முக்கிய செய்திகள்

Warning: Invalid argument supplied for foreach() in /home/vmctr24/public_html/wp-content/themes/nanomag/news-ticker.php on line 15

கொரியப் போரில் கொல்லப்பட்ட அமெரிக்கர்கள் என்று நம்பப்படுபவர்களின் உடற்பாகங்களை வடகொரியா அமெரிக்காவிடம் வழங்கியுள்ளது

545

கொரியப் போரில் கொல்லப்பட்ட அமெரிக்கர்கள் என்று நம்பப்படுபவர்களின் உடற்பாகங்களை வடகொரியா அமெரிக்காவிடம் வழங்கியுள்ளது.

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பும் வட கொரியத் தலைவர் கிம் யொங் உன்னும் கடந்த யூன் மாதம் சிங்கப்பூரில் நடாத்திய உச்ச நிலைச் சந்திப்பின்போது, கொரியப் போரில் மாண்ட அமெரிக்கர்களின் எஞ்சிய உடற்பாகங்கள் திருப்பி அனுப்பப்படும் என்று வட கொரியா உறுதியளித்திருந்த நிலையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ள்பபடுகிறது.

கிட்டத்தட்ட 65 ஆண்டுகளுக்குப் பின் நாடு திரும்புகின்ற அந்த உடல் பாகங்களை மீட்டுகொள்வதற்காக வடகொரியா சென்ற அமெரிக்க இராணுவ விமானம் அவற்றை மீட்டுக்கொண்டு வட கொரியாவை விட்டுப் புறப்பட்டு முதலில் தென் கொரியாவிலுள்ள ஓசன் (Osan) ஆகாயப்படைத் தளத்திற்குச் சென்றுள்ளது.

அங்கு இராணுவ மரியாதையுடன் மரணித்தவர்களின் எஞ்சிய உடற்பாகங்களை அமெரிக்க இராணுவத்தினர் பெற்றுக்கொண்டதைத் தொடர்ந்து, ஹவாயியிலுள்ள இராணுவக் கழகத்திற்கு உடற்பாகங்கள் அனுப்பிவைக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.

அங்கு உடற்பாகங்கள் யாருக்குச் சொந்தமானவை எனும் சிக்கலான தடயவியல் ஆய்வு மேற்கொள்ளப்பட இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரியப் பொரில் 36,000க்கும் அதிகமான அமெரிக்க இராணுவ வீரர்கள் கொல்லப்பட்டதாக தெரிவிக்க்பபட்டுள்ளது.

அதில் ஏறக்குறைய 7,700 வீரர்கள் குறித்த தெளிவான தகவல்கள் ஏதுமில்லாத அதேவேளை அவர்களின் கிட்டத்தட்ட 5,300 வீரர்கள் வட கொரியாவில் இறந்திருக்கக் கூடும் என்று நம்பப்படுகிறது.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *