முக்கிய செய்திகள்

Warning: Invalid argument supplied for foreach() in /home/vmctr24/public_html/wp-content/themes/nanomag/news-ticker.php on line 15

பிரிட்டிஷ் கொலம்பியாவில் இடம்பெற்ற விமான விபத்தில் அல்பேர்ட்டாவின் முன்னாள் முதல்வர் உயிரிழந்துள்ளார்.

1662

பிரிட்டிஷ் கொலம்பியாவில் வியாழக்கிழமை இரவு இடம்பெற்ற விமான விபத்து ஒன்றில், அல்பேர்ட்டாவின் முன்னாள் முதல்வர் ஜிம் பிரென்ரிஸ்(Jim Prentice) உயிரழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பிரிட்டிஷ் கொலம்பியாவின் தென் பிராந்தியத்தில் அமைந்துள்ள காட்டுப் பகுதி ஒன்றில், சிறிய ரக விமானம் ஒன்று வியாழக்கிழமை இரவு வீழ்ந்து நொருங்கியதில், அதில் பயணித்த நான்கு பேரும் மாண்டுவிட்டதாக முன்னர் அறிவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இவ்வாறான நிலையிலேயே குறித்த அந்த விமானத்தில் பயணித்து  உயிரிழந்தவர்களில், முன்னாள் அல்பேர்ட்டா முதல்வரும் அவரது உறவினர் ஒருவரும் அடங்குவதாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

குறித்த அந்த இருவரும் விபத்துக்குள்ளான விமானத்தில் பயணித்தார்கள் என்பதனை உறுதிப்படுத்தி அவர்களது குடும்பத்தார் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஒரே நேரத்தி்ல் தமது குடும்பத்தில் இருவரை இழந்துள்ளமை நம்பமுடியாததாகவும், தாங்கமுடியா கவலையைத் தருவதாகவும் அமைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தனது 60ஆவது வயதில் அகால மரணத்தைத் தழுவியுள்ள முன்னார் முதல்வர் ஜிம் பிரென்ரிஸ், முன்னதாக மத்திய அரசாங்கத்தின் அமைச்சரவையிலும் பதவி வகித்துள்ளதுள்ளதுடன், 2015ஆம் ஆண்டிலிருந்து அரசியலில் இருந்து ஒதுங்கிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை இவரது மறைவு தொடர்பில் அனுதாபம் வெளியிட்டுள்ள பிரதமர் ஜஸ்டின் ரூடோ, ஒரு வழங்கறிஞராகவும், வர்தகராகவும், அரசியல்வாதியாகவும் தனது பணிகளில் ஜிம் பிரென்ரிஸ் ஆழமான நம்பிக்கையினை ஏற்படுத்தியுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

நாடாளுமன்றிலும், அனைத்துக் கட்சி உறுப்பினர்களாலும் அவர் மிகவும் மதிக்கப்பட்டார் எனவும், அனைவருடனும் அவர் சிறந்த உறவுகளைப் பேணி வந்ததாகவும், அவருடைய செயற்பாடுகள் அறிவு பூர்வமானதாகவும், நேர்மையானதாகவும் அமைந்திருந்ததாகவும் பிரதமர் தெரிவித்துள்ளார்.

பழங்குடியின மக்கள் விவகார அமைச்சு, கைத்தொழில் அமைச்சு உட்பட, மத்திய அரசாங்கத்தில் பல்வேறு பதவிகளையும் வகித்துள்ள ஜிம் பிரென்ரிசின் மறைவு நாட்டுக்கே பெரும் இழப்பு என்று எதிர்க்கட்சித் தலைவரும், பழமைவாதக் கட்சியின் இடைக்காலத் தலைவருமான றோனா அம்புறோஸ் கருத்து வெளியிட்டுள்ளார்.

அதேபோல நாட்டின் முக்கிய அரசியல் தலைவர்கள் உள்ளிட்ட முக்கியஸ்தர்கள் பலரும் அல்பேர்ட்டாவின் முன்னாள் முதல்வர் ஜிம் பிரென்ரிஸின் திடீர் மறைவு குறித்து தமது அனுதாபங்களை வெளியிட்டு வருகின்றனர்.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *