முக்கிய செய்திகள்

Warning: Invalid argument supplied for foreach() in /home/vmctr24/public_html/wp-content/themes/nanomag/news-ticker.php on line 15

பேரறிவாளனின் விடுதலைக்காக, அவரது தாய் அற்புதம் அம்மாள், தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம்

682

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் 28 ஆண்டுகளாக சிறை தண்டனை அனுபவித்துவரும் பேரறிவாளனின் விடுதலைக்காக, அவரது தாய் அற்புதம் அம்மாள், பொதுமக்களிடம் ஆதரவு கோரி, தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்துவருகிறார்.

கடந்த ஜனவரி 24ம் தேதி தொடங்கி பல்வேறு கிராமம் மற்றும் நகரங்களுக்குச் செல்லும் அற்புதம் அம்மாள், செப்டம்பர் 2018ல் தமிழக சட்டமன்றம் கூடி பேரறிவாளனின் விடுதலையை உறுதிசெய்யும் வகையில் ஆளுநருக்கு பரிந்துரை செய்தபோதிலும், ஆளுநர் நடவடிக்கை எடுப்பதில் தாமதம் செய்வது ஏன் என்ற கேள்வியை முன்வைத்து பேசிவருகிறார்.

பேரறிவாளனின் கருணை மனுவை தமிழக ஆளுநர் பரிசீலிக்கலாம் என கடந்த ஆண்டு உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது.

உச்சநீதிமன்றத்தின் வழிகாட்டுதலை அடுத்து, தமிழக சட்டமன்றம் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் 20 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் உள்ள பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு நபர்களையும் விடுதலை செய்ய முடிவு செய்து ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்துக்கு பரிந்துரை செய்தது.

அந்த பரிந்துரையைத் தொடர்ந்து கடந்த ஐந்து மாதங்களில் எந்த முடிவும் வெளியாகவில்லை.

ஆளுநர் தனது முடிவை விரைந்து எடுக்கவேண்டும், மௌனத்தைக் கலைக்க வேண்டும் என்ற தனது கோரிக்கைக்கு வலுசேர்க்க பொதுமக்களிடம் ஆதரவு திரட்டிவருகிறார் அற்புதம் அம்மாள்.

ஜனவரி 24ம் தேதி தொடங்கிய சந்திப்பு நிகழ்ச்சியின் முடிவில் சென்னையில் மக்களை ஒன்று திரட்டி, ஆளுநரின் பதிலை பெறவேண்டும் என செயல்பட்டு வருகிறார் அற்புதம் அம்மாள்.

அவரது சந்திப்பின்போது, பேரறிவாளனின் விடுதலைக்கான சாத்தியக்கூறுகள் என்ன என பொதுமக்களிடம் விளக்குவதும், அவர்களின் கருத்துக்களைக் கேட்பதாகவும் அந்த நிகழ்வு அமைகிறது.

அடுத்து எந்த கிராமத்திற்கு போகிறோம் என்ற திட்டம் அவ்வப்போது முடிவு செய்யப்படுகிறது. பயணம் செய்து மக்களிடம் ஆதரவு திரட்டுவது மட்டுமே இலக்கு என்று தொடர்கிறார் இந்த தாய்.

”என்னை சந்திக்க பல பெண்கள் வருகிறார்கள். ‘பள்ளியில் இருந்தோ அல்லது வேலைக்குச் செல்லும் இடத்தில் இருந்தோ, மகன் வரத் தாமதமானால் பரிதவித்து போய்விடுவோம், நீங்கள் தைரியத்துடன் போராடி வருகிறீர்கள், உங்களுக்கு ஆதரவு தருவோம்’ என பல தாய்மார்கள் எனக்கு ஆறுதல் தெரிவித்தார்கள். அதேபோல, சென்னையில் நடக்கவுள்ள கூட்டத்திற்கு வருவதாகவும் உறுதி கூறினார்கள். இதுபோல பெண்களின் ஆதரவு ஒவ்வொரு கூட்டத்திலும் பெருகிவருகிறது,” என்கிறார் அற்புதம் அம்மாள்.

அற்புதம் அம்மாளின் கூட்டத்தை பல்வேறு தன்னார்வ அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் ஒருங்கிணைக்கிறார்கள்.

மக்களை சந்தித்து ஓட்டு கேட்கப்போவதில்லை என்பதால், தன்னிடம் பேச மக்கள் உண்மையான ஆர்வத்துடன் வருவதாக கூறுகிறார் அற்புதம் அம்மாள்.

இதுவரை கோவை, ஈரோடு, விருதுநகர், ராஜபாளையம், மதுரை, ராமநாதபுரம் உள்ளிட்ட இடங்களில் கூட்டங்களில் பேசியுள்ளார்.

தன்னார்வலர்கள் வீடுகளில் தங்கிக்கொள்வது, உணவு உண்பது என தன் மகனின் வயதை ஒத்த நபர்கள் உதவுகிறார்கள் என்றும் கூறும் அவர், பிப்ரவரி மாத இறுதியில் சென்னையில் உள்ள சமூக ஆர்வலர்களிடம் கலந்துபேசி கூட்டத்திற்கான ஏற்பாடுகளை செய்யவுள்ளதாக கூறினார்.

28 ஆண்டுகளாக என் மகன் சிறையில் இருக்கிறான். அவனது இளமை காலம் முழுவதையும் தண்டனையில் கழித்துவிட்டான். உச்சநீதிமன்றம் அளித்த வழிகாட்டுதலின்படி, என் மகனை விடுதலை செய்வதில் அரசு ஏன் தாமதம் செய்கிறது?

இதனை விளக்கி கூட்டத்தில் பேசும்போது, பலரும் என் வலியை புரிந்துகொண்டு எனக்கு ஆதரவு தருகிறார்கள். பொதுமக்கள் தாமாக முன்வந்து என் பிரச்னைக்கு தீர்வு காணவேண்டும் என முடிவுசெய்வது எனக்கு நம்பிக்கை கொடுக்கிறது,” என்கிறார் அற்புதம் அம்மாள்.

”பேரறிவாளனின் விடுதலையை ஏன் தாமதிக்கிறார்கள்? தருமபுரி பஸ் எரிப்பு சம்பவத்தில் ஈடுபட்டவர்களுக்கும் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டிருந்தது. அதே அக்கறையை ஏன் பேரறிவாளனின் விடுதலையில் காட்ட மறுக்கிறார்கள் என்று சந்தேகம் எழுகிறது,”என்கிறார் அவர்.

அற்புதம் அம்மாளின் குற்றச்சாட்டுகள் குறித்து சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகத்திடம் பேசியபோது, தமிழக அரசு பரிந்துரை மட்டுமே செய்ய முடியும் என்றும், ஆளுநரை கட்டாயப்படுத்த முடியாது என்றும் கூறினார்.

”ராஜீவ் கொலை வழக்கில் விசாரணையை மாநில அரசு கையாளவில்லை. இந்த வழக்கில் இறுதி முடிவு எடுக்கும் அதிகாரம் எங்களிடம் இல்லை. தருமபுரி பஸ் எரிப்பு சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் அவர்களின் நன்னடத்தை காரணமாக விடுதலை பெற்றனர்.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *