முக்கிய செய்திகள்

Warning: Invalid argument supplied for foreach() in /home/vmctr24/public_html/wp-content/themes/nanomag/news-ticker.php on line 15

மாகாணசபையைக் குழப்புகின்ற சூத்திரதாரிகளுக்கு மக்கள் தீர்ப்பெழுதுவார்கள் என்று ஐங்கரநேசன் தெரிவித்துள்ளார்

416

வடமாகாணசபையின் உறுப்பினர்களாக தாங்கள் தெரிவாகியபோது, மாகாணசபைக்குரிய அதிகாரங்களை வைத்துப் பெரிதாக எதையும் சாதிக்க இயலாமற்போனாலும், சிலவற்றையாவது செய்துமுடிப்போம் என்ற நம்பிக்கையுடன்தான் வந்ததாகவும், ஆனால் மாகாணசபை உறுப்பினர்களுக்கிடையே இருக்கக்கூடிய சாதாரண முரண்பாடுகளைப் பூதாகரமாக்கி உள்ளே நுழைந்த தீயசக்திகள், மாகாணசபையின் ஒற்றுமையைச் சீர்குலைத்ததால் எதனையுமே முழுமையாகச் செய்யமுடியாத சூழ்நிலை உருவாகியுள்ளது என்றும் முன்னாள் விவசாய அமைச்சரும் மாகாணசபை உறுப்பினருமான ஐங்கரநேசன் தெரிவித்துள்ளார்.

இதனால் இன்று முதலமைச்சரே நீதிமன்றப்படி ஏறும் நிலை தோன்றியுள்ளது எனவும், இந்தக் குளறுபடிகளின் பின்னால் உள்ள சூத்திரதாரிகள் யார் என்பது மக்களுக்குத் தெரியும் என்றும், இவர்களுக்கான தீர்ப்பை மக்களே நாளை எழுதுவார்கள் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மாகாணசபையில் இன்று இடம்பெற்றுவருகின்ற குழப்பங்கள் எல்லாவற்றுக்கும் பின்னால், முதலமைச்சரைப் பலமீனமாக்க வேண்டும் என்ற நோக்கமே உள்ளது எனவும், மாகாணசபையில் உள்ள அத்தனை உறுப்பினர்களுக்கும் முதலமைச்சருடன் தோளோடு தோள்நின்று மக்களுக்கான வேலைத்திட்டங்களை முன்னெடுக்க வேண்டிய பொறுப்பு உள்ளது எனவும் அவர் கூறியுள்ளார்.

ஆனால் ஆளும்கட்சியான தமிழ் தேசியக் கூட்டமைப்பில் உள்ளவர்களே முதலமைச்சரின் சகல செயற்பாடுகளையும் உள்நோக்கத்தோடு விமர்சித்து வருகிறார்கள் எனவும், இதனால் மக்களுக்கான செயற்பாடுகளை மாகாணசபையால் வினைத்திறனுடன் முன்னெடுக்கமுடியாமல் உள்ளது என்றும் அவர் அதிருப்தி வெளியிட்டுள்ளார்.

மாகாணசபையின் ஆயுள் முடிவடைவதற்கு இன்னும் மூன்று மாதங்களே உள்ள நிலையில், அதற்குள் அமைச்சரவையைப் புதிதாக மாற்றியமைக்க வேண்டும் என்று சிலர் ஒற்றைக்காலில் நிற்கிறார்கள் எனவும், ஏற்கனவே மாகாணசபையின் இயக்கம் மந்தகதியில் இருக்கும்போது, இந்தச்செயற்பாடு மாகாணசபையை மேலும் மேலும் பலவீனப்படுத்துகிறது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

தங்களது பெயரையும் புகழையும் காப்பாற்றுவதற்காக அரசியல்வாதி ஒருவர் நீதிமன்றப்படி ஏறும்போது இந்நடவடிக்கைகளால் பொதுமக்களின் நலன் எந்தளவுக்குப் பாதிக்கப்படும் என்பதை அவர் சிந்தித்துத்தே செயற்படவேண்டும் எனவும், ஏனெனில் மக்கள் பணிகளையே முதன்மை நோக்கமாகக் கொண்டு பதவிக்கு வருபவர்கள், தான் பாதிக்கப்படுகின்ற சந்தர்ப்பங்களிற்கூட மக்களின் நலனுக்கே முன்னுரிமைகொடுப்பவராக இருக்கவேண்டும் எனவும் ஐங்கரநேசன் மேலும் தெரிவித்துள்ளார்.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *