முக்கிய செய்திகள்

Warning: Invalid argument supplied for foreach() in /home/vmctr24/public_html/wp-content/themes/nanomag/news-ticker.php on line 15

பருத்தித்துறை நகர சபையினையும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு EPDPயின் ஆதரவுடன் தம்வசப்படுத்தியுள்ளது.

2078

பருத்தித்துறை நகர சபையினையும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தமிழினத் துரோக ஆயுதக் குழுவாக செயற்பட்ட EPDPயின் ஆதரவுடன் தம்வசப்படுத்தியுள்ளது.

பருத்தித்துறை நகர சபை முதலாவது அமர்வு இன்றையநாள் உள்ளூராட்சி ஆணையாளர் பற்றிக் நிறைஞ்சன் தலைமையில் கூடியது.

அதன் போது தவிசாளராக தமிழ் தேசிய கூட்டமைப்பு ஜோசப் இருதயராஜாவை பிரேரித்த நிலையில், தமிழ் தேசிய மக்கள் முன்னணியினர் கணபதிப்பிள்ளை பாலசுப்பிரமணியத்தை பிரேரித்தனர்.

அதனை அடுத்து பகிரங்க வாக்கெடுப்பு நடத்தப்பட்ட போது, தமிழ் தேசிய கூட்டமைப்பின் 5 EPDPயின் இரண்டு உறுப்பினர்களும் ஜோசப் இருதயராஜாவுக்கு வாக்களித்தனர்.

தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஆறு உறுப்பினர்களும் கணபதிப்பிள்ளை பாலசுப்பிரமணியத்திற்கு வாக்களித்தனர்.

கேடய சின்னத்திலும், உதய சூரியன் சின்னத்திலும் போட்டியிட்டு வென்ற உறுப்பினர்கள் தலா ஒருவரும் நடு நிலமை வகித்தனர்.

அதனை அடுத்து 7 உறுப்பினர்களின் ஆதரவுடன் ஜோசப் இருதயராஜா தவிசாளாரக தெரிவானர்.

அதனை தொடர்ந்து உப தவிசாளராக தமிழ் தேசிய கூட்டமைப்பு மதினி நெல்சனை பிரேரித்த நிலையில், தமிழ் தேசிய மக்கள் முன்னணி சுப்பிரமணியம் கோகுலகுமாரை பிரேரித்தனர்.

அதனை தொடர்ந்து வாக்கெடுப்பு நடத்தப்பட்ட போது மதினி நெல்சன் தமிழ் தேசிய கூட்டமைப்பு உறுப்பினர்களின் ஆதரவுடனும் EPDPயின் ஆதரவுடனும் உப தவிசாளராக தெரிவானார்.

அதனை அடுத்து பருத்தித்துறை நகர சபை தவிசாளர் ஜோசப் இருதயராஜா சபையை ஒத்திவைத்தார்.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *