முக்கிய செய்திகள்

Warning: Invalid argument supplied for foreach() in /home/vmctr24/public_html/wp-content/themes/nanomag/news-ticker.php on line 15

மத்தள விமான நிலையம் இந்தியா வசமாவது, இலங்கை -இந்திய ஒப்பந்தத்தை விடவும் பாரதூரமானது என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது

1175

அம்பாந்தோட்டை – மத்தள விமான நிலையம் இந்தியா வசமாவதானது, இலங்கையின் தேசிய பாதுகாப்புக்குக் கடும் அச்சுறுத்தலாக அமையுமம் என்றும், இலங்கை -இந்திய ஒப்பந்தத்தை விடவும் இது பாரதூரமான நிலைமையைத் தோற்றுவிக்குமென்றும் நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.

மத்தள விமான நிலையம் இந்தியாவுக்கு விற்பனை செய்யப்படவுள்ளதாகக் குறிப்பிட்டு, நாடாளுடன்ற உறுப்பினர் விமல் வீரவன்சவினால் நேற்று விடுக்கப்பட்ட அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

இரண்டு பிரதான காரணிகளை முன்னிலைப்படுத்தியே கடந்த அரசாங்கத்தால் அந்த விமான நிலையம் நிர்மாணிக்கப்பட்டதாகவும், உலகின் மிகப்பெரிய 10 துறைமுகங்களில் ஒன்றான அம்பாந்தோட்டைத் துறைமுகத்துக்கு அருகில் விமானச் சேவைகளை ஊக்குவிப்பதும், அனைத்துலக விமானப் போக்குவரத்துப் பாதைகளை தொடர்புபடுத்தக்கூடிய பிரதான விமான தளமாக அமைப்பதுமே அந்த இரண்டு காரணிகள் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தற்போதும் 7 அனைத்துலக விமானப் போக்குவரத்துப் பாதைகள்,மத்தலயில் உருவாகியுள்ளதாகவும், 150 விமானச் சேவைகள் மத்தள விமான நிலையத்தின் வான்பரப்பைக் கடந்துப் பயணிப்பதாகவும், அவுஸ்திரேலியா, நியூசிலாந்து, சிங்கப்பூர் மற்றும் இந்தோனேசியா உள்ளிட்ட பல நாடுகளின் விமானச் சேவைகள் இந்த வான்பரப்பைக் கடந்துப் பயணிப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

இவ்வாறு பல காரணிகளால் மத்தள விமான நிலையத்தின் கேள்வி அதிகரித்துள்ள நிலையில், தற்போதைய அரசாங்கம் அந்த விமான நிலையத்தை அபிவிருத்தி செய்வதற்கு மாறாக, கடுநாயக்க விமான நிலையத்தின் விமான ஓடுபாதையை விஸ்தரிப்புச் செய்துள்ளமையானது, அநாவசியமான முதலீடு எனவும் அவர் குறற்ஞ்சாட்டியுள்ளார்.

இவ்வாறான விமான நிலையத்தை தற்போதைய ஆட்சியாளர்கள் குறைந்த பெறுமதிக்கு இந்தியாவுக்கு விற்பனை செய்வது ஏற்புடையதல்ல எனவும், குறித்த விமான நிலையத்துக்காகப் பெறப்பட்ட கடனை திருப்பிச் செலுத்துவதானது, திறைசேறிக்கு அழுத்தமாக அமையப்போவதில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மத்தளை விமான நிலையம் உட்பட சுமார் 40 ஏக்கர் நிலப்பரப்பை பாதுபாப்புப் பகுதி என்ற பேரில் இந்தியாவுக்கு வழங்க இலங்கை அரசாங்கம் திர்மானித்துள்ளதெனவும், இந்தியாவின் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் சிவசங்கர் மேனன் வெளியிட்டுள்ள புத்தகமொன்றில், இந்தியாவிலிருந்து 14 மைல்கள் தூரத்தில் இந்திய வானூர்திப் படையின் உலங்குவானூர்திகளை நிறுத்தி வைக்கக்கூடிய போர்க் கப்பல் என்று இலங்கையை வர்ணித்துள்ள நிலையில், திருகோணமலை துறைமுகத்தில் இந்தியா கால்பதிப்பதற்கான வாய்ப்பாகவும் இது அமைந்துவிடுமெனவும் விமல் வீசவன்ச எச்சரித்துள்ளார்.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *