முக்கிய செய்திகள்

Warning: Invalid argument supplied for foreach() in /home/vmctr24/public_html/wp-content/themes/nanomag/news-ticker.php on line 15

தமிழை அரச கருமமொழியாக மாற்றுவதற்கு எதிர்ப்பு!

1093

தமிழை அரச கருமமொழியாக மாற்றுவதற்கு இலங்கையின் முன்னாள் சனாதிபதி மகிந்த ராஜபக்ச எதிர்ப்புத் தெரிவித்துள்ளார்.

தமிழ் மற்றும் சிங்கள மொழி ஆகிய இரண்டையும் அரசாங்கத்தின் உத்தியோகபூர்வ மொழியாக மாற்றுவது தொடர்பில் அரசியல் நிர்ணயசபை யோசனை ஒன்றை முன்வைத்துள்ள நிலையிலேயே, தமிழை அரச கரும மொழியாக மாற்றும யோசனைக்கு கண்டனம் தெரிவித்து இன்று அறிக்கை ஒன்றையும் அவர் வெளியிட்டுள்ளார்.

குறித்த அந்த அறிக்கையில், வடக்குக் கிழக்கில் தமிழர்கள் பெரும்பான்மையாக வாழ்ந்தமையினால் கடந்த 1957 ஆம் ஆண்டும் தந்தை செல்வாவினால் தமிழ் மொழியை அரச கரும மொழியாக்குவது தொடர்பான தீர்மானம் முன்வைக்கப்பட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.

அதேபோன்று சிங்கள மக்கள் பெரும்பான்மையாக வாழும் இலங்கையில் சிங்கள மொழி உத்தியோகபூர்வ மொழியாக பயன்படுத்தப்படுவதாக குறிப்பிட்டுள்ள அவர், இதற்கு உதாரணமாக, அயல் நாடான இந்தியாவில் பல மொழிகள் இருந்தும் ஹிந்தியே அரச கரும மொழியாக பயன்படுத்தப்பட்டு வருவதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

கடந்த 6 தசாப்தகாலமாக இலங்கையில் இருக்கும் சட்டங்களை மாற்றுவதற்கு நல்லாட்சி அரசாங்கம் முயற்சிக்க கூடாது எனவும் கேட்டுக்கொண்டுள்ளார்.

புதிய அரசியல் சாசனத்தை தயாரிக்கும் பணிகளில் நல்லாட்சி அரசாங்கம் சிறப்புக் கவனம் செலுத்த வேண்டும் எனவும், கடந்த சனாதிபதி தேர்தல் பிரச்சாரத்தின் போது இரண்டு பிரதான வேட்பாளர்களும் அரசியல் சீர்த்திருத்தம் தெடர்பில் பல்வேறு வாக்குறுதிகளை வழங்கியதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

தமிழ் மற்றும் சிங்கள மொழிகளை அரச கரும மொழிகளாக மாற்றும் யோசனைக்கு சிறிலலங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினர்கள் ஆதரவளிக்க கூடாது என்றும் வலியுறுத்திய மகிந்த ராஜபக்ச, நாட்டை தவறான வழிக்கு மதபோதகர்கள் வழிநடத்திச் செல்வதாகவும் குற்றம் சுமத்தியுள்ளார்.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *