முக்கிய செய்திகள்

Warning: Invalid argument supplied for foreach() in /home/vmctr24/public_html/wp-content/themes/nanomag/news-ticker.php on line 15

900 காளைகள், 750 மாடுபிடி வீரர்கள்: அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு கோலாகலம்

1092

சுப்ரீம் கோர்ட்டு தடை காரணமாக, தமிழகத்தில் கடந்த 2 ஆண்டுகளாக நடைபெறாத ஜல்லிக்கட்டு, மாணவர்கள், இளைஞர்கள் போராட்டம் காரணமாக, தமிழக அரசு சட்டம் இயற்றியதால் இந்த ஆண்டு நடைபெறுகிறது. மதுரை மாவட்டம், அவனியாபுரத்தில் புகழ்பெற்ற ஜல்லிக்கட்டு ஆண்டுதோறும் பொங்கல் பண்டிகை நாளில் நடைபெறுவது வழக்கம். அதன் பிறகே பாலமேடு, அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு நடைபெறும். தடை விலகிய பிறகு இந்த ஜல்லிக்கட்டை நடத்த தீவிர ஏற்பாடுகள் செய்யப்பட்டன.

இதில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு நடத்தப்படுகிறது. இதற்காக காளைகளும், மாடுபிடி வீரர்களும், அங்கு குவிந்து கடந்த 2 நாட்களாக பதிவு செய்தனர். பதிவு செய்யப்பட்ட காளைகளுக்கும், காளையர்களுக்கும் மருத்துவ பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.

போட்டி நாளான இன்று, இறுதிகட்ட மருத்துவ சோதனை திருப்பரங்குன்றம் ஆரம்ப சுகாதார நிலைய தலைமை மருத்துவர் சிவக்குமார் தலைமையில் வீரர்களுக்கு நடத்தப்பட்டது. 1008 மாடு பிடி வீரர்கள் பங்கேற்றதில், 263 பேர் தகுதி நீக்கம் செய்யப்பட்டனர். அவர்களுக்கு போட்டிக்கான சீருடையான மஞ்சள் கலர் பனியனும், பச்சை கலர் அரை டிராயரும் வழங்கப்பட்டு, ஜல்லிக்கட்டு திடலுக்குள் அனுமதிக்கப்பட்டனர்.

இதே போல் காளைகளுக்கும் இறுதிக்கட்ட சோதனை நடத்தப்பட்டன. காளைகளின் கண்கள், பற்கள் சோதனை செய்யப்பட்டது. கால்நடை மருத்துவர் முத்துராம் தலைமையில் 80 டாக்டர்கள் கொண்ட குழுவினர் இந்த சோதனையை நடத்தினர். கூர்மையான கொம்புகளை கொண்ட காளைகள், தனியே கொண்டு செல்லப்பட்டு அறம் மூலம் கொம்புகள் தேய்த்து விடப்பட்டன. தொடர்ந்து 916 காளைகள் தகுதி பெற்று டோக்கன் வழங்கப்பட்டது. பின்னர் அவை அனைத்தும், ஒதுக்கப்பட்ட எண் வரிசைப்படி, வாடிவாசல் பகுதிக்கு கொண்டு செல்லப்பட்டன.

ஜல்லிக்கட்டு திடலில் மாடுபிடி வீரர்கள், காளைகள் பாதுகாப்பிற்காக சுமார் 200 அடி தூரத்திற்கு தேங்காய் நார்கள் பரப்பப்பட்டு உள்ளது.

இதே போல் பார்வையாளர்கள் பகுதியில் தடுப்பு வேலிகள் அமைக்கப்பட்டு உள்ளது. இன்று காலை காவல் துறை அதிகாரிகள் அப்பகுதியை பார்வையிட்டனர். தொடர்ந்து மாடுபிடி வீரர்கள், காளைகளின் உரிமையாளர்கள் மற்றும் பொதுமக்களிடையே ஒத்துழைப்புதர அதிகாரிகள் கேட்டுக் கொண்டனர். அதன் பின்னர் அவர் விதிமுறைகளை கடைபிடிக்க உறுதிமொழி வாசகங்களை வாசிக்க மாடுபிடி வீரர்கள் அதனை திருப்பிச் சொல்லி உறுதி மொழி எடுத்துக்கொண்டனர். காலை 8 மணிக்கு ஜல்லிக்கட்டு போட்டியை அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் முறைப்படி கொடியசைத்து தொடங்கி வைத்தார். முதலில் கோவில் காளைகள் வாடிவாசல் வழியாக அவிழ்த்துவிடப்பட்டது.

அதன் பிறகு, வாடிவாசல் வழியாக ஜல்லிக்கட்டு காளைகள் சீறிப்பாய்ந்து வருகிறது. அவற்றை பிடிக்க மாடுபிடி வீரர்கள் முயற்சி செய்து வருகிறார்கள். மாடுபிடி வீரர்கள் உற்சாகமாக காளைகளை அடக்கியும் வருகிறார்கள். காளைகளின் திமிலை பிடித்தே அடக்க வேண்டும். 15 மீட்டர் தூரத்திற்குள் பிடிக்க வேண்டும் என்ற விதிமுறைகளை கருத்தில் கொண்டு வீரர்கள் செயல்பட்டு வருகிறார்கள். 2 ஆண்டுகளுக்கு பிறகு ஜல்லிக்கட்டு நடப்பதால், இதனை காண ஏராளமானோர் ஆர்வத்துடன் வந்து குவிந்து உள்ளனர். அவர்கள் விசில் அடித்தும் பலத்த கரகோஷம் எழுப்பியும், வீரர்களை உற்சாகப்படுத்திக் கொண்டே உள்ளனர்.

வாடிவாசல் வழியாக வரும் சில காளைகள், களத்தில் நின்று அங்கும், இங்கும் திரும்பி வீரர்களை விரட்டவும் செய்கிறது.

போட்டியை முன்னிட்டு, அவனியாபுரம் பகுதியில் தற்காலிக மருத்துவமனைகள் அமைக்கப்பட்டுள்ளன. மருத்துவ சிகிச்சை அளிக்க மருத்துவர்கள், செவிலியர்கள் தயார் நிலையில் உள்ளனர். 20 ஆம்புலன்ஸ்கள், 2 கால்நடை ஆம்புலன்ஸ் மற்றும் தீயணைப்பு படை வீரர்கள் தயார் நிலையில் உள்ளனர். பாதுகாப்பு உள்பட பல்வேறு ஏற்பாடுகள் சிறப்பாக செய்யப்பட்டு உள்ளது.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *