முக்கிய செய்திகள்

Warning: Invalid argument supplied for foreach() in /home/vmctr24/public_html/wp-content/themes/nanomag/news-ticker.php on line 15

பிரிட்டிஷ் கொலம்பியா காட்டுத்தீ: 300க்கும் அதிகமான வீடுகள் மற்றும் கட்டடங்கள் தீக்கீரை

1075

பிரிட்டிஷ் கொலம்பியாவில் மோசமான பாதிப்பினை ஏற்படுத்தியுள்ள காட்டுதீ காரணமாக, இதுவரை 300க்கும் அதிகமான வீடுகள் மற்றும் கட்டடங்கள் தீக்கிரையாகியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அழிவடைந்து போனதாக அடையாளம் காணப்பட்டவற்றில் 71 வீடுகளும், 116 கட்டடங்களும், மூன்று வர்த்தக நிலையங்களும் அடங்குவதாகவும், மேலும் 115 கட்டடங்கள் அழிவடைந்தள்ள நிலையில், அவை இன்னமும் அடையாளம் காணப்படவிலலை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கரிபோ பிராந்திய மாவட்டம், தோம்சன் நிக்கோலா பிராந்திய மாவட்டம், அஷ்கிராஃப்ட் பழங்குடியின மக்கள் பிராந்தியம் ஆகியனவே இந்த காட்டுத்தீப் பரவலால் கடுமையான பாதிப்புகளை எதிர்கொண்டுள்ளதாகவும், எனினும் உட்கட்டுமானங்கள் முற்றாக அழிவடையவில்லை எனவும் தெரிவிக்கப்படுகிறது.

பிரிட்டிஷ் கொலம்பியாவில் ஏப்ரல் மாதம் முதலாம் நாளில் இருந்து ஆரம்பமான குறித்த காட்டுத்தீ அனர்த்தத்தில், இதுவரை 840க்கும் அதிகமான இடங்களில் காட்டுத்தீப் பரவல் ஏற்பட்டுள்ளதுடன், அவற்றால் சுமார் 4,260 சதுரக் கிலோமீட்டர் பரப்பளவு எரிந்து அழிந்து போயுள்ளமை குறிப்பிடத்தக்கது.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *