முக்கிய செய்திகள்

Warning: Invalid argument supplied for foreach() in /home/vmctr24/public_html/wp-content/themes/nanomag/news-ticker.php on line 15

தமிழரின் தாயக பூமி தமிழ் மக்களி்ன் கை தவறிப் போனால் இந்தியாவின் பாதுகாப்புக்கு ஆபத்து

1399

தமிழரின் தாயக பூமியான, வடக்கு– – கிழக்கு மாகாணம் தமிழரின் கையை விட்டுச் சென்றால் இந்தியாவின் பாதுகாப்பு கேள்விக் குறியாகும் எனவும், எனவே இந்தப் பேராபத்தைக் கருத்திற் கொண்டு – கரிசனையில் எடுத்து, இந்திய அரசு தமது அயலுறவுக் கொள்கையில் மாற்றங்களை உடனடியாகக் கொண்டு வரவேண்டும் என்றும் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

இந்தியப் பத்திரிகையாளர் ராமகிருஸ்ணன் எழுதிய ‘ஓர் இனப்பிரச்சினையும் ஓர் ஒப்பந்தமும்’ என்ற நூல் அறிமுக விழா நல்லூரில் நேற்று மாலை இடம்பெற்ற நிலையில், இதில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

இலங்கை – இந்திய ஒப்பந்தத்தின் ஊடாகவே வடக்கு – கிழக்கு மாகாணங்கள் இணைக்கப்பட்ட என்பதையும், பின்னர் காலப்போக்கில் அரசின் மாற்றங்களால் அவை நீதிமன்றத்தின் ஊடாகப் பிரிக்கப்பட்ட என்பதையும் சுட்டிக்காட்டியுள்ள அவர், இரண்டு நாடுகளுக்கு இடையிலே செய்து கொள்ளப்பட்ட ஒப்பந்தம் மாற்றமடையும் போது, அதில் சம்பந்தப்பட்ட நாடான இந்தியா அதில் அக்கறை காட்டவில்லை எனவும் அவர் சாடியுள்ளார்.

வடக்கு – கிழக்கு மாகாணம் பிரிக்கபட்டதன் விளைவாக தற்போது கிழக்கு மாகாணம் பெரும்பான்மை சமூகத்தின் பிடிக்குள் சிக்கி விட்டது எனவும், இப்போது வடமாகாணத்தையும் குறிவைத்து திட்டமிட்ட சிங்களக் குடியேற்றங்கள் மேற்கொள்ளபட்டு வருகின்றன என்றும், சிங்கள அரசு தனது நிகழ்ச்சி நிரலை அன்றைய காலத்தில் இருந்து இன்று வரை மாற்றவில்லை என்பதுடன், அவர்களின் திட்டங்கள் தொடர்ச்சியாக இடம்பெற்றுவருகின்றன எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

நாம் ஆரம்ப காலத்தில் இருந்து இறுதியாக முள்ளிவாய்க்காலில் இலட்சக்கணக்கான மக்கள் கொல்லப்படும் வரை இந்தியாவையே நம்பினோம் எனவும் தெரிவித்துளள அவர், 7 கோடி தமிழ் மக்களை கொண்ட தமிழ் நாட்டுக்கு தனியான அரசு அமைக்கப்பட்டு அதிகார பரவலாக்கம் வழங்கபட்டுள்ள போதிலும், வடக்கு கிழக்கின் பூர்வீக குடிகளான எமக்கு என்ன வழங்கப்பட்டுள்ளது எனவும் கேள்வி எழுப்பியுள்ளார்.

எமது இனத்தின் பிரச்சனைக்குத் ஒரு தீர்வினை கொடுக்க வேண்டும் என்பதற்காகவும், இந்தியாவின் பாதுகாப்புக்காகவுமே இலங்கை இந்திய ஒப்பந்தம் செய்து கொள்ளப்பட்டது எனவும், ஆனால் இன்றோ தென்னிலங்கையில் சீனாவின் ஆதிக்கம் மேலோங்கியுள்ளது என்றும் அவர் கூறியுள்ளார்.

இதே ஆதிக்கம் தொடருமானால், தமிழ் தரப்பிடம் இருந்து வடக்கு – கிழக்கு மாகாணங்கள் பறிபோகும் நிலை இங்கும் ஏற்படும் எனவும், இதனால் எமக்கு மட்டுமன்றி, இந்தியாவின் பாதுகாப்புக்கும் அது அச்சுறுத்தலாக அமையும் என்பதை இந்திய அரசு புரிந்து கொள்ள வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

எனவே இந்தியா தமது அயலுறவுக் கொள்கையில் மாற்றத்தை கொண்டு வரவேண்டும் எனவும் சுரேஷ் பிரேமச்சந்திரன் மேலும் தெரிவித்துள்ளார்.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *