முக்கிய செய்திகள்

Warning: Invalid argument supplied for foreach() in /home/vmctr24/public_html/wp-content/themes/nanomag/news-ticker.php on line 15

வவுனியாவைப் பொறுப்பேற்கும் பிரம்டன் மாநகரசபை..! ஒப்பந்தத்தின் முதற்கட்டம் நிறைவு

1243

தாயக நகரான வவுனியாவை மேம்படுத்தும் நோக்கில் பிரம்ரன் மாநகசபை ‘சகோதர இரட்டை நகர உடன்படிக்கை’ ஒன்றை உருவாக்க முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது.
இந்த உடன்படிக்கை தொடர்பாகப் பிரம்டன் பாராளுமன்ற மாநாகரசபை உறுப்பினர்களும் பொதுமக்களும் கடந்த ஜனவரி 10 ஆம் திகதி முதல்வரை வரவேற்றுக் கலந்துரையாடினர்.
பிரம்ரன் மாநகரசபைக்குச் சென்றிருந்த முதலமைச்சர் முதலில் ரொரன்ரோ பெரும்பாகப் பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் பிரம்ரன் உதவி நகரபிதா உட்பட நகரசபை உறுப்பினர்களுடன் சந்திப்பொன்றை நடத்தினார்.
தாயக அரசியல் பொருளாதார நிலவரம் உட்படப் புலம்பெயர் தமிழ் மக்களின் தாயகம் சார்ந்த ஈடுபாடுகள் குறித்தும் உரையாடப்பட்டன.
அத்துடன், பொதுமக்கள் முன்னிலையில் வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. பிரம்ரன் நகரில் வாழும் 20.000 தமிழர்களின் சார்பில் வடமாகாண முதலமைச்சரை வரவேற்பதில் பிரம்ரன் நகரம் மிகுந்த மகிழ்ச்சியை அடைவதாகப் பிரம்ரன் உதவி நகர பிதா மார்ட்டின் மெடிரொஸ் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, மார்ட்டின் மெடிரொஸ் தனதுரையின் போது பிரம்ரன் நகரில் வாழும் தமிழ் மக்கள் சுயதொழில் முயற்சிகளில் ஈடுபடுவதிலும் பொதுச் சேவைகளில் ஈடுபடுவதிலும்
மற்றும் சிவில் சமூக செயற்பாடுகளிலும் மிகுந்த பங்களிப்பை வழங்கி வருவதைச் சுட்டிக்காட்டினார்.
இரட்டை நகர உடன்படிக்கைகளுக்கான முதல் கட்ட நடவடிக்கைகளையும் அதன் இலக்குகளையும் பொறிமுறைகளையும் விளக்கமாக முன்வைத்தார்.
பின்னர் முதல்வர் விக்னேஸ்வரனின் கருத்துக்களைப் பகிருமாறு கேட்டுக் கொண்டார்.
முதல்வர் தனது பேச்சில் புலம் பெயர் மக்களுக்கும் தாயகத்துக்குமான உயிர்த்துடிப்பான உறவை இந்த இரட்டை நகர உடன்படிக்கை ஊடாக உத்தியோக பூர்வமாக்கி ஒருவருக்கொருவர் பெற்றுக் கொள்வதன் நன்மைகளை விளக்கினார்.
முதல்வருக்கு பிரம்ரன் தமிழ்ச் சங்கம் சார்பில் நினைவுப் பரிசு வழங்கப்பட்டது.
அத்துடன் பிராம்ரன் தமிழ்ச் சங்கம் சார்பில் மாங்குளத்தில் முன்னெடுக்கப்பட்டுவரும் உயிரிழை – முள்ளந்தண்டு பாதிக்கப்பட்டோர்களின் அமையத்துக்கான பயிற்சி நிலைய கட்டிடமும் முதலமைச்சரிடம் கையளிக்கப்பட்டது.
வடமாகாண சபை சார்பில் வடமாகாண சின்னம் பொறிக்கப்பட்ட நினைவுப் பரிசை முதலமைச்சர் துணை மேயர் மார்ட்டின் மெடிரொஸிடம் வழங்கினார்.
ஏறக்குறைய 300க்கு மேற்பட்ட பொதுமக்கள் நிகழ்வில் கலந்து கொண்டனர்.
மேலும், பலரும் அவருடன் நெருங்கி உரையாடும் வாய்ப்பையும் அங்கு பெற்றனர். அமலிதன் சேவியர் நிறைவுரையும், சுஜி ராஜன் நன்றியுரையும் வழங்கியமை குறிப்பிடத்தக்கது.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *