முக்கிய செய்திகள்

Warning: Invalid argument supplied for foreach() in /home/vmctr24/public_html/wp-content/themes/nanomag/news-ticker.php on line 15

மனித உறவுகளில் விரிசல்கள் ஏற்படாமல் இருக்கவும், ஏற்பட்ட விரிசல்கள் மேலும் பெரிதாகாமல் இருக்க..

1636

நானே பெரியவன், நானே சிறந்தவன் என்ற அகந்தையை (Ego) வை விடுங்கள்.

அர்த்தமில்லாமலும் பின் விளைவு அறியாமலும் பேசிக்கொண்டே இருப்பதை விடுங்கள் (Loose Talks).

எந்த விஷயங்களையும் பிரச்னைகளையும் நாசூக்காக கையாளுங்கள் (Diplomacy). விட்டுக் கொடுங்கள் (Compromise).

சில நேரங்களில் சில சங்கடங்களை சகித்துத்தான் ஆகவேண்டும் என்று உணருங்கள் (Tolerance).

நீங்கள் சொன்னதே சரி, செய்ததே சரி என்று வாதாடாதீர்கள் என்று உணருங்கள் (Adamant Argument) குறுகிய மனப்பான்மையை விட்டொழியுங்கள் (Narrow Mindedness).

உண்மை எது, பொய் எது என்று விசாரிக்காமல் இங்கே கேட்டதை அங்கே சொல்வதையும் அங்கே கேட்டதை இங்கே சொல்வதையும் விடுங்கள் (Carrying Tales).

மற்றவங்களை விட உங்களையே எப்போதும் உயர்த்தி நினைத்து கர்வப்படாதீர்கள் (Superiority Complex).

அளவுக்கு அதிகமாய் தேவைக்கதிகமாய் ஆசைப்படாதீர்கள் (Over Expectation)

எல்லோரிடத்திலும் எல்லா விஷயங்களையும், அவர்களுக்கு சம்மந்தம் உண்டோ, இல்லையோ சொல்லிக் கொண்டிருக்காதீர்கள்.

கேள்விப்படுகிற எல்லா விஷயங்களையும், நம்பி விடாதீர்கள். அற்ப விஷயங்களை பெரிது படுத்தாதீர்கள்.

உங்கள் கருத்துகளில் உடும்புப் பிடியாய் இல்லாமல், கொஞ்சம் தளர்த்திக் கொள்ளுங்கள் (Flexibility)

மற்றவர் கருத்துக்களை, செயல்களை, நடக்கின்ற நிகழ்ச்சிகளைத் தவறாக புரிந்து கொள்ளாதீர்கள் (Mis understanding).

மற்றவர்களுக்குரிய மரியாதை காட்டவும் இனிய இதமான சொற்களைப் பயன்படுத்தவும் தவறாதீர்கள் (Courtesy).

புன்முறுவல் காட்டவும் சிற்சில அன்புச் சொற்களை சொல்லவும் கூட நேரமில்லாதது போல் நடந்து கொள்ளாதீர்கள்.

பேச்சிலும், நடத்தையிலும் பண்பில்லாத வார்த்தைகளையும், தேவையில்லாத மிடுக்கையும் காட்டுவதைத் தவிர்த்து அடக்கத்தையும், பண்பையும் காட்டுங்கள்.

அவ்வப்போது நேரில் சந்தித்து மனம் திறந்து பேசுங்கள்.

பிரச்னைகள் ஏற்படும் போது அடுத்தவர் முதலில் இறங்கி வர வேண்டும் என்று காத்திருக்காமல் நீங்களே பேச்சைத் துவக்க முன் வாருங்கள்.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *