முக்கிய செய்திகள்

Warning: Invalid argument supplied for foreach() in /home/vmctr24/public_html/wp-content/themes/nanomag/news-ticker.php on line 15

வர்த்தக விவகாரங்கள் தொடர்பில் விவாதிப்பதற்காக ஒன்ராறியோ வர்த்தக அமைச்சர் அமெரிக்காவுக்குச் செல்லவுளளார்

663

ஒன்ராறியோவின் வர்த்த விவகாரங்கள் தொடர்பில், குறிப்பாக அமெரிக்காவுடனான வாகன உதிரிப்பாக வர்த்தகம் தொடர்பில் விவாதிப்பதற்காக, ஒன்ராறியோ வர்த்தக அமைச்சர் இந்த வாரத்தில் வோசிங்டனுக்குச் செல்லவுள்ளார்.

இதன்போது அமெரிக்க வர்த்தக திணைக்களத்தில் இடம்பெறவுள்ள கலந்துரையாடல் ஒன்றிலும் பங்கேற்கவுள்ள அவர், வாகன உதிரிப்பாக பொருட்கள் இறக்குமதியில் தேசிய பாதுகாப்பு அச்சுறுத்தல் உள்ளதாக அமெரிக்காவால் முன்வைக்கப்படும் கருத்துக்கள் குறித்தும் விபரிக்கவுள்ளார்.

குறிப்பாக எதிர்வரும் வியாழக்கிழமை இது தொடர்பில் இடம்பெறும் கூடடத்தில் கலந்துகொள்ளவுள்ள அவர், கனேடிய தரப்பு நியாயங்களை வெளிப்படுத்தி அங்கு உரையாற்றவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அத்துடன் வாகன உற்பத்தி தொழில்துறையில் ஒன்ராறியோவுடன் இணைந்து பணியாற்றுவதால் இரண்டு தரப்புக்கும் கிடைக்கக்கூடிய நன்மைகள் குறித்தும் அவர் இதன்போது வலியுறுத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தனது இநத் அமெரிக்கப் பயணம் தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள ஒன்ராறியோ வர்த்தக அமைச்சர் ஜிம் வில்சன், அமெரிக்காவின் தேசிய பாதுகாப்புக்கு ஒன்ராறியோ அச்சுறுத்தலாக இருக்காது என்பது வெளிப்படையான உண்மை என்று தெரிவித்துள்ளார்.

ஒன்ராறியோம் அமெரிக்காவும் இணைந்து எத்தனையோ இலக்குகளை ஒன்றாக எட்டியுள்ள எனவும், இவ்வாறான நடவடிக்கைகளை தொடர்ந்து முன்னெடுப்பதன் மூலம் மேலும் பல சாதனைகளை நிகழ்த்த முடியும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

பலமான, போட்டித்தன்மை மிக்க வர்த்தக சூழலை ஏற்படுத்திக் கொள்வதன் மூலம், எல்லையின் இரண்டு புறத்தில் உள்ளவர்கள் மத்தியில் பொருமளவானோருக்கு வேலை வாய்ப்பினை ஏற்படுத்திக் கொடுக்க முடியும் எனவும், இரு தரப்புமே சிறந்த வளர்ச்சியைக் காண முடியும் எனவும் அவர் விபரித்துள்ளார்.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *