முக்கிய செய்திகள்

Warning: Invalid argument supplied for foreach() in /home/vmctr24/public_html/wp-content/themes/nanomag/news-ticker.php on line 15

1531

கனடாவின் மாசுக் கட்டுப்பாட்டு சட்டங்களை மேம்படுத்துமாறு கனடாவின் 500க்கும் மேற்பட்ட அறிவியலாளர்கள் கூட்டாக வலியுறுத்தியுள்ளனர்.

கனடாவில் மாசுக் கட்டுப்பாடு போதிய அளவில் இல்லை எனவும், இந்த பிரச்சினை மிகவும் பூதாகாரமாகி உள்ளதாகவும், அது மனித சுகாதாரத்தினையும், எமது சுற்றுச் சூழலையும் மிகவும் பாரதூரமான அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கியுள்ளது என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

இன்று பிரதமர் ஜஸ்டின் ரூடோவுக்கு அனுப்பி வைக்கவுள்ள கடிதம் ஒன்றிலேயே, கனடா முழுவதும் உள்ள 540க்கும் மேற்பட்ட அறிவியலாளர்கள், மருத்துவர்கள் இதனைச் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இவ்வாறு மாசுபடும் சமூகத்தில் இருந்து நம்மையும் சுற்றுச் சூழலையும் பாதுகாத்துக் கொள்வதற்கு ஒரு சந்ததிக்கால வாய்ப்பு நமக்கு கிடைத்துள்ளதாகவும், இதன்மூலம் உயிர்களைப் பாதுகாத்து, சுற்றுச் சூழலை சுத்தமாக்கி,பொருளாதாரத்தை பெருக்கி கனேடியர்களின் வாழ்க்கைத் தரத்தை அதிகரிக்குமாறும் அவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

இது குறித்து கடந்த ஆண்டில் மட்டும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு அமைச்சரிடம் 87 பரிந்துரைகள் முன்வைக்கப்பட்டுள்ளதாகவும், தொழிற்சாலை உற்பத்திப் பொருட்களில் காணப்படும் அதிக அளவிலான இரசாயன பதார்த்தங்கள் தொடர்பில் அரசாங்கம் கூடிய கவனம் செலுத்த வேண்டும் எனவும் அவர்கள் வலியுறுததியுள்ளனர்.

இது குறித்து கருத்து வெளியிட்டுள்ள ரொரன்ரோ பல்கலைக்கழகத்தின் புவியியல் விஞ்ஞான பேராசிரியரான மிரியம் டையமண்ட்(Miriam Diamond), சீருடல் பயிற்சிக்காக உடற்பயிற்சி நிலையத்திற்கு செல்லும் தனது மகன், வாரத்திற்கு 20 மணிநேரங்களுக்கு மிக மோசமான இரசாயன மாசினை வெளிப்படுத்தும் உபகரணங்களுடன் புழங்கவேண்டியுள்ளது என்று தெரிவித்துள்ளார்.

சாதாரணமாக ஒரு வீட்டில் காணப்படும் மாசினை விடவும் 20 மடங்கு அதிகமான அளவு மாசுப் பொருட்கள், உடற்பயிச்சிக் கூடங்களில் உள்ள பொருட்களிலும், காற்று மண்டலத்திலும் காணப்படுவதாகவும் அவர் கவலை வெளியிட்டுள்ளார்.

ஐரோப்பா, அமெரிக்கா போன்ற நாடுகளில் நச்சத் தன்மை வாய்ந்ததாகத் தடை செய்யப்பட்டு்ளள பலவித இரசாயனங்கள் கனடாவில் தடை செய்யப்படவில்லை எனவும், அவ்வாறான கொடிய இரசாயனங்கள் தாம் பயன்படுத்தும் பொருட்களில் உள்ளன என்பதனை பொதுவாக எவரும் அறிந்திருப்பதில்லை என்றும் அவர் எச்சரித்துள்ளார்.

இந்த விடயத்தில் மத்திய அரசாங்கம் ஒரு நல்ல முடிவினை எடுத்து, அவற்றின் மீதான கட்டுப்பாடுகளை விதித்தால் அன்றி, இதனை யாரும் கவனத்தில் எடுக்கவோ, கண்டுகோள்வோ, அகற்றவோ போவதில்லை எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *