முக்கிய செய்திகள்

Warning: Invalid argument supplied for foreach() in /home/vmctr24/public_html/wp-content/themes/nanomag/news-ticker.php on line 15

மலச்சிக்கலை குணமாக்கும் திராட்சை

975

திராட்சையில் நார்ச்சத்து அதிகம் உள்ளதால் மலச்சிக்கல் இருப்பவர்கள் தினமும் இதை உண்ணலாம். நீரில் ஊற வைத்த உலர் திராட்சை பழத்தை இரவில் சாப்பிட்டு வந்தால் மலச்சிக்கல் தீரும்.

திராட்சையில் பலவகைகள் இருந்தாலும் கருப்பு திராட்சையில்தான் அதிக மருத்துவ குணம் உள்ளது. கருநீலம், கருஞ்சிவப்பு ஆகிய இரண்டு ரகத்திலும் ‘ஆந்தோசயானின்’, ‘பாலி பீனால்’ ஆகிய வேதிப்பொருட்கள் இருக்கின்றன. அவை புற்றுநோய் வராமல் பாதுகாக்கும். புற்றுநோய் வந்தால் அதன் தீவிரத்தை குறைக்கும்.

திராட்சையில் அதிக அளவில் நார்ச்சத்தும், ப்ரூக்டோஸ் எனும் பழச்சர்க்கரையும் உள்ளது. நார்ச்சத்து அதிகம் உள்ளதால் மலச்சிக்கல் இருப்பவர்கள் தினமும் இதை உண்ணலாம். நீரில் ஊற வைத்த உலர் திராட்சை பழத்தை இரவில் சாப்பிட்டு வந்தால் மலச்சிக்கல் தீரும். இதில் இருக்கும் ‘ப்ரூக்டோஸ்’ சாப்பிட்ட உடன் உற்சாகத்தை வழங்கும்.

திராட்சையை சர்க்கரை நோயாளிகள் நிறைய சாப்பிடலாம் என்று சிலர் சொல்கிறார்கள். அது தவறு. சர்க்கரை நோயாளிகள் குறைந்த அளவு மட்டும் உண்ணலாம். இதில் வைட்டமின்-சி இருப்பதால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். இதை அதிகமாக சாப்பிட்டால் சிலருக்கு வயிற்று வலி, வாந்தி, வயிற்றுப்போக்கு ஏற்படலாம். பழத்தில் உள்ள அதிகப்படியான நார்ச்சத்தே அதற்கு காரணம்.

பொட்டாசியம் சத்தும் உள்ளதால் இருதய நோயாளிகள் இதை உண்ணலாம். வெயில் காலங்களில் வியர்வை இழப்பால் உண்டாகும் நீர்ச்சத்து குறைபாட்டை இது போக்கி, உற்சாகம் தரும். முகப்பரு வராமல் இருக்கவும், உடல்சூடு குறையவும், தோல் நோய்கள் குறையவும் திராட்சை பழத்தை சாப்பிடலாம். திராட்சையில் இருக்கும் ‘ரெஸ்வெராட்ரால்’ எனும் சத்து, நோய்க்கான தடுப்பு மருந்துபோல் செயல்படுகிறது. இது கணைய புற்றுநோய், கல்லீரல் பாதிப்பு, வயிற்று புற்றுநோய் போன்றவைகளின் பாதிப்பை குறைக்கும்.

திராட்சை விதையில் பெருமளவு கால்சிய சத்து உள்ளது. கால்சியம் குறைபாட்டால் ஏற்படும் எலும்பு நோய்களுக்கு இது நல்ல மருந்து. திராட்சையில் இருந்து தயார் செய்யப்படும் ‘ரெட் ஒயின்’ இதயத்துக்கு நல்லது. சித்த மருத்துவத்தில் திராட்சை கலந்த மருந்துகள் தயார் செய்யப்படுகின்றன.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *