முக்கிய செய்திகள்

Warning: Invalid argument supplied for foreach() in /home/vmctr24/public_html/wp-content/themes/nanomag/news-ticker.php on line 15

தேசத்தின் குரல் அன்ரன் பாலசிங்கம் அவர்களின் 10ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு இன்று யாழ்ப்பாணத்திலும் இடம்பெற்றுள்ளது.

1493

தேசத்தின் குரல் அன்ரன் பாலசிங்கம் அவர்களின் 10ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் யாழ்ப்பாணத்தில் இன்று இடம்பெற்றுள்ளன.

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் அவர்களின் கட்சி அலுவலகத்தில் இன்று காலை இடம்பெற்ற நினைவேந்தல் நிகழ்வில், கட்சியின் அங்கத்தவர்கள் மற்றும் பொது மக்கள் கலந்து கொண்டிருந்தனர்.

நிகழ்வில் ஈகச் சுடரினை காரைநகர் சரஸ்வதி வித்தியாலய அதிபர் சிவகுரு இளங்கோ ஏற்றிவைத்ததைத் தொடர்ந்து, மலர்வணக்கமும், தேசத்தின் அங்கீகாரத்திற்கான போராட்டத்தில் உயிர் நீத்த மாவீரர்கள் பொது மக்களுக்கு அகவணக்கமும் செலுத்தப்பட்டது.

தொடர்ந்து யாழ் ஊடக அமையத்தின் தலைவர் இரட்ணம் தயாபரன், காரைநகர் சரஸ்வதி வித்தியாலய அதிபர் சிவகுரு இளங்கோ, மற்றும் கட்சியின் பொதுச் செயலாளர் செல்வராசா கஜேந்திரன் ஆகியோர் உரையாற்றினர்.

இது தவிர தாயகத்தின் மேலும் பல இடங்களிலும், உலகப் பரப்பெங்கும் தமிழர் வாழும் தேசங்கள் அனைத்திலும் இன்று தேசத்தின் குரலின் நினைவாக பல்வேறு நிகழ்வுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

தமிழீழ விடுதலைப் போராடடத்தில் மூத்த அரசியல் போராளியாகவும், மதியுரைஞராகவும், அரசியல் ஆலோசகரும், தத்துவ ஆசிரியருமாக, தமிழீழ தேசியத் தலைவருக்கு அருகில் இருந்து விடுதலைப் பேராட்டத்திற்கு ஊக்கமும் ஆக்கமும் அளித்துவந்த அன்ரன் பாலசிங்கம் அவர்கள், 2006ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 14ஆம் நாள் தனது 68 ஆவது வயதில் இலண்டனில் காலமானமை குறிப்பிட்ததக்கது.

தமிழீழ விடுதலைப்போராட்டத்தின் அரசியல் நகர்வுகளில் தமிழீழ தேசியத்தலைவர் அவர்களிற்கு பக்கபலமாக இருந்து செயற்பட்ட அன்ரன் பாலசிங்கம் அவர்களின் மறைவு தமிழீழ மக்களின் விடுதலைப்போராட்ட பாதையில் நிரப்பமுடியாத வெற்றிடமாக உணரப்படுகிறது.

தமிழ் மக்களின் சுதந்திரப் போராட்டத்தை உலக அரங்கில் முன்னிறுத்திய பெரும் போராட்டப் பணிக்காக தமிழீழத் தேசியத் தலைவர் அவர்கள் தேசத்தின் குரல் என்ற மாபெரும் மதிப்பினை அன்ரன் பாலசிங்கம் அவர்களுக்கு வழங்கி கெளரவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *