு தொடரும் ஆதரவு

1142

தமது சொந்த நிலங்களே தமக்கு வேண்டும் எனத்; தெரிவித்து கடந்த 13 நாட்களாக தொடர்ந்து போராட்டம் நடத்திவரும் கேப்பாப்பிலவு மக்களின் போராட்டம் இடம்பெறும் இடத்துக்கு இன்றையதினம் சென்ற வடக்கு மாகாண சபை அவைத்தலைவர் சீ.வீ.கே.சிவஞானம், வடக்கு மாகாண எதிர்க்கட்சித் தலைவர் சி.தவராசா மற்றும் மாகாண சபை உறுப்பினர்கள் சென்றுள்ள நிலையில் யாழ்ப்பாணத்திலிருந்து சென்ற வல்லமை எனும் அமைப்பினர், விமானப்படைத்தளத்திற்கு முன்னால் ஆர்ப்பாட்டமொன்றையும் நடத்தியுள்ளனர்.

மேலும் அகில இலங்கை பொது ஊழியர் சங்கம் மற்றும் வெளிமாவட்டங்களைச் சேர்ந்த சமூக அமைப்பினர் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் அங்கு சென்று ஆதரவு தெரிவித்துள்ளதுடன் வட்டுக்கோட்டை இந்து வாலிபர் சங்கத்தினர் சுமார் 1 இலட்சம் ரூபா பெறுமதியான உலர் உணவு பொருட்கள் உள்ளிட்ட சில அத்தியாவசிய பொருட்களையும் வழங்கிவைத்துள்ளனர்.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *