முக்கிய செய்திகள்

Warning: Invalid argument supplied for foreach() in /home/vmctr24/public_html/wp-content/themes/nanomag/news-ticker.php on line 15

மிசிசாகா பகுதியில் பெண் பாதசாரி ஒருவர் படுகாயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்

572

நேற்று இரவு மிசிசாகா பகுதியில் வாகனம் ஒன்றினால் மோதுண்ட பெண் பாதசாரி ஒருவர் படுகாயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Thomas Street மற்றும் Tenth Line பகுதியில், நேற்று இரவு 10.15 அளவில் இந்த விபத்து சம்பவித்துள்ளதனை பீல் பிராந்திய காவல்துறையினர் உறுதிப்படுத்தியுள்ளனர்.

கார் ஒன்றினால் மோதப்பட்ட குறித்த அந்தப் பெண், பாரதூரமான காயங்களுடன் ஆபத்தான நிலையிலேயே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக அவசர மருத்துவப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை விபத்துடன் தொடர்புடைய வாகனத்தின் சாரதி சம்பவ இடத்திலேயே தரித்திருந்து தமது விசாரணைகளுக்கு ஒத்துளைத்ததாக காவல்துறையினர் தகவல் வெளியிட்டுள்ளனர்.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *