முக்கிய செய்திகள்

Warning: Invalid argument supplied for foreach() in /home/vmctr24/public_html/wp-content/themes/nanomag/news-ticker.php on line 15

பழமைவாதக் கட்சியின் புதிய தலைவராக ஆன்ரூ ஷியர்(Andrew Scheer) தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

1477

பழமைவாதக் கட்சியின் புதிய தலைவராக ஆன்ரூ ஷியர்(Andrew Scheer) நேற்று இரவு தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

கட்சித் தலைமைப் பதவிக்காக 13 பேர் போட்டியிட்ட நிலையில், அவருக்கு அடுத்த படியாக முன்னிலையில் இருந்த வேட்பாளரை விடவும் மிகச் சிறிய வித்தியாசத்தில் இவர் கட்சித் தலைமைப் பதவியைத் தனதாக்கிக் கொண்டுள்ளார்.

கட்சித் தலைமைப் பதவிக்கான வாக்கு எண்ணிக்கை விதிமுறைப்படி 13 சுற்று கணிப்பீடுகள் மேற்கொள்ளப்பட்ட நிலையில், புள்ளி அடிப்படையில் முதல் நிலையில் இருந்த முன்னாள் வெளியுறவு அமைச்சர் மக்சீம் பேர்னியரை மிகக் குறுகிய வித்தியாசத்தில் தோற்கடித்து, 51 சதவீத புள்ளிகளுடன் இவர் வெற்றி பெற்றுள்ளார்.

கனேடிய நாடாளுமன்ற சபாநாயகராகவும் பதவி வகித்துள்ள 38 வயதான ஆன்ரூ ஷியர்(Andrew Scheer), இந்த வெற்றியினைத் தொடர்ந்து, எதிர்வரும் 2019ஆம் ஆண்டு நடைபெறவுள்ள கனேடிய பொதுத் தேர்தலில், பிரதமர் ஜஸ்டின் ரூடோவுக்கு எதிராக பழமைவாதக் கட்சியை வழிநடாத்தும் பொறுப்பினை ஏற்றுக் கொண்டுள்ளார்
.andrew-jpg2

இந்த வெற்றியை அடுத்து ரொரன்ரோவில் தனது ஆதரவாளர்கள் மத்தியில் நேற்று இரவு உரையாற்றிய ஆன்ரூ ஷியர்(Andrew Scheer), கடசியின் உறுப்பினர்களிடையேயான ஒற்றுமையை வலியுறுத்தியுள்ளார்.

பழமைவாதிகள் பிரிவடைந்தமையால் எவ்வறான விளைவுகள் எதிர்நோக்கப்பட்டது என்பதனை அனைவரும் தற்போது நன்கு அறிந்து கொண்டுள்ள நிலையில், அவ்வாறான ஒரு நிகழ்வு இனியொருமுறை நிகழக்கூடாது எனவும், ஒன்றுபட்டு இருப்பதன்மூலமே வெற்றியினை சாதிக்க முடியும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

கட்சித் தலைமைத்துவத்துக்கான இநதத் தேர்தலில் சுமார் 2,59,000 உறுப்பினர்கள் வாக்களிக்கத் தகுதி பெற்றிருந்த நிலையில், 1,41,000 ற்கும் அதிகமானோர் வாக்களித்துள்ளதாகவும், கட்சிப் பிரதானிகள் மட்டத்தில் ஆன்ரூ ஷியருக்கு பலத்த ஆதரவு இருப்பதாகவும் கூறப்படுகிறது.
andrew

Andrew Scheer அவர்கள் மண்ணையும் மனங்களையும் நேசிக்கும் கனடிய தமிழ் வானொலியின் CTR கலையகத்திற்கு May 17 ஆம் நாளன்று நேரில் வருகை தந்ததுடன், அவருடனான நேர்காணலும் சிறப்பாக நடைபெற்றது.
நேர்காணலில், தமிழ் சமூகத்திற்கு, May 18 ஆம் நாளுக்குரிய, படுகொலை செய்யப்பட்ட தாயக மக்களை நினைவு கூர்ந்ததுடன் , அதற்குரிய அறிக்கையை வாசித்தார் என்பதும் தமிழ் மக்களுடன் தொடர்ந்தும் பயணிப்போம் எனவும், அவர்களுக்கான செயல்பாடுகளில் கவனம் செலுத்தவுள்ளதாகவும் கூறியமை குறிப்பிடத்தக்கது. பழமைவாதக் கட்சி தலைவராக தெரிவு செய்யப்பட்டால் தான் முன்னெடுக்கப் போகும் பணிகள் பற்றியும் எடுத்துரைத்தார்.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *