முக்கிய செய்திகள்

Warning: Invalid argument supplied for foreach() in /home/vmctr24/public_html/wp-content/themes/nanomag/news-ticker.php on line 15

போரில் மாண்ட வீரர்கள் இன்று கனடா முழுவதும் நினைவுகூரப்படுகின்றனர்.

1441

இதுவரை காலமும் பல்வேறு போர்களிலும் பங்குகொண்டு உயிர்நீத்த கனேடிய படை வீரர்கள் இன்று நாடளாவிய ரீதியில் நினைவுகூரப்படுகின்றனர்.

அனைத்து கனேடியர்களும் இன்று போர் வீரர்களை நினைவுகூரும் தருணத்தில், ஒட்டாவாவில் இடம்பெறவுள்ள பிரதான நிகழ்வில் ஆளுநர் நாயகம் டேவிட் ஜோன்ஸ்டன் மற்றும் பிரதமர் ஜஸ்டின் ரூடோ ஆகியோர் நேரில் கலந்துகொள்கின்றனர்.

அத்துடன் அங்கு அமைந்துள்ள தேசிய போர் நினைவுச் சதுக்கப் பகுதியில் இன்று பல்லாயிரக் கணக்கான மக்கள் ஒன்றுகூடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

உயிர்நீத்த வீரர்களின் தாய்மாரைப் பெருமைப்படுத்தும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் மாண்ட வீரர் ஒருவரின் தாயார் தேர்ந்தெடுக்கப்பட்டு வரும் நிலையில், ஆப்கானிஸ்தான் போரில் தனது மகனைப் பறிகொடுத்த பிரிட்டிஷ் கொலம்பியாவைச் சேர்ந்த பெண்மணி ஒருவர் இந்த ஆண்டு பெருமைப்படுத்தப்படுவதற்காக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

போரில் பங்குபற்றி உயிரிநீத்த அனைத்து வீரர்களதும் தாய்மாரை கெளரவிக்கும் வகையில், கொலீன் ஃபிட்ஸ்பற்ரிக்(Colleen Fitzpatrick) எனப்படும் அந்த தாயாருக்கு இன்று முடிசூட்டி பெருமைப்படுத்தப்படவுள்ளது.

ஒட்டாவில் இன்று பிரதான நினைவுகூரல் நிகழ்வு இடம்பெறும் அதேவேளை, நாடு தளுவிய நிலையில் இன்று சுமார் 1,400 இடங்களில் இவ்வாறன நினைவுகூரல் நிகழ்வுக்ள இடம்பெறவுள்ளதாக கூறப்படுகிறது.

இன்றைய இந்த நினைவுகூரல் நிகழ்வுகளை முன்னிட்டு ரொரன்ரோவில் வங்கிகள், தபால் நிலையங்கள், அரசாங்க அலுவலகங்கள், ஒருசில பூங்காக்கள் மற்றும் பொழுதுபோக்கு தலங்கள், நகர மண்டபம் உள்ளிட்டவை மூடப்பட்டிருக்கும் என்று தெரிவிக்கப்படுகிறது.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *