முக்கிய செய்திகள்

Warning: Invalid argument supplied for foreach() in /home/vmctr24/public_html/wp-content/themes/nanomag/news-ticker.php on line 15

வன்னியில் புதைத்து வைக்கப்பட்டுள்ள வெடிபொருட்களை மீட்பதற்கு இன்னமும் ஆறு ஆண்டுகள் இராணுவத்திற்கு தேவை என்று இலங்கை அரசாங்கம் தெரிவித்துள்ளளது

515

வன்னியில் விடுதலைப்புலிகளால் புதைத்து வைக்கப்பட்டுள்ள வெடிபொருட்களை மீட்பதற்கு மேலும் ஆறு ஆண்டுகள் தேவையென இலங்கை அரசு கணித்துள்ளதாக கூறப்படுகிறது.

இதன் அடிப்படையில் 2025ஆம் ஆண்டளவிலேயே விடுதலைப்புலிகளால் புதைக்கப்பட்ட வெடி பொருட்களை முற்றாக மீட்டுவிட முடியுமென இல்ஙகை அரசு தெரிவித்துள்ளது.

இதனிடையே வன்னியில் பல்வேறு வகைகளைச் சேர்ந்த 5,442 குண்டுகள் உள்ளிட்ட பல்வேறு வகை ஆயுதங்கள், வெடிப்பொருட்கள் அண்மையில் மீட்கப்பட்டுள்ளதாக இல்ஙகை அரச தரப்பு தெரிவித்துள்ளது.

கடந்த இரண்டரை ஆண்டு காலப்பகுதியில், கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு ஆகிய மாவட்டங்களில் 5,32,391 மீற்றர் நிலப்பகுதிகள் அகழப்பட்டு இவ்வாறு ஆயுதங்கள் பல மீட்கப்பட்டுள்ளதாக சிறிலங்கா பாதுகாப்பு பிரிவு தெரிவித்துள்ளது.

இதனிடையே முல்லைத்தீவு மற்றும் யாழ்ப்பாணம் கடற்படை அதிகாரிகளினால், ஒரு தொகை போர் உபகரணங்கள் ஆகியன நேற்று மீட்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

போர்ப் பயிற்சி முகாமொன்று பராமரிக்கப்படதாக கிடைக்கப்பெற்ற தகவலையடுத்து, முல்லைத்தீவு நீதிமன்றத்தில் பெற்றுக்கொள்ளப்பட்ட நீதிமன்ற கட்டளையின் அடிப்படையில், குறித்த இடத்தை அகழும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டதாகவும், அதன்பின்னரே இந்த போர் உபகரணங்கள் கைப்பற்றப்பட்டதாகவும் படைத்தரப்பு தெரிவித்துள்ளது.

படைத்தரப்பின் வெடிபொருள் தொடர்பான புதிய புதிய அறிவிப்புக்கள் தொடர்ந்தும் வடக்கில் நிலைகொள்வதற்கான அறிவிப்பாக பார்க்கப்படுகின்றமை குறிப்பிடததக்கது.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *