முக்கிய செய்திகள்

Warning: Invalid argument supplied for foreach() in /home/vmctr24/public_html/wp-content/themes/nanomag/news-ticker.php on line 15

பெண்ணின் கர்ப்பத்தை உறுதி செய்யும் அறிகுறிகள்

1646

திருமணம் ஆன அனைவரும் ஆவலோடு எதிர்பார்ப்பது ஒரு குழந்தையைத்தான். ஒரு பெண் கர்ப்பம் ஆனதை உறுதி செய்வது எப்படி? எந்த மாதிரியான அறிகுறிகள் அந்தநேரத்தில் தோன்றும்? என்பது பற்றி பார்ப்போம்.
ஆணின் உயிரணுவும், பெண்ணின் கரு முட்டையும் இணைந்து கருத்தரித்தல் நிகழ்கிறது. கருத்தரித்தல் நடந்த 4 நாட்களுக்குப் பின்பே கருவானது கருப்பை நோக்கி நகர்ந்து வருகிறது. கருவானது கருப்பைக்குள் மிதந்து கொண்டிருக்கும் இந்நிலையிலேயே சில ரசாயன மாற்றங்களை உண்டாக்குகிறது.

இவை கருமுட்டையைப் பதியம் செய்வதற்கு கருப்பையைத் தயார்படுத்தும் சில அறிகுறிகள் ஆகும். கருத்தரித்த ஒரு வாரம் அல்லது அதற்குப் பின்புதான் கருப்பையுடன் கரு பதியமாகும். இத்தகைய சிக்கலான வேளையில் சில அறிகுறிகள் தோன்றும். அவற்றுள் குறிப்பிடத்தக்கவை:

அறிகுறிகள்: மாத விலக்கு தள்ளிப்போகுதல், குமட்டல், இரவிலும், பகலிலும் அடிக்கடி சிறுநீர் கழித்தல், புண்ணோ, அழற்சியோ இல்லாமல் வெள்ளைப்படுதல் வாசனையைக் கண்டால் நெடி உண்டாகுதல், மார்பகம் பெரிதாவது. அதில் தொட்டால் வலி ஏற்படும். மற்றும் மார்பக நரம்புகள் புடைத்துத் தெரியும். மார்பகக் காம்புகள் கருப்பாக மாறும் மலச்சிக்கல் இருப்பது போன்ற உணர்வு, புளி, ஐஸ், மாங்காய் போன்றவற்றின் மீது திடீரென ஏற்படும் ஆசை. இவை அனைத்தும் குழந்தையை எதிர்நோக்கும் ஒரு பெண்ணுக்கு, கருத்தரித்திருப்பதை உணர்ந்து கொள்ளலாம். இதை உறுதி செய்ய முறையாக மருத்துவரை அணுகுவது சிறந்தது.

இத்தகைய அறிகுறிகள் தெரிந்தவுடன் சம்பந்தப்பட்ட பெண் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். முதல் சில மாதங்கள் மிகவும் சிக்கலான மாதங்களாகும். இந்தக் காலத்தில் குழந்தையின் மூளை, நரம்பு மண்டலம், இதயம் போன்ற முக்கிய உறுப்புகளும், கை, கால்களும் உருவாகின்றன. இந்தக் காலக்கட்டத்தில் மருந்து, மாத்திரைகள் சாப்பிடுவது, எக்ஸ் ரே எடுப்பது, மது மற்றும் புகைப்பழக்கம் போன்றவற்றை தவிர்க்க வேண்டும். இல்லாவிட்டால் கருவில் உள்ள குழந்தை பாதிக்கப்படும்.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *